சினிமா, அரசியல் வெற்றிக்காக விஜய் .. இரட்டை வேஷம் போடும் தளபதி

226 0

Actor Vijay: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் சினிமா மற்றும் அரசியல் இரண்டிற்காகவும் விஜய் வேறு நடிகர்களை பாலோ செய்த விஷயம் இப்போது வெளியாகி இருக்கிறது. விஜய்யின் ஆரம்பகால படங்கள் எதுவும் பெரிய அளவில் ஓடவில்லை

தனது தந்தை எஸ ஏசியின் படத்தில் நடித்தாலும் ரசிகர்களால் விஜய் கவரப்படவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய படத்தில் ரஜினியின் சாயல் மற்றும் புகைப்படத்தை காண்பித்தால் விசில் பறக்கும் என்பதை அறிந்து அதுபோல செயல்பட்டு வந்தார் விஜய். வில்லு படம் வரை ரஜினியின் புகழை விஜய் பாடி வந்தார்.

 

இதைத்தொடர்ந்து சினிமாவில் முக்கிய நடிகராக விஜய் உயர்ந்ததால் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரஜினியை காண்பிக்க மறுத்தார். தான் திரையில் வந்தாலே தன்னுடைய படம் வசூலை வாரி குவிக்கும் என்ற நிலைமையை விஜய் ஏற்படுத்தி இருந்தார். அதேபோல் ரஜினி படங்கள் தோல்வி ஊற்றாலும் விஜய்யின் படங்கள் வசூலை வாரி குவித்து வந்தது.

மேலும் இதைத் தொடர்ந்து வந்த படங்களில் எம்ஜிஆரின் பாடல்களை வைத்து அவரை நினைவு படுத்தும் விதமாக காட்சிகள் அமைத்தார். இதற்கு காரணம் சினிமாவில் இருந்து அரசியலில் சாதித்து காட்டிய பிரபலங்கள் என்றால் எம்ஜிஆர் தான் முதலிடம். இப்போது விஜய்யும் அரசியலுக்கு வர இருக்கிறார்.

 

இவ்வாறு ரஜினி மற்றும் எம்ஜிஆர் ஆகியோரை பாலோ செய்து தனது படங்கள் மட்டுமல்லாமல் இப்போது அரசியலிலும் ஆழம் பார்க்க இறங்கி இருக்கிறார் விஜய். ஆரம்பத்தில் ரஜினி ரசிகனாக இருந்து வெற்றி பெற்ற விஜய் இப்போது சூப்பர் ஸ்டார் பட்டத்தை பெறுவதற்காக முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் பழம் தின்று கொட்டை போட்ட பிரபலங்களின் ஆலோசனையை கேட்டு செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினரை டார்கெட் செய்து ஒவ்வொரு நலத்திட்டங்களை செய்து வருகிறார். மேலும் விஜய் அரசியலுக்கு வருவதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Post

ஜெயிலர் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புகிறார்களா விஜய் ரசிகர்கள்?.. சூடுபிடிக்கும் பஞ்சாயத்து

Posted by - August 10, 2023 0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினிகாந்த் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட…

இசை வெளியீடு ரத்து, தற்போது விஜய்யின் லியோ படம் குறித்து வந்த சூப்பர் தகவல்- என்ன தெரியுமா?

Posted by - September 28, 2023 0
விஜய்யின் லியோ கடைசியாக வெளிவந்த பெரிய நடிகரின் படம் என்றால் அது ரஜினியின் ஜெயிவர் தான். இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகரான விஜய்யின் லியோ படம் அக்டோபர் மாதம்…

தனுஷின் ’வாத்தி’ படத்துக்கு புது சிக்கல்.. ஆசிரியர் சமூகத்தை அவமதிப்பதாக எழுந்த சர்ச்சை!

Posted by - February 15, 2023 0
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘வாத்தி’ திரைப்படம் மீது ஆசிரியர்கள் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்…

தவறான பழக்கம்; கார்த்திக் திருமணத்தால் நடிகை ஒருவர் விஷம் குடித்தார்: தயாரிப்பாளர் பாலாஜி பிரபு!

Posted by - January 9, 2025 0
நடிகர் கார்த்திக் தனது செயல்பாடுகளால் அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையை இழந்தார் … ஒரு நடிகை தற்கொலைக்கு முயன்றதாகவும் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார். ஒரு காலத்தில்…

சினிமாவை விட்டு போகிறார் சாய் பல்லவி.. காரணம் இதுதானா

Posted by - November 29, 2022 0
சாய் பல்லவி தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கார்கி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *