தவெக

தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல்: ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதியின் விமர்சனத்தால் சர்ச்சை

78 0

சென்னை: தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல் இடம்பெற்ற நிலையில் அநாகரிகமாகவும், ஒருமையிலும் ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. தோல்வி அடைந்த திமுக எதிர்க்கட்சியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், அக்கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் இடம்பெற்றது. அதே போல், திமுக கூட்டணி கட்சிகளான விசிக, ஐயூஎம்எல் கட்சிகளும் தவெக அமைச்சரவையில் நேற்று பங்கேற்றன. தேர்தலில் தோல்வி அடைந்து ஆட்சியை இழந்த நிலையில், கூட்டணியும் உடைந்ததால் திமுக கடும் கோபத்தில் உள்ளது.

இந்நிலையில், தவெக அமைச்சரவையில் விசிக, ஐயுஎம்எல் இடம்பெற்றது குறித்து, திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா தனது எக்ஸ் வலைதளப் பதிவில், “முன்‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி – புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம்; என்றாலும் களமாடுவோம்! வெற்றி நமக்கே!!” என்று தெரிவித்துள்ளார்.

கடும் எதிர்ப்பு: இந்த பதிவு விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியினரையும் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக பெண்கள் அமைப்பினரும் சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பதிவை ஆ.ராசா நீக்கினார். இதனை தொடர்ந்து ஆ.ராசா தனது எக்ஸ் வலைதளத்தில் மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார் அதில், “என் வீட்டுத் தோட்டத்துத் தென்னை கூனி வளைந்து எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில் அதற்குப் பெயர் “முடத்தெங்கு”! அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்? வாழ்க தமிழ்” என்று பதிவிட்டுள்ளார்.

விசிக பதிலடி: ஆ.ராசாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், விசிகவின் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி எக்ஸ் வலைதளப்பதிவில், “அதிகாரம் எளியவர்க்கு – அதிலென்ன ஆத்திரம்; ஆற்றாமையால் அள்ளிவீசும் அவதூறுகள் அசைத்திடாது. அமைதியாய் கடப்பது அநாகரீகம் தவிர்க்கவே. அநீதி தொடர்ந்து – அனைத்தும் உரைத்தால் அணைக்க முடியா அனலில் தகித்து போவீர்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெறுவது பற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் இல்லாத அமைச்சரவையில் எவன் இருந்தால் என்ன, எவன் போனால் என்ன. அதைப்பற்றி எங்களுக்குக் கவலையும் இல்லை. அக்கறையும் இல்லை” என்று ஒருமையில் மிகக்கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

அன்றாட வாழ்வில் கணிதத்தின் முக்கியத்துவம்… தேசிய கணித தினம் இன்று…

Posted by - December 22, 2023 0
கணிதம் ஒரு சுவாரஸ்யமான பாடமாகும். நீங்கள் அதை விரும்பினாலும் அல்லது வெறுத்தாலும், வாழ்வில் குழப்பங்களை தடுத்து, ஒரு தெளிவு தருகிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. கணிதம்…

கறிவேப்பிலை.. முளைக்கீரையை விடாதீங்க.. கர்ப்பிணி பெண்கள் தவிர்க்க கூடாத கீரை இதுதான்.. நோட் பண்ணுங்க

Posted by - December 8, 2023 0
சென்னை: கீரைகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை என்றாலும், கர்ப்பிணிகள் கீரைகள் சாப்பிடலாமா? என்ன வகையான கீரைகளை சாப்பிட வேண்டும் தெரியுமா? பப்பாளி, அன்னாசி பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிட்டால்…

உக்கிரமா இருக்கும்.. தென் மாவட்டங்களில் மீண்டும் அதிகனமழைக்கு வாய்ப்பு! 3 நாட்கள் அலர்டா இருங்க

Posted by - December 26, 2023 0
சென்னை: தென் மாவட்டங்களில் மீது அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரித்து உள்ளார். ராஸ்பி அலைவு கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிக்கு…

45 ஆண்டு கால அவலங்களுக்கு சீக்கிரம் விடிவுகாலம்: அண்ணாமலை பேட்டி…

Posted by - December 6, 2023 0
சென்னை: ‛‛45 ஆண்டுகளாக சென்னையில் நடக்கும் கூத்துகளை மக்கள் பார்த்து விட்டார்கள். சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும்” என அண்ணாமலை கூறினார்.சென்னை தியாகராய நகரில் இன்று(டிச.,06) மிக்ஜாம் புயலால்…

முதல்வர் ரோடு ஷோவில் விவசாயிகள் தர்ணா போராட்டம் – மயிலாடுதுறையில் பரபரப்பு…!

Posted by - July 16, 2025 0
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ போது மனு கொடுக்க காவல்துறையினர் விவசாயிகளுக்கு அனுமதி மறுத்த நிலையில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஈடுபட்டதால் பரபரப்பு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *