சென்னை கோரமண்டல் ரெயில் விபத்து மனித தவறே காரணம்- விசாரணை அறிக்கையில் தகவல்

239 0

மேற்குவங்காளத்தில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த மாதம் 2-ந் தேதி ஒடிசாவில் விபத்தை சந்தித்தது.

சிக்னல் மாற்றத்தால் சரக்கு ரெயில் மீது மோதி கவிழ்ந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி கள் மீது மற்றொரு பயணிகள் ரெயில் மோதியதில் மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டது. 291 பயணிகள் இந்த விபத்தில் கொல்லப்பட்டனர். ரெயில் விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி ரெயில்வே பாதுகாப்பு பிரிவினர் விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை அறிக்கை கடந்த வாரம் ரெயில்வே அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்டது.சென்னை கோரமண்டல் ரெயில் விபத்து மனித தவறே காரணம்- விசாரணை அறிக்கையில் தகவல்  | The Chennai Coromandel train accident was caused by human error,  according to the inquiry report

இந்த விசாரணை அறிக்கையில் என்னென்ன கூறப்பட்டுள்ளது என்பது பற்றி தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. சிக்னல் மாற்றம் தொடர்பாக என்னென்ன நடந்தது? என்பது பற்றி அந்த அறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. மெயின் லைனில் சென்று கொண்டிருந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நின்று கொண்டிருந்த பாதைக்கு திரும்பியது ஏன்? என்பது பற்றியும் அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.

40 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானதற்கு மனித தவறே காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சிக்னல் மாற்றத்தை கவனித்து இருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஸ்டேசன் மாஸ்டரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ரெயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? என்பது பற்றி அந்த அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை. அதுபற்றி மற்றொரு குழு விசாரணை நடத்தி வருகிறது.

 

 

 

 

 

 

 

Related Post

சார்ஜ் போடவே வேண்டாம்… ஒளியின் சக்தியில் இயங்கும் வயர்லெஸ் கீபோர்டு அறிமுகம்!

Posted by - September 25, 2025 0
இது பாதுகாப்பான கனெக்டிவிட்டிக்காக லாஜி போல்ட் USB-C ரிசீவருடன் வருகிறது. லாஜிடெக் சிக்னேச்சர் ஸ்லிம் சோலார்+ K980 மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கிறது.லாஜிடெக் நிறுவனம் சிக்னேச்சர்…

டேட்டிங் ஆப் மூலம் உடலுறவுக்கு அழைப்பு: வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பல் கைது

Posted by - August 9, 2023 0
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் ஆப் மூலம், ஆசைவார்த்தைகளை பரிமாறி, உறவுக்கு அழைத்து வீடியோ எடுத்து மோசடி செய்த கும்பலை போலீசார் கைது…

கர்ப்பிணி மனைவியை சரமாரி துப்பாக்கியால் சுட்ட கேரள வாலிபர்- வயிற்றில் இருந்த குழந்தை இறந்தது

Posted by - November 16, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள உழவூரை சேர்ந்தவர் மீரா ஆபிரகாம் (வயது32). இவரது கணவர் அமல் ரெஜி. இவர்கள் இருவரும் அமெரிக்காவின் சிகாகோ நகரில்…

வழக்கறிஞர்களிடமிருந்து டிப்ஸ் பெற ஆடையில் QR code! – சஸ்பெண்ட் செய்து நீதிமன்றம் நடவடிக்கை.

Posted by - December 2, 2022 0
வழக்கறிஞர்களிடமிருந்து `பேடிஎம்’ மூலம் டிப்ஸ் பெற்ற நீதிபதியின் டவாலியை பணியிடை நீக்கம் செய்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு. வழக்கறிஞர்களிடமிருந்து `பேடிஎம்’ மூலம் அன்பளிப்பாகப் பணம் பெற்ற நீதிபதியின்…

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி… அண்ணாமலை அதிரடி பேட்டி

Posted by - April 6, 2023 0
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகளும் கருத்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *