சென்னை விரைந்த சிஎம் ஸ்டாலின்.. தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி – என்ன ஆச்சு?

150 0

முதலமைச்சர் ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாயார் தயாளு அம்மாளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

சென்னை விரையும் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் தாயார் தயாளு அம்மாள் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். தாயாரின் உடல்நிலை தொடர்பாக, மருத்துவர்களிடம் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அதோடு, நாகை பயணத்தை முடித்துக்கொண்டு, விரைந்து சென்னை திரும்பியவர் நேரடியாக மருத்துவமனைக்கும் சென்று நலம் விசாரித்துள்ளார். தாயாரின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார். திமுக மூத்த தலைவர்களான துரைமுருகன் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவமனை தரப்பில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

யார் இந்த தயாளு அம்மாள்?

தயாளு அம்மாள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாவது மனைவி ஆவார். இவருக்கு தற்போது 92 வயது என்பது குறிப்பிடத்தக்கது.  கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதி, மு. க. முத்துவை ஈன்றெடுத்த சில ஆண்டுகளில் காலமானார். பின்னர் 1949ஆம் ஆண்டில் கருணாநிதி தயாளு அம்மாளை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி  மு. க. அழகிரி,  மு. க. செல்வி,  மு. க. ஸ்டாலின் மற்றும் மு. க. தமிழரசு என நான்கு பிள்ளைகளை ஈன்றெடுத்தது. திமுகவின் ஆ. ராசா மத்திய அரசில் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த காலத்தில், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் செயதாக புகார் எழுந்தது.  அந்த வழக்குல் தயாளு அம்மாளையும் சேர்த்து மத்திய புலனாய்வுத் துறை குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஈரோடு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி!

Posted by - February 1, 2023 0
ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளராக உள்ளார் K.S.தென்னரசு. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால்…

நடிகை கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு சென்ற முன்னணி தமிழ் ஹீரோ! யார் பாருங்க

Posted by - December 3, 2024 0
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியான நடிகை. தற்போது பேபி ஜான் படத்தின் மூலமாக ஹிந்தியிலும் நுழைந்து இருக்கிறார். பாலிவுட்டில் நுழைந்தது…

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

Posted by - December 5, 2025 0
தாயுமானவர் திட்டத்தில் டிசம்பர் 6, 7, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் முதியோர் மாற்று திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம்…

புத்தாண்டில் தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Posted by - December 28, 2022 0
விஜயகாந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம் தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு.. ஆங்கில புத்தாண்டு அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக அந்த கட்சி தலைமை…

புதிய தலைமுறை முடக்கம் | ”ஊடக சுதந்திரத்திற்கு எதிரான செயல்” – தலைவர்கள் கண்டனம்! #StandWithPT

Posted by - October 7, 2025 0
அரசு கேபிள் இணைப்புகளில் பெரும்பாலான இடங்களில் ‘புதிய தலைமுறை’ தெரியாத சூழலில், இது தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். புதிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *