aiadmk eps

ADMK: சிவி சண்முகம் மட்டும் வேண்டாம்..

115 0

எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி எம்எல்ஏ-க்கள் மீண்டும் அவரது அணிக்கே தாவ தயாராகி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தவெக காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை விஜய் அமைத்துள்ளார். விஜய் ஆட்சியமைக்க அவர்களின் ஆதரவே போதுமாக உள்ள நிலையில், சிவி சண்முகம் – எஸ்பி வேலுமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏ-க்கள் தாங்களும் தவெக ஆட்சியமைய ஆதரவு அளித்தனர்.

கலக்கத்தில் சிவி சண்முகம் ஆதரவு எம்எல்ஏ-க்கள்:

அவர்கள் ஆதரவு அளித்ததன் உண்மையான நோக்கமே அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்பதே ஆகும். ஆனால், தற்போது தவெக அமைச்சரவையில் எந்த இடமும் கிடைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த சூழலில், எஸ்பி வேலுமணி சிவி சண்முகத்தை நம்பி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களமிறங்கிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கதிகலங்கி உள்ளனர்.

இவர்கள் தற்போது எடப்பாடி பழனிசாமி பக்கம் செல்ல தயாராக உள்ளனர். அவர்களை ஏற்கனவே தன் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி தேர்தல் செலவை ஏற்பது உள்ளிட்ட பல்வேறு உத்திரவாதங்களை அளித்திருந்தார். சட்டமன்ற அதிமுக தலைவர் பதவியை தக்கவைக்கவும், பொதுச்செயலாளர் பதவியை தக்கவைக்கவும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு எம்எல்ஏ-க்களின் ஆதரவும் அவசியம் ஆகும். இதனால், அவர்களை தன் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார்.

சிவி சண்முகத்திற்கு மட்டும் நோ:

அனைவரையும் தன் பக்கம் இழுக்க எடப்பாடி பழனிசாமி இழுக்க தயாராக இருந்தாலும், சிவி சண்முகத்தை மட்டும் ஏற்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை என்று தெரிய வந்துள்ளது. திமுக-வுடன் கூட்டணி அமைக்க முயற்சித்தார் என்று பொதுவெளியில் குற்றம் சாட்டியது, தொடர் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமிதான் காரணம் என்றது, பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிசாமியின் பொதுச்செயலாளர் பதவியை பறிக்க முயற்சித்தது என்ற பல விவகாரங்களை பத்திரிகையாளர் சந்திப்பில் சிவி சண்முகம் போட்டு உடைத்தது அவருக்கு மிகப்பெரிய அதிருப்தியையும், ஆதங்கத்தையும் சிவி சண்முகம் மீது ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து காத்திருக்கும் சம்பவங்கள்:

மேலும், பல மாவட்டங்களுக்கும் புதிய மாவட்டச் செயலாளர்களை நியமித்துள்ள எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் இடம் கிடைக்காத விரக்தியில் இருக்கும் தனது எதிர்ப்பு எம்எல்ஏ-க்களையும் தன் பக்கம் இழுத்து தனது பலத்தை மீண்டும் காட்டவும், கட்சிக்கு ஒற்றைத் தலைமையாக தன்னை நிலைநிறுத்தவும் காய் நகர்த்த உள்ளார். இனி வரும் நாட்களில் அதிமுக-வில் பல்வேறு மாற்றங்களை அடுத்தடுத்து காணலாம் என்பது மட்டும் உறுதியாகும்.

Related Post

annamalai new party

பதிவுக்கு காத்திருக்கும் அண்ணாமலையின் புதிய கட்சி!

Posted by - June 4, 2026 0
தனது பிறந்த நாளான இன்று (ஜூன் 4) அண்​ணா​மலை தனிக்​கட்சி அறி​விப்பை வெளி​யிடப் போகிறார் என்​பது பரபரப்​புச் செய்​தி​யாக இருக்​கும் நிலை​யில், “அவர் தனிக்​கட்சி முடி​வில் தான்…
s 2

நடிகைகள் என்ன உங்க சொத்தா.. நயன்தாரா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை குஷ்பு

Posted by - March 18, 2026 0
சமீப காலமாக அரசியல் பிரபலங்கள் பலரும் சினிமா நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு கொச்சையாக பேசுவது அதிகரித்து வருகிறது. விஜய் த்ரிஷா வீட்டை விட்டு வெளியில் வர வேண்டும்…

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

Posted by - October 11, 2025 0
நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போய் கிடப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,   பகுஜன்…
Generated Image January 13 2026 8 16PM

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

Posted by - January 13, 2026 0
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வழங்க வேண்டும் என்று சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்!-ஆதவ் அர்ஜுனா த.வெ.க .

Posted by - July 18, 2025 0
அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்! #Aadhavarjuna #TVK #Teachers_Protest #Tamilnadu_CM #pixeltv  #TamilNews #pixelmedia           குற்றவாளிகளைப் போல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *