eps

EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!

50 0

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி, இடைத்தேர்தலில் அதிமுக-வின் பலத்தை காட்ட வேண்டிய சூழல் உருவாகியுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மொத்த தமிழகத்தையும்  புரட்டிப்போடும் அளவிற்கு அமைந்துள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக படுதோல்வி அடைந்தாலும், அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது முன்னாள் ஆளுங்கட்சியான அதிமுக-வே ஆகும்.

விரைவில் இடைத்தேர்தல்:

கடந்த தேர்தலில் ஆட்சியை இழந்த அவர்கள், இந்த தேர்தலில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தையும் இழுந்துள்ளனர். இதுமட்டுமின்றி, இந்த தேர்தலி்ல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட அதிமுக-வின் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக வெற்றிக் கழகம் தன் பக்கம் இழுத்துள்ளது. இதனால், தமிழ்நாடு திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்ந்து 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் தவெக – திமுக ஆகிய கட்சிகளை வீழ்த்தி இழந்த தொகுதியுடன் சேர்த்து திருச்சி கிழக்கையும் கைப்பற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். ஆனால், கள சூழல் அதிமுக-விற்கு சாதகமாக இல்லாமல் இருப்பதாகவே கூறப்படுகிறது.

போட்டியிடுமா? தவிர்ப்பார்களா?

எதிர்தரப்பு எம்எல்ஏ-க்கள் பெரு்ம்பாலும் தன்வசம் வந்துள்ள நிலையில், பொதுச்செயலாளர் பதவியை தக்கவைப்பதுடன் அதிமுக சட்டமன்ற தலைவராகவும் நீடிக்க உள்ளார். இந்த இடைத்தேர்தலில் எப்படியேனும் வெற்றி பெற்று தனது இழந்த சட்டமன்ற உறுப்பினர்களை பெறுவதுடன் தனது தலைமைக்கு ஒரு சவாலாகவும் இதை எடுத்துச் செயல்படுத்த உள்ளார்.

கட்சியில் பல மாவட்டங்களில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்ட்டிருக்கும் நிலையில், இடைத்தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால், பழைய நிர்வாகிகள் ஒற்றுமையுடன் பணியாற்றுவார்களா? புதியவர்கள் திறம்பட செயல்படுவார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திமுக இந்த தேர்தலை கண்டிப்பாக எதிர்கொள்ள உள்ள நிலையில், இந்த இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தால் எடப்பாடி பழனிசாமியின் தலைமை குறித்து மேலும் கேள்வி எழும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நிகழும் சூழலை தவிர்க்க வேண்டுமென்றால் இந்த இடைத்தேர்தலை எடப்பாடி பழனிசாமி தவிர்க்கவும் வாய்ப்பு உண்டு.

உள்ளாட்சித் தேர்தல்:

தொடர் தோல்விகளால் அதிமுக துவண்டு வரும் சூழலில், இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முதன்முறையாக தவெக களமிறங்க உள்ளது. உள்ளாட்சி அளவில் திமுக – அதிமுக பலமாக உள்ள நிலையில், அங்கு அதிமுக-வின் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்.

மிகுந்த இக்கட்டான, நெருக்கடியான காலகட்டத்தில் சிக்கியிருக்கும் அதிமுக-வை எடப்பாடி பழனிசாமி எப்படி மீ்ட்கப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Related Post

Generated Image January 09 2026 10 54AM

ஜனநாயகனை விடுங்கப்பா.. அரசியலை பார்ப்போம்- விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Posted by - January 9, 2026 0
ஜனநாயகன் திரைப்படம் இன்று வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். ஜனநாயகனுக்கு செக் வைத்த சென்சார்…

வருகிற நாடாளுமன்றத் தேர்தல் 4வது போர் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Posted by - May 31, 2023 0
சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை – சகோதரத்துவத்தை பேணிகாப்போம் என உரையாற்றினோம் அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் நான்காவது போர் என விளையாட்டு…

மக்களே! ரூபாய் 3 ஆயிரம்.. பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வழங்க அரசு முடிவு?

Posted by - December 10, 2025 0
2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூபாய் 3 ஆயிம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில்…
tvk vijay 3

TTV Dhinakaran: ”விஜயின் இமேஜை உடைக்கணும்” போலி கடிதம் கொடுத்ததா தவெக? – டிடிவி தினகரனின் புகரால் பரபரப்பு

Posted by - May 9, 2026 0
TTV Dhinakaran TVK Vijay: தவெக தலைவர் விஜயின் இமேஜை உடைக்கும் வகையில், அவர் குதிரை பேரம் நடத்துவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். TTV…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *