பிறந்தது டிசம்பர்… இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வர உள்ள புதிய விதிகள்.!

219 0
எனவே ஒவ்வொருவரும் என்ன விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்வது முக்கியம். அந்த வகையில் இந்த 2022-ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் 1-ஆம் தேதி முதல், இந்திய குடிமக்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நடைமுறைக்கு வர உள்ள சில முக்கிய மாற்றங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். டிசம்பர் 1 முதல் நடைமுறைக்கு வர உள்ள மாற்றங்கள் கீழே:பஞ்சாப் நேஷ்னல் பேங்க் ஏடிஎம் கார்டு: நீங்கள் பஞ்சாப் நேஷ்னல் பேங்க் வாடிக்கையாளர் என்றால் உங்களுக்கு இது முக்கியமான அப்டேட் ஆகும். ஏனென்றால் மோசடியில் இருந்து உங்களை பாதுகாக்க, டெபிட் கார்டை பயன்படுத்தி ATM-ல் பணம் எடுப்பதற்கான நடைமுறையை பஞ்சாப் நேஷ்னல் பேங்க் திருத்தியமைத்துள்ளது. இப்போது உங்கள் கார்டை ATM மெஷினில் இன்சர்ட் செய்த பின் , உங்கள் ரிஜிஸ்டர்ட் மொபைல் நம்பருக்கு OTP வரும். உங்களுக்கு தேவைப்படும் பணத்தை எடுக்க இந்த OTP-ஐ என்டர் செய்து வழக்கம் போல ஏடிஎம் கார்டின் பின் நம்பரை பயன்படுத்தவும்.ஜீவன் பிரமான் (வாழ்க்கை சான்றிதழ்): ஓய்வூதியம் பெறுபவர்கள் தாங்கள் உயிர் வாழ்வதை உறுதிப்படுத்துவதற்கான வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 30 நவம்பர் 2022 ஆகும். இந்தநிலையில் நவம்பர் 30 தேதிக்குள் ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்கவில்லையென்றால் அவர்களது பென்ஷன் நிறுத்தப்படலாம்.LPG விலைகள்: நவம்பர் மாதத்தில் கமர்ஷியல் LPG -யின் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.115 வரை குறைக்கப்பட்டது. எனினும் கடந்த ஜூலை முதல் டொமஸ்டிக் LPG சிலிண்டரின் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. இந்நிலையில் ஆண்டின் கடைசி மாதமான இந்த டிசம்பரில் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் (oil making companies) டொமஸ்டிக் சிலிண்டர்களின் விலையை குறைக்க கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ரயில் அட்டவணையில் மாற்றங்கள்: டிசம்பர் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குளிர்காலம் தீவிரமாக தொடங்குகிறது. இந்த குளிர் சீசனில் மூடுபனியும் அதிகரிக்கத் தொடங்குகிறது. இதனால் ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்படும். எனவே பல ரயில்களை ரத்து செய்ய இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பனிமூட்டம் காரணமாக ரயில்வே தனது நேர அட்டவணையை மாற்றும் என்பதால் டிசம்பர் மாதத்தில் ரயில்வே நேர அட்டவணை திருத்தம் செய்யப்பட்டு, புதிய நேர அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் டிசம்பர் 1-ல் வெளியாகலாம்.வங்கி விடுமுறைகள்: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கி விடுமுறைப் பட்டியலின்படி, டிசம்பர் மாதம் மொத்தம் 14 விடுமுறை நாட்கள் வங்கிகளுக்கு இருக்கின்றன. இதில் வார இறுதி நாட்கள், இரண்டாவது/நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்கள் அடங்கும். எனவே பேங்கிற்கு செல்லும் முன் வேலை நாளா அல்லது விடுமுறை நாளா என்பதை உறுதிப்படுத்தி கொண்டு செல்லுங்கள்.

Related Post

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

Posted by - November 13, 2025 0
ஜூலை 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு, இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப் படியை உயர்த்தி,…

ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒரே ஆதார் எண்ணுடன் இணைக்கலாமா?

Posted by - November 28, 2022 0
டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் எண்களை மின் இணைப்புடன் இணைக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழகத்தில் மொத்தம் 2.30…

திமுக அரசை கண்டித்து போராட்டத்தை அறிவித்தது அதிமுக..!!

Posted by - March 9, 2024 0
போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ள்ளது. இதுகுறித்து அதிமுக…

திருச்சி சிவா, கே.என்.நேரு ஆதரவாளர்கள் மோதல்- தி.மு.க முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்

Posted by - March 16, 2023 0
திருச்சியில் தி.மு.க கட்சியினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீடு எஸ்.பி.ஐ காலணியில் அமைந்துள்ளது. அப்பகுதியில் இறகு பந்து மைதானத்தை…

பொதுச்செயலாளரான எடப்பாடி… இனிப்பு வழங்கிய அமைச்சர் சேகர் பாபு!!

Posted by - March 29, 2023 0
பாராமுகமாக இருந்த வடசென்னையை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அனைவரும் பார்க்கும் முகமாக மாற்றி வருகிறார்.  மாநகராட்சி பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தென்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *