tvk vijay e1777957622993

TN Election Result 2026: சென்னையின் 16 எம்.எல்.ஏக்கள் யார்? வாக்கு வித்தியாசம்? மிகப்பெரிய, சிறிய வெற்றியாளர்கள்

79 0

TN Election Result 2026 Chennai MLAs: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

TN Election Result 2026 Chennai MLAs:  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவில் தலைநகர் சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

திமுகவின் கோட்டையை கைப்பற்றிய திமுக

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. குறிப்பாக அந்த கட்சியின் கோட்டையாக கருதப்படும் மாநில தலைநகர் சென்னையிலேயே பெரும்பாலான தொகுதிகளை, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கைப்பற்றியது மிகப்பெரிய ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி எதுவானாலும், தலைநகர் சென்னை தங்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதனை முதல் தேர்தலிலேயே சாதித்ததோடு, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் தா.மோ. அன்பரசன் போன்றோரையே வீழ்த்தி தவெக ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

 

14 இடங்களை வென்ற தவெக, 2 இடங்களுக்கு சரிந்த திமுக

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தலைநகர் சென்னையில் 16 இடங்களையும் கைப்பற்றி இருந்தது. ஆனால் இந்த தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி மற்றும் சேகர்பாபு போட்டியிட்ட துறைமுகம் ஆகிய இரண்டு தொகுதிகளை தவிர, மற்ற அனைத்து இடங்களில் திமுக தோல்வியையே சந்தித்துள்ளது. விஜய் போட்டியிட்ட பெரம்பூர் உட்ப்ட 14 இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று,  சென்னை திமுகவின் கோட்டை என்ற பிம்பத்தை தவிடுபொடியாக்கியுள்ளது.

சென்னையின் 16 எம்.எல்.ஏக்கள் யார்?

தொகுதிகள்வெற்றியாளர்கள்2வது இடம் வாக்கு வித்தியாசம்
கொளத்தூர்வி.எஸ். பாபு (தவெக)மு.க. ஸ்டாலின் (திமுக)8,795
திரு.வி.க. நகர்எம்.ஆர். பல்லவி (தவெக)கே.எஸ். ரவிச்சந்திரன் (திமுக)22,333
அண்ணா நகர்வி.கே. ராம்குமார் (தவெக)சிற்றரசு (திமுக)21363
ஆயிரம் விளக்குஜே.சி.டி. பிரபாகர் (தவெக)டாக்டர் எழிலன் (திமுக)15,141
எழும்பூர்ராஜ்மோகன் (தவெக)தமிழன் பிரசன்னா (திமுக)10,804
வில்லிவாக்கம்ஆதவ் அர்ஜுனா (தவெக)கார்த்திக் மோகன் (திமுக)17,302
தியாகராய நகர்என்.ஆனந்த் (தவெக)சத்தியநாராயணன் (அதிமுக)13,027
மயிலாப்பூர்பி. வெங்கடரமணன் (தவெக)த. வேலு (திமுக)28,972
வேளச்சேரிஆர். குமார் (தவெக)எம்.கே. அசோக் (அதிமுக)33,305
விருகம்பாக்கம்சபரிநாதன் (தவெக)பிரபாகர ராஜா (திமுக)27,086
சைதாப்பேட்டைஅருள் பிரகாசம் (தவெக)மா. சுப்பிரமணியன் (திமுக)28,514
பெரம்பூர்ஜோசப் விஜய் (தவெக)ஆர்.டி. சேகர் (திமுக)53,715
ராயபுரம்விஜய் தாமு (தவெக)சுபேர் கான் (திமுக)14,249
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணிஉதயநிதி ஸ்டாலின் (திமுக)டி. செல்வம் (தவெக)7,140
துறைமுகம்சேகர் பாபு (திமுக)சினோரா அசோக் (தவெக)11,750
ஆர்.கே. நகர்மரிய வில்சன் (தவெக)ஜான் எபனேசர் (திமுக)49,668

மிகபெரிய வெற்றி யாருக்கு?

சென்னை மாவட்டத்தில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளராக, பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய் திகழ்கிறார். அதன்படி, 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் சிட்டிங் எம்.எல்.ஏவை வீழ்த்தியுள்ளார். மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை வேட்பாளராக, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்ட உதயநிதி உள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரை வெறும் 7 ஆயிரத்து 140 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.

Related Post

dmk

இன்று தான் கடைசி.!

Posted by - March 4, 2026 0
ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை முடிவடையவுள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுகிறதா.? இல்லையா என்பது இன்று மாலைக்குள் முடிவு வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது.…
jothimani

Cong TVK: தவெகவை மொத்தமாக ஆதரிப்பதா?

Posted by - May 26, 2026 0
TVK Cong Jothimani: தவெகவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் குதிரை பேரத்தை நியாயப்படுத்த முடியாது என, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். TVK Cong Jothimani: தவெகவின்…
Generated Image February 07 2026 10 14AM

பிரேமலதாவின் எதிர்பார்ப்பு தான் என்ன?

Posted by - February 7, 2026 0
6 சீட் தருவதாகச் சொல்லும் அறிவாலயமா… அல்லது 7 சீட் தருவதாகச் சொல்லும் கமலாலயமா என்று முடிவெடுக்க முடியாத நிலையில், ‘நாங்களும் ஆட்டத்தில் இருக்கிறோம்’ என்பதைக் காட்ட…
Generated Image March 08 2026 7 08PM

கூட்டணி வாய்ப்புகளை கோட்டை விட்ட தவெக: ஆதவ் மீது ஆதங்கத்தைக் கொட்டிய விஜய்

Posted by - March 8, 2026 0
தவெக-வை நெருங்கி வந்த கட்சிகளுடன் கூட்டணியை பேசி முடிக்காமல், முறுக்கி கொண்டிருந்த ஆதவ் அர்ஜுனா மீது அதன் தலைவர் விஜய் அதிருப்தியில் இருப்பதாக பனையூர் வட்டாரங்கள் சொல்கின்றன.…
edapadi palanisamy

EPS Statement: “அதிமுக ஒரு ஃபீனிக்ஸ் பறவை, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும்“ இபிஎஸ் அறிக்கை

Posted by - May 5, 2026 0
TN Election Results 2026: சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஃபீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீண்டும் வெற்றிப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *