cmvijayofficers

CM Vijay: ”ஆளுங்கட்சின்னு பாக்காதிங்க, தவெகவினரை கூட தூக்குங்க” – அதிகாரிகளுக்கு விஜய் கண்டிப்பு

76 0

CM Vijay Drugs Case: போதை பொருட்களை ஒழிக்கும் விவகாரத்தில் தவெகவினர் சிக்கினால் கூட கடுமையான நடவடிக்கை எடுக்க, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளாராம்.

CM Vijay Drugs Case: போதை பொருட்களை ஒழிக்கும் விவகாரத்தில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாத் எனவும் முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியுள்ளாராம்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு

தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்த பிறகு தான் சட்ட-ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், கடந்த ஆட்சியாளர்கள் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதன் விளைவையே, தமிழ்நாடு தற்போது சந்தித்து வருகிறது என தவெக

”அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படலாம்”

நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பேசிய முதலமைச்சர், “சட்டம் ஒழுங்கு  பிரச்னையை பொறுத்தவரை அதிகாரிகள் சட்டத்தின் அடிப்படையில் சுதந்திரமாக முடிவு செய்யலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சமூகத்தி எவ்வளவு பெரிய நபராக இருந்தாலும், அவர் மீது நடவடிக்கை எடுத்து விரைந்து தண்டனையை பெற்றுத்தர வேண்டும். அதேநேரம், இதனால் குற்றவாளிகள் யாரும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்.

அரசு பேசி வருகிறது. அதேநேரம், பல்வேறு நடவடிக்கைகள முடுக்கிவிட்டுள்ளதாகவும், விரைவில் போதைப்பொருள் பரவை கட்டுப்படுத்தி, சட்ட-ஒழுங்கை நாட்டிற்கே முன்னுதாரணமாக மாற்றுவோம் எனவும் சூளுரைத்து வருகிறார்கள். இந்நிலையில் தான் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது.

பெண்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்:

மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் சட்ட-ஒழுங்கு கூட்டத்தை நடத்தி, தொடர்புடைய துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். முக்கிய வழக்குகளில் சட்ட-வல்லுநர்களை கலந்தாலோசித்து குற்றவாளிகள் தப்பிவிடாத வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்பை 100 சதவிகிதம் உறுதி செய்வதில் எந்த சமரசமும் கூடாது. இதற்காக உரிய சிறப்பு ஏற்பாடுகளை செய்வதோடு, மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் துல்லியமாக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளுக்கு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் அங்கு சோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

”கட்சி பாகுபாடு கூடாது”

போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனை வாங்கி தருவதை உறுதி செய்ய வேண்டும். சாதி வேறுபாடுகளை தாண்டி சாதிக்கிற மாணவர்களை உருவாக்குகிற போது தான், கல்வி கொண்டாட்டமாக இருக்கும். அதை கண்காணிப்பதும் அதிகாரிகளின் கைகளில் தான் உள்ளது. வெளிப்படைத்தன்மையே அரசின் முதன்மை நோக்கம். எனவே, மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்படலாம். தனி நபர்களின் தலையீடு இருக்காது. ஆளுங்கட்சி என்பது போன்ற எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது. தவறு செய்வது யாராக இருந்தாலும் நேர்மையான நடவடிக்கையை முன்னெடுங்கள். கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கள் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்” என aதிகாரிகளுக்கு இடையே முதலமைச்சர் விஜய் கண்டிப்பாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

கருணாநிதி கைது விவகாரத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்!

Posted by - November 23, 2023 0
திருவனந்தபுரம்: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (வயது 96) முதுமை காரணமாக கேரளாவில் இன்று காலமானார். நாட்டின் உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர்…
tamil news

CM Vijay: உதயநிதிக்கு நோ, ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு புன்னகைத்தபடி வணக்கம் சொன்ன விஜய் – வீடியோ வைரல்

Posted by - May 11, 2026 0
CM Vijay EPS: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தவிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு முதலமைச்சர் விஜய் வணக்கம் சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.…

தமிழ்நாடு ஆளுநர், இலச்சினை.. திருவள்ளுவர் ஆண்டு.. ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ்

Posted by - January 23, 2023 0
வரும் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் வரவேற்பு அழைப்பிதழ் பேசுபொருளாகியுள்ளது. சென்னையில் ஜனவரி 4ஆம் தேதி நடந்த நிகழ்வு ஒன்றில்,…

பூண்டு விலை… இல்லத்தரசிகள் அதிர்ச்சி…

Posted by - February 16, 2024 0
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அன்றாட உணவின் அத்யாவசிய காய்கறிகளான தக்காளி ,சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. Garlic Price இதனையடுத்து…

தமிழக அரசு பஸ்கள் இயங்கவில்லை- பயணிகள் அவதி

Posted by - January 9, 2024 0
புதுச்சேரி: புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *