TVK Vijay

TVK Vijay: வடக்கும் எனக்கு தான், கொங்கும் எனக்கு தான்..! (அ)திமுகவின் கோட்டைகளை குறிவைத்த CM விஜய்

62 0

TVK Vijay: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் தங்களது கோட்டைகளாக கருதும், வடக்கு மற்றும் கொங்கு மாவட்டங்களை முழுமையாக கையகப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளாராம்.

TVK Vijay: திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளும் தங்களது கோட்டைகள் என்ற நிலையை மாற்றவே, வடக்கு மற்றும் கொங்கு மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்தும் அளிக்கப்பட்டுள்ளதாம்.

தவெக வைக்கும் பெரிய இலக்கு..!

தமிழ்நாட்டில் அறுபது ஆண்டு காலமாக மாறி மாறி ஆளுங்கட்சிகளாக இருந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டையும் ஓரங்கட்சி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக விஜய் தலைமையில் உதயமான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்துள்ளது. இதனை ஏதோ ஒரு முறை நடந்துவிட்ட மேஜிக்காக இல்லாமல், திராவிட கட்சிகளை மிஞ்சிய வலுவான கட்சியமைக்க வேண்டும் என்பதில் தவெக தலைமை தீவிரமாக உள்ளதாம். இதற்காக கிடைத்து இருக்கும் ஆட்சி அதிகாரத்தின் மூலம் மக்களிடையே நல்ல மதிப்பை பெறுவதோடு, அதே அதிகாரத்தை பயன்படுத்தி கட்சியை வலுவாக கட்டமைக்கவும் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாம். அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளின் மிகப்பெரும் கோட்டையாக கருதப்படும் வடக்கு மற்றும் கொங்கு மண்டலங்களை கைப்பற்ற தவெக திட்டமிட்டுள்ளதாம். இதன் மூலம் மிகப்பெரிய வாக்கு வங்கியை உறுதி செய்ய முடியும் என பனையூர் தரப்பு நம்புகிறதாம்.

 

திமுக கோட்டைக்கு சிக்கல்:

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவில் திமுக ஆட்சி அமைப்பதற்கு வடமாவட்டங்களில் கிடைத்த வெற்றி மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக சென்னையில் உள்ள 16 தொகுதிகளையும் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி கைப்பற்றி இருந்தது. வடக்கு மாவட்டங்களில் இருந்த 70 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. அதே நிலையை தான் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் எட்டியுள்ளது. தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 14 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், கடலூர், திருப்பத்தூர் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 74 தொகுதிகளில் 42 தொகுதிகளை வென்று அசத்தியுள்ளது. திமுக வெறும் 14 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருந்தது. இதன் மூலம் திமுகவின் கோட்டையிலேயே மிகப்பெரிய தாக்கத்தை தவெக ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையை மேலும் வலுப்படுத்தும் விதமாகவே சென்னைக்கு 7, காஞ்சிபுரம் 2, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு தலா 1 அமைச்சர் என, வட மாவட்டங்களுக்கு மட்டும் 13 அமைச்சர் பதவிகளை முதலமைச்சர் விஜய் ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போதே, கட்சி கட்டமைப்பை வடமாவட்டங்களில் மேலும் வலுவாக்க தவெக முனைப்பு காட்டுகிறதாம்.

கொங்கு மண்டலத்தை முழுமையாக வசப்படுத்த இலக்கு

தேர்தல்கலில் எப்போதும் திமுகவிற்கு வடமாவட்டங்கள் கைகொடுப்பது போலவே, அதிமுகவிற்கு கொங்கு மண்டலம் வலுவான பகுதியாக கருதப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணி வென்ற 75 இடங்களில், 43 தொகுதிகள் கொங்கு பகுதியில் இருந்து மட்டுமே கிடைத்தன. அதேநேரம் 2026 தேர்தலில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, தருமபுரி, திண்டுக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 68 தொகுதிகளில் இந்த முறை 24 தொகுதிகளை மட்டுமே அதிமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

அதேநேரம், புதியதாக வந்த தமிழக வெற்றிக் கழகம் 29 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அதாவது கொங்கு மண்டலத்தின் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனை தங்களுக்கான வலுவான பிடிமாணமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைத்தே தற்போது, நாமக்கல் மாவட்டத்திற்கு 3 அமைச்சர்கள் , திருப்பூர், ஈ7ரோடு, சேலம் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு அமைச்சர்கள் என, கொங்கு மண்டலத்திற்கு மட்டுமே 7 அமைச்சர் பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வாக்கு வங்கியை நோக்கிய பயணம்:

தேர்தலில் தோற்றாலும், வென்றாலும் வலுவான கட்சியாக நிலைக்க ஒரு கட்சிக்கு நிலையான வாக்கு வங்கி என்பது அவசியம். திமுகவிற்கு வடமாவட்டங்களும், அதிமுகவிற்கு கொங்கு மண்டலமும் அத்தகைய வாக்கு வங்கிகளாக விளங்கி வருகின்றன. அதில் விஜய் இந்த முறை மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அதோடு மேலும் தீவிரமாக முயன்று திராவிட கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் தனக்கான செல்வாக்கையும், வாக்கு வங்கியையும் உருவாக்க முயன்று வருகிறார். இதன் மூலம் இதுநாள் வரை இரண்டு கட்சிகளை மட்டுமே மையாக கொண்டு நகர்ந்து வந்த தமிழ்நாடு அரசியல், இனி பனையூர் தரப்பு இல்லாமல் நகராது என்ற நிலையை ஏற்படுத்த விஜய் காய் நகர்த்தி வருகிறாராம். இதற்காக அமைச்சரவையில் முக்கியத்தும் அளித்து கட்சியை வலுப்படுத்தும் முயற்சி எப்படி பலனளிக்கிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Post

tvk

CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க

Posted by - June 1, 2026 0
CM Vijay Speech: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று அங்கு நடந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், தான் அணியும் கோட் சூட்…
Gemini Generated Image mdnoecmdnoecmdno

குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் – பழனிசாமி உறுதி

Posted by - April 9, 2026 0
குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ அதிமுக ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்று சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார். தேர்தல் அறிவிக்கப்பட்ட…
ops 2

திமுகவில் இணைந்த அதிமுக மாஜி முதலமைச்சர்

Posted by - February 27, 2026 0
அதிமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம், அக்கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் தனித்து செயல்பட்டு வந்தவர், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில்…

”நீர்த்துப் போன மாண்டஸ் புயல்.. பில்டப் செய்யும் ஸ்டாலின்”- எடப்பாடி பழனிசாமி பரபர பேச்சு!

Posted by - December 13, 2022 0
நீர்த்துப் போன மாண்டஸ் புயலை பேரிடர் என பில்டப் செய்வதா என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பூர் குண்டடம் பகுதியில், மாற்று கட்சியினர் அதிமுகவில்…

அப்செட்டில் ராமதாஸ் – தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் – இன்று பாமக பொதுக்குழு

Posted by - August 9, 2025 0
அன்புமனி அறிவித்தபடி பாமக பொதுக்குழுவை கூட்ட எந்த தடையு,ம் விதிக்க முடியாது என, ராமதாஸின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உட்கட்சி விவகாரம் தொடர்பான ராமதாஸ் சிவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *