பழைய உணவு பொருட்களை பயன்படுத்துவதால் விஷமாக மாறும் “சவர்மா”

279 0

அரபு நாடுகளில் இறைச்சி துண்டுகளை உலோக குச்சியில் சொருகி நெருப்பில் சுட்டு சாப்பிடுகிறார்கள். இதில் சில மாற்றங்களை செய்து நமது நாட்டில் ‘சவர்மா’ என்ற பெயரில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.

சிக்கன், முட்டைகோஸ், வெங்காயம், மிளகாய்தூள் மற்றும் பல்வேறு உணவு பொருட்களை கொண்டு தயாரிக்கும் ‘சவர்மா’ வாலிபர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இவற்றில் சேர்க்கப்படும் உணவு பொருட்கள் அனைத்தும் கெட்டு போகாமல் இருந்தால் உடலுக்கு எந்த கேடும் ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் கெட்டுப்போன இறைச்சியை பயன்படுத்தி செய்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு விடுகின்றன. வீட்டிலேயே ஈஸியா சிக்கன் சவர்மா செய்யலாம்… இதோ ரெசிபி!சில நேரத்தில் உயிர் பலியும் ஏற்பட்டு விடுகிறது. கேரள மாநிலத்தில் சமீபத்தில் ‘சவர்மா’ சாப்பிட்ட சிறிது நேரத்தில் பள்ளி மாணவன் ஒருவன் பரிதாபமாக இறந்தான்.

தமிழகத்திலும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் உணவாக ‘சவர்மா’ இருக்கிறது. மாநில தலைநகரான சென்னையில் பலர் விரும்பி சாப்பிடும் உணவாக ‘சவர்மா’ உள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் ‘சவர்மா’ சாப்பிட்ட 14 வயது பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார். அவர் உணவு விஷமாகியதின் காரணமாக இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்களில் சுகாதாரத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அதில் பல கடைகளில் இருந்து பழைய உணவு பொருட்களை சுகாதாரத்துறையினர் கைப்பற்றினர். சில பாக்டீரியாக்கள் உடலுக்குள் சென்ற 6 மணி நேரத்தில் பாதிப்பு அறிகுறிகளை காட்டுகின்றன. சில பாக்டீரியாக்கள் 72 மணி நேரத்திற்கு பிறகு வேலை செய்கிறது. விஷமாகும் உணவு குழந்தைகள் மற்றும் முதியவர்களை அதிகமாக பாதிக்கின்றன. பாதிப்பு தீவிரமடைந்த உடன் அது மற்ற உறுப்புகளை பாதிக்கிறது.

‘சவர்மா’வை பொறுத்தவரை பழைய உணவு பொருட்கள் மற்றும் கெட்டுப்போன இறைச்சியோ மற்றும் ஏற்கனவே தயாரித்த உணவை குளிர்ச்சி அடைய செய்து விட்டு மீண்டும் சூடுப்படுத்தி பயன்படுத்தாமல் இருந்தால் பயப்பட வேண்டியதில்லை என்று உணவுத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Post

கோவைக்கு பதில் மயிலாடுதுறை? கமல்ஹாசனால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்த சிக்கல்

Posted by - February 26, 2024 0
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேரும் பட்சத்தில் கோவை தொகுதி ஒதுக்கப்படும் என தகவல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோயம்புத்தூர் தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியை…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

Posted by - November 13, 2025 0
ஜூலை 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப் படியை உயர்த்தி,…

TN Budget 2025 LIVE: தமிழ்நாடு பட்ஜெட்..! மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி கடன் – ராமேஸ்வரத்தில் ஏர்போர்ட்

Posted by - March 14, 2025 0
தமிழ்நாடு அரசு பட்ஜெட் தொடர்பான தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள தொடர்ந்து pixeltamil.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள். Tamil Nadu Budget 2025 LIVE Updates: ரமேஸ்வரத்தில் புதிய…

சொரியாசிஸ் போல ஏதேனும் தோல் பிரச்சனை இருக்கா? அப்ப வாழைப்பழத் தோலை இப்படி யூஸ் பண்ணுங்க!

Posted by - December 30, 2023 0
சொரியாசிஸ் என்பது ஒரு தோல் நிலை. இது சருமத்தில் செதில் புள்ளிகளை ஏற்படுத்துகிறது. தடிப்புத் தோல் அழற்சிக்கான வாழைப்பழத் தோல்கள் வேலை செய்யக்கூடிய ஒரு நல்ல வீட்டு…

இன்றுடன் விடைபெறும் 2022.. புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

Posted by - December 31, 2022 0
New Year 2023: புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் 2022 ஆம் ஆண்டு இன்றுடன் விடை பெறும் நிலையில், புத்தாண்டை கொண்டாட மக்கள் உற்சாகமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *