640 கிலோ மீட்டர்ல இருக்கு..! எப்போ மழை? எவ்வளவு வேகத்தில் காற்று வீசப்போகிறது?

231 0

வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென் கிழக்கே 640 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல்:

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடதமிழ்நாடு – புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும் இந்த புயல் காரணமாக தமிழ்நாடு கடலோர பகுதிகளில் இன்று முதல் 10 ஆம் தேதி வரை மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல் 70 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

 

மழை எப்போது?

மாண்டஸ் புயல் காரணமாக இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையிலும் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

840 விமானங்கள் வாங்க ஏர் இந்தியா ‘ஆர்டர்’: 17 ஆண்டுகளில் இதுவே முதல் தடவை

Posted by - February 17, 2023 0
புதுடெல்லி : மத்திய பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டாடா குழுமம் விலைக்கு வாங்கியது. இந்தநிலையில், ஏர் இந்தியாவை…

BSNL-க்கு புயல் வேகம்.. 3 மாதத்துல 36 லட்சம்.. 4ஜி மகிமை.. சிம் கார்டு வாங்கியாச்சா.. குஷியில் கஸ்டமர்கள்!

Posted by - December 20, 2024 0
அங்க அடிச்சா.. இங்க வலிக்கும்.. இந்த டயலாக் இப்போது பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்துக்கு பக்காவாக பொருந்திவிட்டது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் டெலிகாம்…

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் திடீர் தீ – யாருக்கும் பாதிப்பில்லை என மந்திரி டுவீட்

Posted by - June 15, 2023 0
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று இரவு 9 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விமான நிலையத்தின் 3சி…

தொடர் இருமல் மற்றும் சளி உள்ளதா..? ஒருவேளை இந்த நோய் காரணமாக இருக்கலாம்

Posted by - December 3, 2024 0
பருவகால ஒவ்வாமை, மாசுபடுத்திகள் அனைத்தும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. நீங்கள் தொடர்ந்து இருமல் மற்றும் சளியை அனுபவிக்கிறீர்களா? இது எளிதாக குணமாகவில்லையா? இது மற்றொரு நுரையீரல்…

குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொன்ற காதலி…!!

Posted by - April 17, 2023 0
குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலியே காதலனைக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர்  சஞ்சீவ் குமார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *