ஒரே “பட்டை” போதுமே.. ஆச்சரியத்தை அள்ளி அள்ளி தரும் இந்த மரத்து பட்டை.. பெஸ்ட் “வலி நிவாரணி” பவுடர்

196 0

சென்னை:

முருங்கை மரத்தை போலவே, வேப்ப மரத்தை போலவே, தவிர்க்கவே முடியாதது ஆலமரம்.. இந்த மரத்தின் மொத்த பாகங்களுமே நன்மைகளை தரக்கூடியது.. அந்தவகையில், ஆலமரத்தின் பட்டைகளின் ஒருசில பயன்களை பார்ப்போம்.

ஆலமரத்தின் பட்டை நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளி தருகிறது. அதனால்தான், சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் மிக முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது ஆலமரத்தின் பட்டைகள்… சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் என்றே இந்த பட்டைகளை சொல்லலாம்.

பட்டைகள்:

இந்த பட்டையை, இடித்து சாறு பிழிந்து, 10 பங்கு தண்ணீருடன் சேர்த்து குடித்து வந்தாலே சர்க்கரை நோய் கட்டுப்படும் என்கிறார்கள்.. அல்லது ஆலமரத்தின் பட்டைகளை, 4 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விட வேண்டும்.. தண்ணீர் ஒரு டம்ளராக குறையும் வரை சுண்ட காய்ச்சி, பிறகு அதை ஆறவைத்து குடித்தாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.ஒரே "பட்டை" போதுமே.. ஆச்சரியத்தை அள்ளி அள்ளி தரும் இந்த மரத்து பட்டை..  பெஸ்ட் "வலி நிவாரணி" பவுடர் | Do you know the Excellent Benefits of Banyan  Tree Bark and Banyan tree ...

சிறுநீரக பிரச்சினை இருந்தால், இந்த பட்டைகளை விழுதாக அரைத்து, சிறிது சர்க்கரையுடன் சேர்த்து தண்ணீரில் கலக்கி குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

புண்கள்:

பெருமளவு புண்களை குணமாக்கும் மருந்தாக, இந்த பட்டைகள் பயன்படுகின்றன.. அதனால்தான், வாய் சுகாதாரம் பேணுவதற்கு இந்த ஆல மரப்பட்டைகளை உபயோகிக்கிறார்கள்.. குறிப்பாக, பட்டையை தூள் செய்து, குடிநீரில் போட்டு வாய்க் கொப்பளித்து வந்தால், வாயில் உண்டாகும் புண்கள், சின்ன சின்ன கொப்புளம் ஆறிவிடும்.. அதேபோல, ஈறிலிருந்து வடியும் ரத்தமும் நின்றுவிடும்.. வாய் துர்நாற்றமும் நீங்கிவிடும்.

இந்த பட்டைகள் மிகச்சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது.. அதனால்தான், மூட்டுவலி, முழங்கால் வலி, கீல்வாதம், கை கால் வலி போன்ற பிரச்சனை இருந்தால், இந்த பட்டைகளை அரைத்து, வலி உள்ள இடத்தில் தடவுவார்கள். இந்த பட்டையை காயவைத்து, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலை வேளைகளில் 4 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்பாடு நோய் நீங்கிவிடும்..

பட்டைகள்:

ஆண்களுக்கு விரைவில் விந்து வெளியேறும் பிரச்சனை இருந்தால், புதிய ஆலமரத்து பட்டையை உலரவைத்து அரைத்து, சம அளவு வெண்ணெய் கலந்து தினமும் 2 வேளை, 4 கிராம் அளவு சாபபிட்டு வந்தாலே போதும். மாதவிடாய் நேரத்தில், அளவுக்கு அதிகமாக ரத்தப்போக்கு இருந்தால், இந்த மரப்பட்டையை தண்ணீரில் நனைத்து அதன் சாற்றை குடித்தால் தீர்வு கிடைக்குமாம். தோல் நோய்கள் இருந்தாலும், இந்த மரப்பட்டையின் பொடி போதும்.. பேதி இருந்தால், இந்த பொடியை தூள் செய்து சாப்பிடலாம்.. !!

Related Post

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவியிடம் ரூ.6 லட்சம் பறிப்பு: ஆன்லைனில் நூதன மோசடி

Posted by - September 8, 2023 0
புதுச்சேரி: வடமாநிலத்தை சேர்ந்த லாவண்யா (வயது 26) என்ற பெண், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். காதலர்களுக்கு…

லாக்கப் மரணம்; விஜய்- முதலமைச்சர் என்று குறிப்பிடாமல் உள்துறை அமைச்சர் என்றே மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுள்ளார்.

Posted by - July 1, 2025 0
சிவகங்கை காவல்துறை மரணத்தில் திமுக அரசை அராஜக அரசு என்றும், சிறப்பு விசாரணைக்குழு விசாரணை தேவை என்றும் தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் காவல்துறை…

புதுச்சேரி

Posted by - April 12, 2022 0
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 16ம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. வரும் 14 ஆம் தேதி தமிழ் வருடப்பிறப்பு மற்றும்…

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு… தமிழ்நாடு அரசு உத்தரவு..!

Posted by - May 17, 2023 0
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப் படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 01.04.2023 முதல்…

அண்ணாமலைக்கு கல்தா; ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக தமிழ்நாடு – அப்போ தேர்தலுக்கு எப்படி பாஸ்.?

Posted by - May 27, 2025 0
#TNBJP #ANNAMALAI #MODI #TNPOLITICS #AIADMK #DMK #BJP #INDIA #CONGRESS #PIXELTV #PIXELMEDIA சென்னை திருவான்மியூரில் நடந்த பாஜக கருத்தரங்கிற்காக வைக்கப்பட்ட பேனர்களில் அண்ணாமலையின் படம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *