அமரன் திரைபார்வை…..

179 0

உலகநாயகனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணைந்து நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் அமரன்.

இந்திய ராணுவத்தில் சேவை செய்து நாட்டிற்காக உயிர் நீத்தவர் மேஜர் முகுந்த் வரதராஜன். மேஜர் முகுந்த் மற்றும் அவரது துணைவியார் இந்து ரெபேக்கா வர்கீஸ் இருவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து தான் இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள அமரன் படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்

முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்) தனது சிறு வயதில் இருந்தே இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிறார். கல்லூரியில் இந்து ரெபேக்கா வர்கீஸை (சாய் பல்லவி) சந்திக்கும் முகுந்த் காதலில் விழுகிறார்.

காதல் ஒரு பக்கம் இருந்தாலும் இராணுவத்தில் சேர வேண்டும் என்ற முனைப்போடு இராணுவ பயிற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறார். அவர்களுடைய காதலிக்கு முகுந்த் வீட்டில் கிரீன் சிக்னல் கிடைத்து விட்டது.முகுந்த் ராணுவ வீரன் என்பதால் இந்துவின் தந்தை அவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. எப்படியோ பல போராட்டங்களுக்கு பின் இரு வீட்டார் சம்மதத்துடன் முகுந்த் – இந்துவின் திருமணம் நடைபெறுகிறது.

ராணுவத்தில் முதலில் லெப்டினன்ட் இணையும் முகுந்த், பின் கேப்டனாக பதவி ஏற்க, அதனை தொடர்ந்து 44 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் சீட்டா கம்பெனியில் மேஜராக பொறுப்பேற்கிறார்.

 

அமரன் திரைவிமர்சனம் | Amaran Movie Review

காஷ்மீர் எல்லைப் பகுதியில் அல்டாஃப் பாபா எனும் பயங்கரவாதியை  என்கவுண்டர் செய்கிறார் மேஜர் முகுந்த் வரதராஜன். இந்த சம்பவத்திற்கு பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அமரன் படத்தை ராணுவ படமாக மட்டுமே காட்டாமல், முகுந்த் – இந்து இருவருக்கும் இடையே இருக்கும் காதலை வைத்து திரைக்கதையை அழகாக வடிவமைத்துள்ளார்.

போர்க்களத்தில் முகுந்த் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், வீட்டில் இந்துவின் தவிப்பை காட்டிய விதம் மிகவும் எமோஷனலாக இருந்தது. கல்லூரியில் தொடங்கி முகுந்தின் மரணம் வரை இருவருக்கும் இடையே இருந்த காதல், முகுந்தின் மறைவு பின்பும் அவரை எந்த அளவிற்கு இந்து காதலித்து கொண்டு இருக்கிறார்கள் என்று காட்டிய விதமும் அருமையாக இருந்தது.

திரைக்கதையில் சில இடங்கள் தொய்வாக இருந்தாலும் அவை யாவும் மிகப்பெரிய மைனஸாக தெரியவில்லை. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் கமர்ஷியலுக்காக எதுவும் செய்யாமல், எதார்த்தமாக இப்படத்தை எடுத்ததற்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு பாராட்டு.

இடைவேளை காட்சி எந்த அளவுக்கு மாஸாக இருந்ததோ, கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் நெகிழ வைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். தான் இறந்து பிறகு, தன் மனைவி யார் முன்பும் கண்ணீர் விடக்கூடாது என முகுந்த் சொன்ன வார்த்தையை மனதில் வைத்து இந்து நடந்துகொண்ட விதம் மிகவும் எமோஷனலாக இருந்தது.

அமரன் திரைவிமர்சனம் | Amaran Movie Review

 

தந்தையின் மறைவு அறியாத குழந்தை ‘அப்பாவுக்கு அடுத்த விடுமுறை எப்போது’ என்று தாயிடம் கேட்கும் காட்சிகள் கண் கலங்க வைக்கிறது. தனது குடும்பத்தை பிரிந்து ராணுவத்திற்கு எப்போது சென்றாலும், கண் கலங்காத முகுந்த், இறுதியாக தனது மனைவி, குழந்தை, தாய், தந்தையை விமான நிலையத்தில் சந்தித்துவிட்டு செல்லும் போது கண்கலங்கிய காட்சிகளை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அழகாக எடுத்திருந்தார்.முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்து நம் அனைவரையும் சிலிர்க்க வைத்துவிட்டார் கதாநாயகன் சிவகார்த்திகேயன். ஒரு பக்கம் சிவாவின் நடிப்பு பட்டையை கிளப்பி கொண்டு இருந்தாலும், மற்றொரு புறம் அவரை மிஞ்சும் அளவிற்கு அனைவரின் மனதிலும் இடம் பிடிக்கிறார் இந்து கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி. இருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பாராட்டுக்கள்.

 

அதே போல் முகுந்த் வரதராஜனுக்கு எப்போது பக்கபலமாக துணை நின்று விக்ரம் சிங் கதாபாத்திரமும் சிறப்பாக இருந்து. அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த பூவன் அரோராவுக்கு தனி பாராட்டு.

கண்டிப்பாக அமரன் படம் முகுந்த் வரதராஜனுக்கு சிறந்த சமர்ப்பணமாக அமையும். அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்திய ராணுவத்திற்காக உயிர்நீத்த முகுந்த் வரதராஜன் போல் இன்னும் ஏராளமானோர் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களுடைய கதையும் மக்களுக்கு படங்கள் மூலம் தெரிய வந்தால், அது அவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்கும்.

படத்தின் அடுத்த ஹீரோ ஜிவி பிரகாஷ் குமார். பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி மிரட்டி விட்டார். எமோஷனல் காட்சிகள், காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள் பட்டையை கிளப்பியுள்ளார், வேற லெவல். ஆக்ஷன் காட்சிகளை சிறப்பாக வடிவமைத்துள்ளனர் அன்பறிவு மாஸ்டர்ஸ் மற்றும் Stefan Richter. ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். அதே போல் எடிட்டிங் சூப்பர்.

பிளஸ் பாயிண்ட்   

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பு

ராஜ்குமார் பெரியசாமி திரைக்கதை

எமோஷனல் காட்சிகள், இராணுவ காட்சிகள்

ஸ்டண்ட்

பாடல்கள், பின்னணி இசை

மைனஸ் பாயிண்ட்

பெரிதாக ஒன்றும் இல்லை

மொத்தத்தில் அமரன் ராணுவ வீரரின் வலி நிறைந்த காதல் கதை. அனைவரும் பார்க்கவேண்டிய படம்.. 

 

Related Post

ரஜினியின் 171 படத்தை இயக்க கோடியில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜ்!..எவ்ளோ தெரியுமா?

Posted by - August 29, 2023 0
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயிலர் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தற்போது வரை இப்படம் ரூபாய் 575…

செம வசூல் வேட்டை நடத்தும் துல்கர் சல்மானின் காந்தா திரைப்படம்… 5 நாள் வசூல் விவரம்

Posted by - November 19, 2025 0
காந்தா படம் இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் காந்தா. கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியான இப்படத்தில் துல்கருக்கு ஜோடியாக…

ஆண்பாவம் பொல்லாதது படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - November 9, 2025 0
ஆண்பாவம் பொல்லாதது கடந்த வாரம் திரைக்கு வந்த ஆண்பாவம் பொல்லாதது படத்திற்கு ஒரு பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சில விமர்சனங்களும் இப்படத்தின் மீது வைக்கப்பட்டது.இப்படத்தை அறிமுக…

முக்கிய இடத்தில் கமல்ஹாசன் விக்ரம் பட முழு சாதனையை முறியடிக்கப்போகும் ஜெயிலர்- முழு வசூல் விவரம்

Posted by - August 12, 2023 0
ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போது கொண்டாடி வரும் திரைப்படம் ஜெயிலர். அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகி பெரிய கேப் பிறகு ரஜினியின் ஜெயிலர் திரைப்படம்…

பட்டத்தை பறிக்க நினைக்கிறாரா விஜய்? ரஜினியால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்

Posted by - July 19, 2023 0
Hukum பாடலால் சர்ச்சை ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் இடம்பெறும் Hukum எனும் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டாவது சிங்கிளாக வெளிவந்தது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *