ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாமா?

274 0

டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

தமிழகத்தில் மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகளும், 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்ச குடிசை வீடுகளுக்கான மின் இணைப்புகளும் உள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின் வாரியம் அறிவிப்பை வெளியிட்டது.

இதனிடையே நுகர்வோர்களுக்கு இந்த இணைப்பு குறித்து எழும் சில கேள்விகளுக்கான பதில்களை இங்கு பார்க்கலாம்.

1. மின் இணைப்புடன் ஆதாரை எப்படி இணைப்பது?

ஆதாரை இணைக்க https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்களின் மின் இணைப்பு பதிவை உள்ளிட்டு ஆதார் எண்ணை இணைக்கலாம் அல்லது மின் வாரிய அலுவலகத்துக்கு நீங்களே நேரில் சென்று ஆதார் எண்ணை இணைக்கலாம்.

2. இணையம் மூலம் எவ்வாறு ஆதார் எண்ணை இணைப்பது?

Step 1 : ஆதாரை இணைக்க https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவு செய்யவும்.

Step 2 : உங்கள் மின் இணைப்பில் இணைத்துள்ள மொபைல் எண்ணிற்கு ஒரு OTP வரும். அந்த OTPயை பதிவிட்ட பிறகு, உங்களின் ஆதார் கார்டையும், ஆதார் எண்ணையும் பதிவிட வேண்டும்.

Step 3 : நீங்கள் அந்த வீட்டிற்கு உரிமையாளரா அல்லது வாடகைக்கு குடியிருப்போரா அல்லது நீங்கள் அந்த வீட்டின் உரிமையாளர் ஆனால் மின் இணைப்பு வேறு ஒருவர் பெயரில் உள்ளதா என்ற ஆப்ஷன்களை தோன்றும். அதில் உங்களுக்கான விருப்பத்தை தேர்வு செய்து சப்மிட் செய்தால் போதும். உங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்போடு இணைத்துவிடலாம். இதையடுத்து ஒப்புகை ரசீது வரும். அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

Related Post

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.. எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு.. கடந்த முறையை விட அதிகமா?

Posted by - April 20, 2024 0
கடந்த முறை 2019ஆம் தேர்தல் வாக்குப்பதிவுடன் தற்போதைய தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் ஒப்பீடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 2019-ல் தமிழ்நாட்டில் எத்தனை…

கடல் கடந்து காதல்- நார்வே பெண்ணை கரம்பிடித்த கடலூர் வாலிபர்

Posted by - June 30, 2023 0
கடலூர்: கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசித்து வருபவர் பாலமுருகன். பி.எச்.டி. பட்டதாரியான இவர் நார்வே நாட்டில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து வருகிறார். அதே பல்கலைக்கழகத்தில்…

தமிழ்ப் புத்தாண்டு – பிரதமர் மோடி வாழ்த்து!

Posted by - April 14, 2024 0
சித்திரை மாதம் முதல் நாள், தமிழ் புத்தாண்டாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சோப கிருது ஆண்டு விடைபெற்று, ‘குரோதி’ புத்தாண்டு பிறந்துள்ளது. உலகம்…

“எஸ்ஐஆர் பூர்த்தி செய்யணும்! ஓடிபியை சொல்லுங்கள்”னு யார் கேட்டாலும் தராதீங்க! சைபர் கிரைம் வார்னிங்,…

Posted by - November 22, 2025 0
புதுவை: வாக்காளர் திருத்த சிறப்பு தீவிர திருத்த பட்டியலை (SIR) நிரப்புவதற்காக யாராவது போன் செய்து ஓடிபி கேட்டால் கொடுக்க வேண்டாம் என புதுவை போலீஸார் எச்சரிக்கை…

தேர்தலுக்கு பின் கழகத்திலும் அரசியலிலும் பல மாற்றங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

Posted by - February 23, 2024 0
பிப்ரவரி 26ஆம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் வீடுவீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்ளப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவின் அநீதிகளை மக்களிடம் கொண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *