admk

TVK – AIADMK: திமுகவுக்கு கட்டம் கட்ட முடிவு… தவெகவுடன் இணையும் அதிமுக.. மெகா ட்விஸ்ட்!

40 0

திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விஜய் மாறியுள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தினால் நமக்கு குறைந்தபட்சம் வரும் காலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது இருக்கும் என அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் பலரும் கருதியுள்ளனர்.

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக திமுகவுக்கு எதிரான அலையில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கைகோர்க்க அதிமுக முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். தவெக ஆட்சியின் பதவியேற்பு விழா நாளை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் திமுக இம்முறை எதிர்க்கட்சியாகவும், அதிமுக 3ம் இடத்துக்கும் சென்றுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் திமுக 59 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக 47 இடங்களிலும், அதன் கூட்டணி 6 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது.

பெரும்பான்மையை நிரூபிக்க தவெக முடிவு

தமிழக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் விஜயிடம் 107 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். அவர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுள்ள நிலையில் ஒரு இடத்தை தவிர்த்தாலும் இன்னும் 10 பேரின் ஆதரவு தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேவையாக உள்ளது. இதனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கும், அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளிடமும் விஜய் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

கிட்டதட்ட விஜய்க்கு ஆதரவு கொடுப்பதில் மேற்குறிப்பிட்ட கட்சிகள் ஆர்வமுடன் உள்ளதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றது. விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பேன் என தெரிவித்திருப்பதால் அமைச்சரவையிலும் இந்த கட்சிகளுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தமிழ்நாடு இதுவரை காணாத அரசியல் காட்சிகளை பார்க்கப்போவது உறுதியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி

இந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் திமுக எதிர்ப்பை மட்டுமே கையில் எடுத்தார். அதிமுகவை பெரிதாக சீண்டவில்லை. எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விலை கொடுத்து வாங்கி விட்டதாக கூறி தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் விஜய் கடுமையாக விமர்சித்தார். தேர்தல் அறிவிப்பு தொடங்கிய ஆரம்பத்தில் விஜயுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி விரும்பினார். ஆனால் விஜய் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதால் அந்த முடிவு நிராகரிக்கப்பட்டது.

எனினும் எடப்பாடி பழனிசாமி முதலில் மிகவும் கணிவாகவே தவெகவை விமர்சித்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல கடுமையான கருத்துகளை தெரிவிக்க ஆரம்பித்தார். ஆனால் இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து விட்டது. எடப்பாடி பழனிசாமி அதிமுக முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் இருந்து பார்த்தால் இது அவரது 11வது தேர்தல் தோல்வியாகும். இதனால் எடப்பாடி பழனிசாமி மீது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இடையே கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது.

திமுகவுக்கு கட்டம் கட்ட அதிமுக முடிவு

இந்த நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி காரணமாக முன்னாள் அமைச்சரும், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான சி.வி.சண்முகம் உள்ளிட்ட பல சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவை கையிலெடுத்துள்ளனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி உடன்படவில்லை என சொல்லப்படுகிறது. இதனிடையே இன்று அதிமுக எம்.எல்.ஏ,க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுகவுக்கு சிம்ம சொப்பனமாக விஜய் மாறியுள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தினால் நமக்கு குறைந்தபட்சம் வரும் காலத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது இருக்கும் என அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் பலரும் கருதியுள்ளனர். இதனால் திமுகவுக்கு ஸ்கெட்ச் போட தவெகவுடன் கைகோர்க்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு பஞ்சமிருக்காது.

Related Post

“சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம்“ – நயினாரை அதிர்ச்சியில் உறையவைத்த பாஜக தொண்டர்

Posted by - July 14, 2025 0
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், மக்கள் சோறு போட தயாராக இருப்பதாகவும், ஆனால் ஓட்டு போட மாட்டோம் என்று கூறுவதாகவும் தொண்டர் ஒருவர் தெரிவித்ததால், அவர்…
Generated Image February 09 2026 3 52PM

‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!

Posted by - February 9, 2026 0
’கே.என்.நேரு தலைமையில் ஏ.வே.வேலு உள்ளிட்டோரை உள்ளடக்கிய தொகுதி பங்கீட்டு குழுவை திமுக அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது’ சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தன்னுடைய  பிரச்சாரத்தை தீவிரமாக…
vijay dmk

”பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்துக்கு பாடம் புகட்டும்” தவெகவுக்கு சவால்விட்ட சேகர்பாபு!

Posted by - March 20, 2026 0
பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆற்றல்மிக்க தலைவவரை விமர்சிப்பவர்களை, தன் தாயே தடுத்தாலும் திமுக தொண்டன் எதிர்ப்பான். பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்- சேகர்பாபு…
Generated Image January 07 2026 11 02AM

திமுகவிற்கு டஃப் கொடுக்க இபிஎஸ் போட்ட செம திட்டம்

Posted by - January 7, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் அதிமுகவுடன் அன்புமணி தலைமையிலான பாமக கூட்டணியை உறுதி…
s 5 e1774010119419

கடன் வாங்கி கொள்ளையடித்த திமுக அரசு தொடர வேண்டுமா? – இபிஎஸ் கேள்வி

Posted by - April 9, 2026 0
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் என் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் அதிமுக வேட்பாளர் கோகுல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *