“நான் முதலமைச்சராக இருக்கும் வரை இதற்கு அனுமதிக்க மாட்டேன்” – சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

136 0

அதையும் மீறி வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தான் முதலமைச்சராக இருக்கும் வரையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி கொடுக்க மாட்டேன் என்றும், அதையும் மீறி வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மதுரை அரிட்டாபட்டியில் மத்திய அரசு வழங்கியிருக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அரசினர் தீர்மானம் கடும் விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க ஏலம் தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு செய்து அனுமதி வழங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது என பேசினார். 2022 ஆம் ஆண்டு தமிழக அரசு பல்லுயிர் தளமாக அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய நிலையிலும், சுரங்க அனுமதி மத்திய அரசால் வழங்கப்பட்டிருப்பதாகவும், அதனை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார். எனவே சுரங்க அனுமதியை திரும்பப் பெறுவதோடு, இனி வரும் காலங்களில் மாநில அரசின் அனுமதியின்றி திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கக் கூடாது என்பதை மத்திய அரசிடம் வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் துரைமுருகன் பேசினார்.இதனைத்தொடர்ந்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன், மதிமுக, விசிக, பாமக, மனிதநேய மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அரசினர் தீர்மானத்திற்கு முழு ஆதரவை தெரிவித்தனர்.  தொடர்ந்து பேசிய பாஜக சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், சுரங்கம் ஏலம் தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசிடம் விளக்கம் கேட்கும்போதே அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தால் இந்த திட்டம் வந்திருக்காது என பேசினார். மேலும் இந்த சுரங்க ஏலம் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் தமிழக பாஜக பேசியிருப்பதாகவும், மக்களின் விருப்பப்படி நல்ல முடிவு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.இதையடுத்து, பேசிய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, 2023 ஆம் ஆண்டே சுரங்க ஏலம் தொடர்பான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு எழுதிய கடிதத்திற்கு போதிய எதிர்ப்பை மாநில அரசு தெரிவிக்கவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் வரும்போதே திமுக எம்.பி.க்கள் போதிய அழுத்தம் கொடுக்கவில்லை எனக்கூறிய எடப்பாடி பழனிசாமி, 2023 ஆம் ஆண்டு துரைமுருகன் எழுதிய கடிதத்தின் விவரங்களையும் வெளியிடவில்லை எனவும் பேசினார்.அதற்கு பதிலளித்து பேசிய துரைமுருகன், ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே இருக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டத்திருத்தம் சுய மரியாதைக்கு சவால் விடுக்கும் செயல் எனவும், நில உரிமைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மத்திய அரசின் இந்த சட்டத்திருத்தம் மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் அமைந்திருப்பதாக கடிதம் எழுதியதாக கூறினார்.பின்னர் பேசிய முதல்வர், இந்த திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், மத்திய அரசு ஏலமே விட்டிருந்தாலும் இந்த திட்டத்தம் நான் முதலமைச்சராக இருக்கும் வரை செயல்படுத்த விட மாட்டேன் எனவும், அதையும் மீறி வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் எனவும் சூளுரைத்தார். கடும் விவாதத்திற்கு பிறகு அரசினர் தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவளிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்த பிறகு ஒருமனதாக தீர்மானம் நிறைவேறுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Related Post

தவெக மாநாட்டு திடலில் எதற்கு இத்தனை தலைவர்களின் பேனர்.. தெளிவில்லாத அரசியல் பாதையில் பயணிக்கிறாரா தளபதி?

Posted by - October 26, 2024 0
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெற இருக்கிறது. ஒட்டுமொத்த தமிழக அரசியல் தலைவர்களின் பார்வையும் கடந்த சில தினங்களாக தளபதியின் மீதுதான் இருக்கிறது. மாநாட்டை…

கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய புகார்.. சாட்டை துரைமுருகனை விடுதலை செய்த நீதிபதி

Posted by - July 12, 2024 0
தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளில் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி…

அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?

Posted by - March 20, 2025 0
தமிழ்நாட்டில் கடந்த 2 நாளில் மட்டும் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

2023 சென்னை வெள்ளத்தை விடுங்க! 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன? இரவில் பறந்த அந்த ஆர்டர்

Posted by - December 13, 2023 0
சென்னை: கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் நடந்தது என்ன என்பது குறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் மிக்ஜாம் புயலால்…

சென்னை விரைந்த சிஎம் ஸ்டாலின்.. தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி – என்ன ஆச்சு?

Posted by - March 4, 2025 0
முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாயார் தயாளு அம்மாளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். சென்னை விரையும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *