இனியாச்சும் கவனமா இருங்க – வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த விஜய்..!!

164 0

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான படை சார்பில் பிரம்மாண்டமாக நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிப்பதாகவும், இனி வரும் காலங்களில் தமிழக அரசு பாதுகாப்பிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

சென்னையில் இந்திய விமானப் படை சார்பில், மெரினா கடற்கரையில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் உயிரிழந்த நிகழ்வு, வேதனையளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியின் போது, அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என்று நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள், தங்கள் வேதனையை வெளிப்படுத்திய செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன.இப்படி மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைக்கான வசதிகளையும் பாதுகாப்பையும் திறம்படச் செயல்படுத்துவதில், இனி வரும் காலங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என விஜய் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related Post

ஆன்லைன் உணவு… திறக்க முடியாத பீரோல்… பொன்முடி வீட்டு சோதனையின்போது நடந்த சுவாரஸ்யங்கள்

Posted by - July 18, 2023 0
பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்ற ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அதிகாரிகள் பொன்முடிக்கு வழங்கினர். அமைச்சர் பொன்முடி தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில், சில…

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை:கோரிக்கை நிறைவேறும்வரை பின்வாங்கப் போவதில்லை என உறுதி

Posted by - January 6, 2026 0
பள்ளிக்கல்வித் துறைஅதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போராட்டம் தொடரும் என்று இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன் வைத்து, இடைநிலை பதிவுமூப்பு…

தமிழ்நாடு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு | உங்கள் பெயர் உள்ளதா? முழு விவரம்

Posted by - December 19, 2025 0
தமிழ்நாட்டில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி,…

ஜெயலலிதாவின் விசுவாசி.. பால் பிசினஸில் கொடி கட்டி பறந்த நயினார்.. யார் இந்த திருநெல்வேலிக்காரர்? Nainar Nagenthran to be 13th Tamil Nadu BJP president….

Posted by - April 11, 2025 0
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எட்டே ஆண்டுகளில் அதன் மாநில தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்த…

இதய நோய், புற்றுநோய்-ன்னு எதுவும் வரக்கூடாதா? அப்ப இந்த எண்ணெயை உங்க சமையலுக்கு யூஸ் பண்ணுங்க..

Posted by - October 27, 2023 0
தற்போது சமையலில் பயன்படுத்த ஏராளமான எண்ணெய்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்த எண்ணெய்களைப் பார்க்கும் போது எந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்ற ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *