திருச்சி சிவா, கே.என்.நேரு ஆதரவாளர்கள் மோதல்- தி.மு.க முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்

217 0

திருச்சியில் தி.மு.க கட்சியினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீடு எஸ்.பி.ஐ காலணியில் அமைந்துள்ளது. அப்பகுதியில் இறகு பந்து மைதானத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை வருகை தந்தார்.

இதற்கான பெயர் பலகையில் எம்.பி சிவாவின் பெயர் போடப்படவில்லை என அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். அத்துடன், அமைச்சர் கே.என்.நேருவிற்கு எதிராக கருப்பு கொடியை காட்டினர்.

கருப்பு கொடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி சிவா ஆதரவாளர்களுடன் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் திருச்சி சிவா வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை உடைத்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கருப்பு கொடி காட்டியவர்கள் மற்றும் கண்ணாடியை உடைத்தவர்களை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

பின்னர், காவல் நிலையத்திலும் தி.மு.கவினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச் செயலுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கட்சியிலிருந்து தி.மு.க நீக்கியுள்ளது. இதுதொடர்பாக, தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருச்சி மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்டத் துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் எஸ்.துரைராஜ், 55-வது வட்டச் செயலாளர் வெ.ராமதாஸ் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்க வைக்கப்படுகிறார்கள்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Post

முற்றிலும் மழைவிட எத்தனை மணி நேரம் ஆகும்? எப்போது கரையை கடக்கும்?

Posted by - December 4, 2023 0
கடந்த 3 மணி நேரத்தில் மிக்ஜாம் புயல் வலுவடைந்துள்ளதாக கூறியுள்ள தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மிக்ஜாம் புயல், நாளை அதிகாலையில் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையைக்…

பொது மாறுதல்களுக்கான ஆசிரியர் கலந்தாய்வு மே 15-ந்தேதி தொடங்குகிறது …..

Posted by - May 12, 2023 0
திடீரென நிர்வாக காரணங்களுக்காக கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணி முதல் மாலை 6 மணிவரை கலந்தாய்வு நடைபெறும். சென்னை: தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள்…

நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு

Posted by - September 13, 2023 0
உடுமலை: நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக கேரளாவில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் நோய் தமிழகத்தில் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள்…

உதய”நிதி”-யை வைத்து ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி – ”புலம்பியது போதும், சட்டை கிழிஞ்சிருச்சா?”

Posted by - May 26, 2025 0
டெல்லிக்கு போனதாக புலம்பியது போதும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் கதறுவதை தமிழ்நாடே ரசிப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…

TAC TV விவகாரம்: “அன்று ஹாத்வே இன்று அரசு கேபிள்” – திமுக அரசு மீது BJP தலைவர் அண்ணாமலை சாடல்

Posted by - November 23, 2022 0
திரு,அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த இரண்டு நாள்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006-2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்நாடு முழுவதும் சுமார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *