tvkvijaycm

பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவில் தவெக நிர்வாகியை சேர்ப்பதா? – கல்வியாளர்கள், ஆசிரியர்கள் எதிர்ப்பால் சர்ச்சை

57 0

சென்னை: பள்ளி பாடத்​திட்ட வடிவ​மைப்​புக் குழு​வில் தவெக நிர்​வாகி சேர்க்​கப்​பட்​டுள்ள விவ​காரம் தற்​போது பெரும் சர்ச்​சை​யாகி​யுள்​ளது.

தமிழக பள்​ளிக் கல்​வி​யில் 1 முதல் பிளஸ் 2 வகுப்​பு​களுக்​கான பாடத்​திட்​டங்​களை மாற்​றியமைக்க கடந்த திமுக ஆட்​சி​யில் பேராசிரியர் சுல்​தான் அகமது இஸ்​மா​யில் தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்​டதை அடுத்​து, பள்ளி பாடத்​திட்ட வடிவ​மைப்​புக் குழுவை மாற்​றி, புதிய குழு அமைக்​கப்​படு​வ​தாக பள்​ளிக்​கல்​வித் துறை நேற்று முன்​தினம் அறி​வித்​தது.

அதன்​படி இஸ்ரோ முன்​னாள் விஞ்​ஞானி மயில்​சாமி அண்​ணாதுரை தலை​மை​யில் 17 பேர் கொண்ட குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த புதிய குழு​வில் தவெக செய்​தித் தொடர்​பாள​ராக உள்ள கே.எஸ்​.டி. அனந்த்ஜித் மக்​கியா உறுப்​பின​ராக இடம் பெற்​றுள்​ளார். அரசி​யல் பின்​புலம் கொண்​ட​வரை எப்​படி பாடத்​திட்​டக் குழு​வில் இடம்​பெறலாம் என்​றும், இந்த குழு​வுக்கு அனு​மதி அளித்​தது யார் எனவும் கல்​வி​யாளர்​கள், ஆசிரியர்​கள் கேள்வி எழுப்​பி​யுள்​ளனர். மேலும், அவரை குழு​வில் இருந்து நீக்​க​வும் கோரிக்​கைகள் வலுத்​துள்​ளன.

அதே​போல், முந்​தைய குழுத் தலை​வர் சுல்​தான் அகமது இஸ்​மா​யில் நீக்​கப்​பட்ட விவ​கார​மும் சர்ச்​சை​யாகி​யுள்​ளது. இதுகுறித்து பேராசிரியர் சுல்​தானிடம் கேட்​ட​போது அவர் கூறியது: ஆட்சி மாற்​றம் காரண​மாக நான் பதவி வில​கிய​தாக வெளி​யான தகவல் தவறானது. புதி​தாக தயாரித்த சில பாடநூல்​களின் பிர​தியை முன்​னாள் அமைச்​சர் அன்​பில் மகேஸிடம் சென்று வழங்​கினேன். அந்​தப் புகைப்​படம் ட்விட்​டரில் வெளி​யானதை வைத்​து, நான் குறிப்​பிட்ட அரசி​யல் கட்​சிக்கு (தி​முக) நெருக்​க​மானவன் என்ற தவறான எண்​ணம் உரு​வாகி​விட்​டது.

ஜெயலலி​தா, கருணாநி​தி,ஸ்டா​லின், பழனி​சாமி என பலரின் ஆட்​சி​யிலும் நான் பணி​யாற்​றி​யுள்​ளேன். எனக்கு எந்த அரசி​யல் சார்​பும் இல்​லை. புதிய தலை​வ​ராகப் பொறுப்​பேற்​ற மயில்​சாமி அண்​ணாதுரைக்கு வாழ்த்​துகள். அதே​நேரத்​தில், நாங்​கள் தொடங்​கிய சிறந்த கல்விக் கொள்​கைகளை அவர் தொடர வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

Related Post

”பாஜக மேலிடம் சொல்லித்தான் அண்ணாமலை பேசுகிறாரா?” கேள்விகளை அடுக்கிய ஜெயக்குமார்

Posted by - September 18, 2023 0
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்…

வலுவிழந்த மாண்டஸ் புயல்… கரையை கடக்கும் போது சீறுமா..?

Posted by - December 9, 2022 0
Cyclone Mandous | வங்கக் கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் தீவிர புயலிலிருந்து புயலாக வலுவிழந்து உள்ளது. மாண்டஸ் தீவிர புயல் இன்று காலை வலுவிழந்து தற்போது சென்னையில் தெற்கு கிழக்கு…

3 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் இருக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவு

Posted by - December 29, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்னும் முழுமையாக…

சென்னையில் 10 ஆயிரம் பேர்களை ஏமாற்றி ரூ.800 கோடி மெகா மோசடி- 3 முக்கிய பெண் குற்றவாளிகள் கைது

Posted by - February 16, 2023 0
சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் ஹிஜாவு அசோசியேட்ஸ் என்ற தொழில் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்த நிறுவனம், பல்வேறு தொழில்களை செய்து வருவதாகவும், தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால்…

வந்தாச்சு UPI.. தபால் நிலையங்களிலும் இனி டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்யலாம்.. ஆகஸ்ட்டில் அமல்

Posted by - June 28, 2025 0
சென்னை: வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தபால் அலுவலகங்களில் ‛இந்தியா போஸ்ட்’ சார்பில் விரைவில் யுபிஐ மூலம் பணம் வழங்கும் முறை செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *