நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கவும் – திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

333 0

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்றும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை உடனடியாக தொடங்கும்படி திமுக அனைத்து அணிகளின் நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில், திமுக அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், இளைஞர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, சுற்றுச்சூழல் அணி உள்ளிட்ட 23 அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி ஆர் பாலு, முதன்மை செயலாளர் கே என் நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் திமுகவில் உள்ள அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்கும் விதமாக ஐ.பெரியசாமி, கனிமொழி , பொன்முடி, ஆ ராசா உள்ளிட்டோர் ஒவ்வொரு அணிக்கும் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அனைத்து அணிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பாஜகவினர் எதையும் செய்ய தயங்கமாட்டார்கள் என்றும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போது தொடங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

Related Post

பிரபாகரன் மகள் துவாரகா உருவம் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது? சர்வதேச உளவு அமைப்புகள் சந்தேகம்

Posted by - November 28, 2023 0
சென்னை: இலங்கையில் ஈழத்தமிழர்களுக்காக தனி தமிழ்நாட்டை உருவாக்க பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் இயக்கம் ஆயுதம் ஏந்தி போராடியது. 90 சதவீத வெற்றியை பெற்றிருந்த நிலையில் உலகின் பல நாடுகள்…

TVK கட்சிக்கு அஜித் ஆதரவா? Race Car – ஒரே Colour -ல இருக்கே! குழப்பத்தில் நெட்டிசன்ஸ்!

Posted by - November 28, 2024 0
அஜித்தும், விஜயும் சினிமாவுல அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 வருஷத்துக்கு மேல ஆகிருச்சு. ஆரம்பத்தில அஜித் – விஜய் – பிரசாந்த் என மூனுபேருக்கும் போட்டி இருந்துச்சு. அப்புறம்…

திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் – அன்புமணி தேர்தல் பரப்புரை..!!!

Posted by - April 12, 2024 0
திமுக தோல்வி அடைந்தால் தான் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் கிடைக்கும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம்…

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் ஏழை மக்களுக்கு உணவு…

Posted by - May 26, 2023 0
வரும் 28.05.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று பகல் 11 மணியளவில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நகரம், ஒன்றியம் மற்றும் பகுதிகளில் ஒருவேளை (மதிய) உணவு வழங்க ஏற்பாடு…

மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க.. கதறி அழுத மூதாட்டி

Posted by - February 28, 2023 0
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர், தன் மகனும், மருமகளும் சொத்தையெல்லாம் வாங்கிட்டு அடிச்சு வெளிய அனுப்பிட்டாங்க என்று கதறி அழுதார். தமிழ்நாட்டில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *