தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகள் தனியாருக்கு தத்துக் கொடுக்கும் முயற்சி.. மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

161 0

அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளோடு இணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக 500 பள்ளிகளை தத்துக் கொடுக்கும் நடவடிக்கையினை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

“கல்வி கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசுப் பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழ்நாடு அரசு தப்பிப்பது, நிதிப் கமையை காரணம் காட்டி தனியாருக்கு தத்துக் கொடுப்பது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும்” என மார்க்சிஸ்ட் கட்சி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளின் பங்களிப்புடன் நிறைவேற்றித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் நோக்கம் படிப்படியாக அரசுப் பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைப்பதோடு, கல்வியை தனியார்மயமாக்கும் தேசியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக திணிக்கும் முயற்சியாகும்.அரசுப் பள்ளிகள் தனியார்மயமாக்கப்பட்டால் ஏழை, எளிய, விளிம்புநிலை குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகும். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

Related Post

Sun TV கயல் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted by - November 23, 2022 0
கயல் சீரியல் SUN தொலைக்காட்சியில் ஏன் தமிழ் சீரியல்களில் டாப்பில் இருக்கும் தொடர்  கயல் . சைத்ரா ரெட்டி நாயகியாக நடிக்க, சஞ்சீவ் நாயகனாக நடித்து வருகிறார்.…

மருத்துவத்துறையை நாசமாக்கி விட்டு பதவியில் இருக்க கூச்சமா இல்லையா? – அமைச்சரை வெளுத்து வாங்கும் அண்ணாமலை

Posted by - February 14, 2025 0
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன. கையாலாகாத திமுக அரசின் சுகாதாரத்துறை ஒழுங்காகச் செயல்படுவதற்கு…

இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்” ஸ்டாலின் மடல்…

Posted by - February 25, 2025 0
தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்தும், இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் எனக் கூறியும், திமுக தொண்டர்களுக்கு தொடர் கடிதம் ஒன்றை தொடங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.…

வந்தாச்சு UPI.. தபால் நிலையங்களிலும் இனி டிஜிட்டல் பணபரிவர்த்தனை செய்யலாம்.. ஆகஸ்ட்டில் அமல்

Posted by - June 28, 2025 0
சென்னை: வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தபால் அலுவலகங்களில் ‛இந்தியா போஸ்ட்’ சார்பில் விரைவில் யுபிஐ மூலம் பணம் வழங்கும் முறை செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

Posted by - July 28, 2025 0
சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *