பாகிஸ்தானில் துணிகரம் – இந்துக் கோவில்கள் மீது தொடர் தாக்குதல்

221 0

லாகூர்:

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டுகால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது. இந்த கோவிலுக்கு இந்து சமூகத்தினர் சென்று வழிபட்டு வந்தனர்.

மாரி மாதா என்ற பெயரிலான அந்த கோவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. அடுத்த நாள் காலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இரவில் மின்சாரம் இல்லாத நிலையில், புல்டோசர்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கோவிலை இடித்து தள்ளி விட்டுச் சென்றனர். கோவிலின் உட்புற பகுதி முழுவதும் இடித்து தள்ளப்பட்டு உள்ளது. எனினும், வெளிப்புற சுவர்கள் மற்றும் முக்கிய நுழைவு வாயிலை அவர்கள் விட்டு சென்று உள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் வாகனம் ஒன்றும் காணப்பட்டது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் என அங்கிருந்து வெளிவரும் டான் பத்திரிகை தெரிவிக்கிறது. இதேபோல், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் மீது, கொள்ளையர்கள் ராக்கெட் லாஞ்சர்’களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Related Post

அடிக்கடி சாப்ட் டிரிங்ஸ் குடித்தால்?அதன் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

Posted by - January 29, 2024 0
நாம் அருந்திய 10 நிமிடத்தில் இந்த காஃபின் நமது ரத்த நாளங்களில் ஊடுருவும். இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். இன்றைய துரிதமான உலகில் உணவுப்…

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு

Posted by - July 11, 2023 0
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளதாக புவியியல்…

வானொலி நிகழ்ச்சியில் பொதுமக்கள் கோரிக்கை- மணல் புயல் தாக்கி புதையுண்ட கிராமம் மறுசீரமைப்பு

Posted by - July 6, 2023 0
சார்ஜா: சார்ஜா வானொலி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாக பேசுவது வழக்கம். வானொலி…

சீனாவில் காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனை இழந்த காதலன்

Posted by - August 30, 2023 0
பெய்ஜிங்: காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள்…

இது புதிய வைரஸா..? இதுவும் கொரோனா போன்றதா..? தடுப்பூசி ஏதேனும் உள்ளதா..?

Posted by - January 7, 2025 0
ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என்பது ஒரு பொதுவான சுவாச வைரஸ் ஆகும். இது கீழ் மற்றும் மேல் சுவாச நோய்த்தொற்றுகளை (சளி போன்றது) ஏற்படுத்துகிறது. இது பொதுவாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *