இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்” ஸ்டாலின் மடல்…

211 0

தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்தும், இந்தி திணிப்பிற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் எனக் கூறியும், திமுக தொண்டர்களுக்கு தொடர் கடிதம் ஒன்றை தொடங்கியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

நம் உயி­ரு­டன் கலந்­தி­ருக்­கும் தலை­வர் கலை­ஞ­ரின் அன்பு உடன்­பி­றப்­பு­க­ளுக்கு, ‘உங்­க­ளில் ஒரு­வன்’ எழு­தும் தொடர் மடல். ஆம்.. இது ஒரு தொடர்ச்­சி­யான போராட்­டம் என்று தான் தனது கடிதத்தை ஆரம்பித்திருக்கிறார் முதலமைச்சர்.

ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் – ஸ்டாலின்

இது பண்­பாட்­டுப் படை­யெ­டுப்பை முறி­ய­டிக்­கும் அற­வ­ழிப் போராட்­டம் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அன்­னைத் தமிழை ஆதிக்க மொழி­யி­ட­ மி­ருந்து பாது­காக்­கின்ற போராட்­டம் என கூறியுள்ளார். தாய்­மொ­ழி­யைக் காலத்­திற்­கேற்ற அறி­வி­யல்தொழில்­நுட்­பத் தன்­மை­யு­டன் வளர்த்­­தெடுக்­கும் போராட்­டம் என கூறியுள்ள அவர், 85 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சளைக்­கா­மல் தொட­ரும் வெற்­றி­க­ர­மான போராட்­டம், அது­தான் தமி­ழர்­க­ளின் உணர்­வு­டன் கலந்­துள்ள இந்தி ஆதிக்க எதிர்ப்­புப் போராட்­டம்! என முழங்கியுள்ளார்.

இந்­தியை அவர்­கள் திணித்­துக் கொண்டே இருக்­கி­றார்­கள், நாம் எதிர்த்­துக் கொண்டே இருக்­கி­றோம். ஆதிக்­கத்­துக்கு முற்­றுப்­புள்ளி வைக்­கும் வரை ஆதிக்­கத்­துக்கு எதி­ரான போராட்­டம் தொட­ரும் என்று தான் உறுதி அளிப்பதாக கடிதத்தில் கூறியுள்ளார் மு.க. ஸ்டாலின்.

“உயிர் அடங்கும் வரை தாய்மொழியை காப்பாற்றும் உணர்வு அடங்காது”

ஆதிக்­கத்தை எதிர்ப்­ப­தும், தாய்­ மொ­ழி­யைக் காப்­ப­தும் திரா­விட முன்­னேற்­றக் கழக உடன்­பி­றப்­பு­க­ளின் ரத்தத்தில் ஊறிய உணர்வு என்றும், உயிர் அடங்­கும் வரை அந்த உணர்வு அடங்­காது என்று உணர்ச்சிபொங்க தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

தமிழ்­நாட்டு மக்­க­ளி­ட­மி­ருந்து வரி­யைப் பெற்­றுக்­கொண்டு, தமிழ்­நாட்டு மாண­வர்­க­ளின் கல்­விக்­கான நிதியை ஒதுக்­கா­மல், மத்திய பாஜக அரசு வஞ்­சித்து வரும் போக்கை தமிழ்­நாட்­டின் பள்ளி மாண­வர்­க­ளும்­கூட தெளி­வாக உணர்ந்­தி­ருக்­கி­றார்­கள் என கூறியுள்ள அவர், கடந்த 21, 22 ஆகிய தேதி­க­ளில்கட­லூர் மாவட்­டத்­தில் பல்­வேறு நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­ற­து­டன், பெற்­றோர்-­ – ஆ­சி­ரி­யர் மாநாட்­டில் கலந்து கொண்டு பேசும்­போது, மத்திய அரசு நமக்கு நிதி தர மறுப்­பதை ஆதா­ரத்­து­டன் சுட்­டிக்­காட்டி, “10 ஆயி­ரம் கோடி தந்­தா­லும் இந்­தி­யைத் திணிக்­கும் தேசிய கல்­விக் கொள்­கையை ஏற்­க­மாட்­டோம்” என உறு­தி­யு­டன் தெரி­வித்­ததாக எழுதியுள்ளார்.

இந்தி படிப்பதை தடுக்கவில்லை..திணிப்பதைத் தான் எதிர்க்கிறோம் – ஸ்டாலின்

மேலும், இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என கூறியுள்ள அவர், ‘இந்தி படிக்­காதே’ என்று யாரை­யும் தடுக்­கவில்லை, ‘இந்­தியை எங்­கள் மீது திணிக்­காதே!’ என்று ஆதிக்க சக்­தி­க­ளு­டன் அறப்­போ­ரைத் தொடர்ந்து நடத்­துவதாக குறிப்பிட்டுள்ளார். இந்­த போரில் ஒரு­போ­தும் சம­ர­ச­மில்லை. இத்­தனை உறு­தி­யாக இந்­தி திணிப்பை ஏன் எதிர்க்­கி­றோம் என்­பதை எதி­ரி­க­ளுக்­காக மட்­டு­மல்ல, இளம் ­த­லை­மு­றை­யி­ன­ரும் புரிந்­து­கொள்­வ­தற்­கான முதல் மடல் இது. தொடர்ச்­சி­யாக மடல் எழு­து­வேன் எனவும் கூறி, முதல் கடிதத்தை நிறைவு செய்திருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

Related Post

இரவு நேரத்துல நெஞ்செரிச்சல் ரொம்ப தொல்லை பண்ணுதா? இப்படி பண்ணுங்க அந்த பிரச்சினையே வராது…!

Posted by - December 21, 2023 0
ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) என்றும் அழைக்கப்படும் இரவுநேர நெஞ்செரிச்சல், அசௌகரியமாகவும் தூக்கத்தை சீர்குலைக்கும். பொதுவாக நெஞ்செரிச்சல் அதிக அமில உணவுகளை சாப்பிட்ட…

தி.மு.க.வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்டு காரணம் சொன்ன சத்யராஜ் மகள்!

Posted by - January 19, 2025 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் ஏன் தி.மு.க.வில் இணைந்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் சத்யராஜ். தமிழ்…

பழக்கவழக்கம் சரியில்லை… மீன் வெட்டும் கத்தி… தஞ்சை ஆசிரியை கொலையில் பகீர் பின்னணி!

Posted by - November 21, 2024 0
அதேசமயத்தில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினர் தகவலறிந்து வந்து மதன்குமாரைக் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கத்தியால்…
rain water

சென்னை மாநகரில் மழை நீர் வடியாததற்கான காரணம்?

Posted by - December 4, 2023 0
சென்னையில் நேற்று முதல் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மழை…

சனியின் ராசிக்கு இடம்பெயரும் சூரியன்… பண மழையில் நனைய போகும் ராசிகள்!

Posted by - December 5, 2024 0
மாதம் ஒருமுறை தன்னுடைய ராசியை மாற்றும் சூரிய பகவான் வரும் பிப்ரவரி மாதம் கும்ப ராசிக்கு செல்கிறார். சனிபகவானுக்கு சொந்தமான ராசியாக கும்ப ராசி உள்ளது. சூரிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *