எனக்கு பயந்து வருது, கண்ணீரோடு எதிர்நீச்சல் சீரியல் நந்தினி வெளியிட்ட வீடியோ- ரசிகர்கள் சோகமான கமெண்ட்

398 0

எதிர்நீச்சல்

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியலுமே மக்களின் ஆதரவை பெறுவதில்லை.

ஆனால் ஒரு சில தொடர்கள் முடிவுக்கு வந்தால் மக்களும் சரி, அதில் நடித்த நடிகர்களும் சரி மிகவும் எமோஷ்னல் ஆகிவிடுவார்கள்.

அப்படி சமீபத்தில் ஒரு தொடர் முடிவுக்கு வருகிறது என்ற செய்தி வெளியானதில் இருந்து ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.அதேபோல் அந்த தொடரில் நடித்தவர்களும் சீரியல் முடிவது குறித்து எமோஷ்னலாக பதிவு செய்து வருகிறார்கள்.

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் தொடர் இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது, கிளைமேக்ஸ் எப்படி இருக்கும் என்பதை காண மக்களும் ஆவலாக உள்ளனர்.

ஹரிப்பிரியா பதிவு

எதிர்நீச்சல் தொடரில் நடித்த மதுமிதா மற்றும் சிலர் எமோஷ்னல் பதிவு செய்துவரும் நிலையில் நந்தினி கதாபாத்திரத்தின் மூலம் மக்களின் மனதை கவர்ந்த ஹரிப்பிரியா கடைசிநாள் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள், கடைசி டப்பிங் பேசிய போது எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

டப்பிங் பேசும்போது எடுத்த வீடியோவில் ஹரிப்பிரியா எமோஷ்னல் ஆகியிருப்பது நன்றாகவே தெரிகிறது.

வீடியோவை பார்த்த ரசிகர்கள் நந்தினி கதாபாத்திரத்தை எப்போதும் மறக்க மாட்டோம், எதிர்காலம் நன்றாக அமையும் என நிறைய கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

அதோடு தொடரில் பணியாற்றிய அனைவரையும் குறிப்பிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார் ஹரிப்பிரியா.

 

Related Post

‘இலங்கை அணியின் மிகப்பெரும் சொத்து மதீஷா பதிரனா…’ – தோனி பாராட்டு

Posted by - May 7, 2023 0
பதிரனா டெஸ்ட் போட்டிகளை தவிர்த்து விட்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும். இலங்கை அணியின் மிகப்பெரும் சொத்தாக சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா…

ப்ளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யுமா சென்னை?

Posted by - May 20, 2023 0
சென்னை அணியைப் போன்றே, 15 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோ அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது. ஐபிஎல் ப்ளே-ஆப்…

பாவம் விட்டுருங்கயா..! ஸ்டோக்ஸ் & கோவை வெச்சு செய்யும் இந்தியர்கள் – ”பேஸ்பால் காணோமாம்”

Posted by - July 28, 2025 0
பென் ஸ்டோக்ஸின் ட்ரா பரிந்துரையை ஜடேஜா நிராகரித்ததை மையப்படுத்தி, இங்கிலாந்து அணியை விமர்சித்து ஏராளமான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட்…

கோட்டைவிட்ட வீரர்கள்… டிராவில் முடிந்த மொராக்கோ-குரோஷியா ஆட்டம் .

Posted by - November 23, 2022 0
இரு தரப்பிலும் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். சமனில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-எப்…

5-ஆவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்!!

Posted by - May 30, 2023 0
முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *