திருமணம் ஏன் செய்து கொள்ளவில்லை..? நடிகை ஸ்ருதிஹாசன் பதில்..!

243 0

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தான் தற்போதுவரை திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணத்தை நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகையான ஸ்ருதிஹாசன், பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஆவார். ஸ்ருதிஹாசன் 6வது வயதில் தனது முதல் பாடலை பாடினார். தேவர் மகன் என்ற தனது தந்தையின் படத்தில் இவர் அந்தப் பாடலை பாடினார். இதைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசன் பல்வேறு படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

2011-ஆம் ஆண்டில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்தார் ஸ்ருதிஹாசன். அந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதையடுத்து ஸ்ருதிஹாசன் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அத்துடன் தற்போது ரஜினியின் கூலி படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

ஸ்ருதிஹாசன் சாந்தனு ஹசாரிகா என்பவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில், திடீரென பிரேக்கப் செய்து கொண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இதற்கிடையே ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளுக்கு முன்பு அளித்த பேட்டியில் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில், தற்போதும் தான் அந்த முடிவில் இருந்து மாறவில்லை என்று நடிகை ஸ்ருதிஹாசன் கூறி உள்ளார்.திருமணம் செய்வதை விட ரிலேஷன்ஷிப்பில் இருப்பதையே விரும்புவதாகவும், திருமணமே செய்யமாட்டேன் என்றும் கூறமாட்டேன் என தெரிவித்துள்ளார். Never என்ற வார்த்தையை என்னால் சொல்ல முடியாது, வாழ்க்கை என்பது unpredictable என்றார். எனவே, ஸ்பெஷலான ஒருவர் வந்தால் அதை பற்றி யோசிக்கலாம் என்றும், ஆனால் அது நடக்கும் என்று தனக்கு தோன்றவில்லை என்றும் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார்.

Related Post

வெளியானது பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி!

Posted by - December 28, 2022 0
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்தது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி…

வாரிசு உண்மையில் 200 கோடி வசூல் செய்ததா? இல்லை பொய் கணக்கா

Posted by - January 19, 2023 0
வாரிசு விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பலரும் நடித்திருந்தனர். மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றாலும்,…

குட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்… வைரலாகும் வீடியோ..!

Posted by - April 1, 2023 0
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு குழந்தையின் வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் நடிகர் விஜய் அங்கிள் என்னை பார்க்க வாருங்கள் என ஒரு சிறிய…

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்.. வேற லெவல் அப்டேட்

Posted by - May 2, 2025 0
ஜனநாயகன் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இது அவருடைய கடைசி படமாகும். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலக அவர்…

ரிலீஸ் பிரச்சனை இருந்தாலும் ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் தக் லைஃப்.. இதுவரை எத்தனை கோடி கலெக்ஷன்?

Posted by - June 4, 2025 0
தக் லைஃப் கமல்ஹாசன்-மணிரத்னம் பல வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ள படம் தக் லைஃப். இதில் கமலுடன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *