“நைட்டி”.. மனித நுரையீரலை மசாலா தடவி சாப்பிட்டாராம்.. கல்லீரலை கூட விடல.. வெறிபிடித்த “ஹோமோ” டாக்டர்

285 0

தஞ்சாவூர்:

கும்பகோணம் போலி சித்த மருத்துவர் கேசவமூர்த்தி செய்த காரியத்தை பார்த்து, அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் தஞ்சை போலீசார். அவரது வீட்டில் தோண்ட தோண்ட எலும்புகள் கிடைத்து கொண்டே இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா சோழபுரம் கீழத்தெருவில் வசிப்பவர் கேசவமூர்த்தி (47). கும்பகோணம் அருகே சோழபுரம்மணல்மேடு கிராமத்தை சேர்ந்த 27 வயது அசோக் ராஜனை, இந்த கேசவமூர்த்தி என்பவர் கொலை செய்துவிட்டார்.TamilNadu news in Tamil | Chennai news in tamil | Tamilnadu politics |  தமிழக செய்திகள் | தமிழ்நாடு செய்திகள்

டுபாக்கூர் டாக்டர்:

இவர் முறைப்படி வைத்தியம் படிக்கவில்லை. அரைகுறை வைத்தியத்தை வைத்தே, 50-க்கும் மேற்பட்டோருக்கு சுன்னத் செய்திருக்கிறார். அப்படித்தான் அசோக் ராஜனுக்கும் சுன்னத் செய்துள்ளார். ஆனால், சிகிச்சை தவறாகிவிட்டது. இதனால், அசோக்குக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகவும், கேசவமூர்த்தியிடம் இதை பற்றி கேட்டுள்ளார்.. அப்போதுதான் விவகாரம் துவங்கியிருக்கிறது.

இதுபோக, கேசவமூர்த்திக்கு “ஓரினச்சேர்க்கை” உறவு பழக்கம் இருந்திருக்கிறது. தன்னிடம் சிகிச்சை வந்த அசோக் ராஜனிடமும் ஓரின சேர்க்கை உறவுக்கு கட்டாயப்படுத்தி உள்ளார். ஆனால், அசோக் இதற்கு மறுத்துள்ளார். எனவே, அசோக்குக்கு நீண்ட நேரம், பாலியல் உறவுகொள்ள வீரியம் மிக்க மருந்து ஒன்றை கேசவமூர்த்தி தந்திருக்கிறார். மது போதையில் இருந்த அசோக், அந்த மருந்தை சாப்பிட்டதுமே, இறந்துவிட்டார். அதற்கு பிறகு, அசோக்கை வெட்டிக்கொன்று, வீட்டின் பின்பக்கம் குழிதோண்டி புதைத்துவிட்டார் கேசவமூர்த்தி.

உறுப்புகள்:

இவ்வளவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அவரது வீட்டின் பின்பக்கம் பள்ளத்தை போலீசார் தோண்டி பார்த்தபோது, அசோக்கின் உடல் உறுப்புகளை காணவில்லை. இதனால் பதறிப்போன போலீசார், கேசவமூர்த்தி வீட்டுக்குள் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது, ஒரு பெட்டியில் சில எலும்புகள் இருந்துள்ளன.. இதனால், மேலும் அதிர்ச்சி அடைந்த போலீசார், கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி தோண்ட ஆரம்பித்தனர். அப்போது, ஏராளமான எலும்புகள் கிடப்பதை கண்டு உறைந்து போனார்கள். அசோக் போலவே, மேலும் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட போலீசார், கேசவமூர்த்தி வீட்டில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி ஆய்வு செய்தார்கள்.. முதலில் ஒரு மண்டை ஓடு கிடைத்தது.. அந்த மண்டை ஓடு, சோழபுரத்தில் கடந்த வருடம் காணாமல் போன அனாசின் என்பவரது என்பது உறுதியானது..

இதையடுத்து, கடந்த 2 நாட்களாகவே, தஞ்சை மாவட்ட எஸ்பி முன்னிலையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. சித்த வைத்தியரின் வீட்டின் பின்புறம் முழுக்கவும் தோண்டியெடுக்க உத்தரவிடப்பட்டு, அந்த வேலையும் நடந்து வருகிறது.

போலி டாக்டர் கேசவமூர்த்திக்கு திருமணமாகி, 2 மனைவிகள் இருக்கிறார்கள்.. 2 பேருமே அவருடன் வாழாமல் பிரிந்து போய்விட்டார்களாம். கேசவமூர்த்தி எப்போதுமே, இளைஞர்களுடன் நெருக்கமாகப் பழகி, அவர்களுடன் உறவு கொள்வாராம். இவர் உறவு கொண்ட பல இளைஞர்களை காணவில்லையாம். இப்போது விஷயம் என்னவென்றால், கொலை செய்த அசோக்கின் உடல் உறுப்புகளை சாப்பிட்டாராம் இந்த கேசவ மூர்த்தி.. அசோக்கின் உடலை துண்டு துண்டாக வெட்டி, நுரையீரல், கல்லீரல் ஆகியவற்றை வீட்டிலேயே மசாலா சேர்த்து சமைத்து சாப்பிட்டிருக்கிறார்.. கடந்த வருடம் மாயமான ஆட்டோ டிரைவர் முகமது அனஸ் என்ற 26 வயது இளைஞரையும், இப்படித்தான் கொன்று, அவரது உடல் பாகங்களையும் துண்டு துண்டாக வெட்டிவிட்டாராம்.

உடல் பாகங்கள்:

அனைத்து பாகங்களையும் தனித்தனியாக புதைத்த நிலையில், சில முக்கியமான பாகங்களை மட்டும் கிச்சனுக்கு கொண்டு சென்று மசாலா தடவி சமைத்து சாப்பிட்டாராம். இப்படி மேலும் பலரை கொலை செய்து கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. கேசவமூர்த்தி வீட்டில் நேற்று காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஐந்தரை மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு வீட்டின் முன்பு பகுதி மற்றும் கொல்லைபுறத்தில் இருந்த மூலிகைச்செடி உள்ளிட்ட வாழை மரங்கள் அனைத்தையும் போலீசார் அகற்றினர்.. 3 அடிக்கு மட்டும் பள்ளம் தோண்டி பார்த்தபோது 30க்கும் மேற்பட்ட துண்டுகளாக விரல் அளவிலான எலும்புகள் கிடைத்திருக்கிறது.

மனித எலும்புகள்:

அந்த எலும்புகள் பார்ப்பதற்கு, அச்சுஅசல் ஒரு நாயின் மண்டை ஓடு போலவே இருக்கின்றனவாம்.. இதில் சேகரிக்கப்பட்டவை எல்லாம் மனித எலும்புகளா? முகமதுஅனஸ் உடல் பாகங்களா? அல்லது வேறு இளைஞர்களின் எலும்புகளா? என்று அறிய ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்திருக்கிறார்கள். இதைத்தவிர, கேசவமூர்த்தி வீட்டில் இருந்த ஏகப்பட்ட மருந்து மாத்திரைகள், மூலிகை பொடிகள் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, பெண்கள் பயன்படுத்தும் நகைகள் மற்றும் பயன்படுத்தாத பொருட்கள் கிடைத்திருக்கின்றன..

நைட்டி, டிரஸ்:

இதைத்தவிர, பெண்களின் நைட்டி, டிரஸ்கள் போன்றவையும், கேசவமூர்த்தியின் வீட்டில் கிடைத்திருக்கிறது. அனைத்தையும் 10க்கும் மேற்பட்ட பெட்டிகளில் போட்டு, போலீசார் எடுத்து சென்றிருக்கிறார்கள். இதெல்லாம் யாருடையது என்று தெரியவில்லை.. ஆனால்,நாளுக்கு நாள் கும்பகோணம் சம்பவம் தமிழகத்துக்கே அதிர்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.

Related Post

தவெக தொண்டர்களே! பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் விஜய்? என்னவா இருக்கும்?

Posted by - May 21, 2025 0
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அடுத்த மாதம் வரும் அவருடைய பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல்…

டாக்டர்.ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியில் இடியும் நிலையில் கட்டிடங்கள்- ஆசிரியர் தினம் கொண்டாடும் நிலையில் அவலம்

Posted by - September 4, 2023 0
ராணிப்பேட்டை: முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். இவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற…

தஞ்சை பெரிய கோவிலில் 18 நாட்கள் நடக்கும் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

Posted by - April 17, 2023 0
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர்…

“விரைவில் துணை முதலமைச்சராவார்”- உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்

Posted by - December 14, 2022 0
இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சராக கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில்…

மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

Posted by - June 19, 2025 0
அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *