tvk vijay 3

TTV Dhinakaran: ”விஜயின் இமேஜை உடைக்கணும்” போலி கடிதம் கொடுத்ததா தவெக? – டிடிவி தினகரனின் புகரால் பரபரப்பு

92 0

TTV Dhinakaran TVK Vijay: தவெக தலைவர் விஜயின் இமேஜை உடைக்கும் வகையில், அவர் குதிரை பேரம் நடத்துவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

TTV Dhinakaran TVK Vijay: தவெக தலைவர் விஜய் அமமுக எம்.எல்.ஏவின் ஆதரவு இருப்பதாக, போலி கடிதம் வழங்கியதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் குற்றச்சாட்டு:

குதிரை பேரம் என்பதை வைத்து முதல்முறையாக விஜயின் அரசியல் இமேஜை நொறுக்கும் வகையில் மாஸ்டர் ப்ளான் ஒன்றை முடித்துள்ளார் டிடிவி தினகரன். நேராக ஆளுநர் மாளிகைக்கே போய் விஜய்க்கு குடைச்சல் கொடுத்துள்ளதால், ஆட்சிக்கு ஆபத்து வருமா என்ற நிலை உருவாகியுள்ளது. 108 இடங்களை கைப்பற்றிய தவெக, தனிப்பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி அமைப்பதற்கு போராடி வருகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் ஆதரவு கொடுத்த நிலையில், இன்னும் 2 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. விசிக தரப்பில் இருந்து விஜய்க்கு இன்னும் க்ரீன் சிக்னல் வராமல் இருக்கிறது. இந்த நேரத்தில் அதிமுக கூட்டணி MLA-க்களிடம் விஜய் குதிரை பேரம் நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வைரலாகும் வீடியோ:

அமமுக MLA காமராஜ் தவெகவுக்கு ஆதரவு தருவதாக கடிதம் ஒன்று வெளியானது. MLA-வை தொடர்பு கொள்ள முடியாமல் போனதும் பதற்றமடைந்த டிடிவி தினகரன், வேறு யாருக்கும் சொல்லாமல் நேரடியாக ஆளுநர் மாளிகைக்கு சென்று மாஸ்டர் ப்ளான் ஒன்றை நிறைவேற்றியுள்ளார். அதாவது அமமுகவின் ஆதரவு இபிஎஸ்-க்கு தான் என்று ஆளுநரிடம் கடிதம் ஒன்றை கொடுத்தார். வெளியே வந்து MLA-வை தொடர்பு கொள்ள முடியவில்லை, விஜய் குதிரை பேரம் நடத்துகிறதா என சந்தேகம் வருவதாக போட்டுடைத்தார்.

ஆளுநர் மாளிகையில் இருந்தும் தவெகவை தொடர்பு கொண்டு, அமமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு ஆதரவு தருவதாக சொல்கிறார், நீங்கள் எப்படி கடிதம் கொடுத்தீர்கள் என கேள்வி கேட்டதாக சொல்லப்படுகிறது. அடுத்த சில மணி நேரங்களிலேயே அமமுக MLA டிடிவி தினகரனுடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். தவெகவுக்கு ஆதரவு தருவதாக நான் கடிதம் கொடுக்கவே இல்லை, நானே இந்த செய்தியை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் என சொன்னார்.

விஜய்க்கு வந்த சிக்கல்

அதன்பிறகு அமமுக MLA கடிதத்தில் கையெழுத்து போட்ட வீடியோவை வெளியிட்டது தவெக. MLA தவெக பக்கம் சாய்ந்தது உண்மை தான் என்றும், டிடிவி தினகரன் ஆளுநரிடமே நேரடியாக போய்விட்டதால் ஆட்சிக்கு சிக்கல் வந்துவிடும் என தவெக தான் இந்த மூவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குதிரை பேரம் நடத்துவதாக விஜய்க்கு எதிராக டிடிவி தினகரன் காவல்நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். மேலும் IUML ஆதரவு கொடுத்ததாக தவெக போலியான கடிதம் ஒன்றை தயார் செய்ததாகவும் குற்றச்சாட்டு பரவி வருகிறது.

இதன்மூலம் விஜய் ஆட்சியமைப்பதற்கான நெருக்கடியான சூழலையும் உருவாக்கியுள்ளார் டிடிவி தினகரன். குதிரை பேரம் என்ற குற்றச்சாட்டை வைத்து விஜயை ஆட்சியமைக்க விடாமல் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வரும் அதிகாரமும் ஆளுநருக்கு இருக்கிறது. பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் விஜய்யின் அரசியல் இமேஜை உடைக்கும் வகையில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் டிடிவி தினகரன். இதனால் தமிழ்நாட்டு அரசியலில் அடுத்து நிகழப்போவது என்ன என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Post

விஜய் விரைவில் கரூர் வருகிறார்; டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கேட்டுள்ளோம் – தவெக நிர்வாகி பேட்டி

Posted by - October 8, 2025 0
கரூர்: “கரூரைச் சேர்ந்த 33 நபர்களின் உறவினர்களிடம் விஜய் வீடியோ கால் மூலமாக பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களை விரைவில் விஜய் நேரில் வந்து சந்திக்க உள்ளார். இது…
edapadi palanisamy

EPS Statement: “அதிமுக ஒரு ஃபீனிக்ஸ் பறவை, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும்“ இபிஎஸ் அறிக்கை

Posted by - May 5, 2026 0
TN Election Results 2026: சட்டமன்ற தேர்தல் முடிவுகளை அடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஃபீனிக்ஸ் பறவை போல் அதிமுக மீண்டும் வெற்றிப்…
tvk

CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க

Posted by - June 1, 2026 0
CM Vijay Speech: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று அங்கு நடந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், தான் அணியும் கோட் சூட்…

த.வெ.க முதல் மாநாட்டிற்கு இவங்க யாரும் வர வேணாம்.. விஜய் அதிரடி உத்தரவு

Posted by - October 21, 2024 0
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு! அந்த வரிசையில் தமிழக அரசியலில் விஜய் களமிறங்கியுள்ளார். இதுவரை அரசியலில் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காத அவர் பிப்ரவரியில் கட்சி ஆரம்பித்த…
Generated Image March 04 2026 6 06PM

70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்!

Posted by - March 4, 2026 0
அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாஜக தங்களிடம் 70 தொகுதிகளை ஒப்படைக்குமாறும், தாங்களே தொகுதிகளை பிரித்து கூட்டணி கட்சிகளுக்கு ஒப்படைக்கிறோம் என்று வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *