பொதுச்செயலாளரான எடப்பாடி… இனிப்பு வழங்கிய அமைச்சர் சேகர் பாபு!!

223 0

பாராமுகமாக இருந்த வடசென்னையை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அனைவரும் பார்க்கும் முகமாக மாற்றி வருகிறார்.  மாநகராட்சி பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம் தென் சென்னைக்கு நிகராக வட சென்னையை மாற்றும் பணி 8 கால் வேகத்தில் நடைபெறும்.

அயனாவரம் சோலை அம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காவை அமைச்சர் சேகர்பாபு, வெற்றி அழகன்  எம்.எல்.ஏ உள்ளிட்டோர்  திறந்து வைத்தனர்.  ரூபாய் 75.41 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு திடல்கள், நடைமேடைகள், அமரும் கல் நாற்காலி தேகப் பயிற்சி மேற்கொள்ளும் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளது.aidmk sekarbabu

சிறுவர் பூங்காவை திறந்து வைத்த பின்னர் அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்ட அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்,

அனைத்து மாநகராட்சி பூங்காக்களையும் அழகுப்படுத்தும் நோக்கில் இன்றைய அரசு செயல்பட்டு வருவதாகவும், பூங்காக்களில் நடைபாதை விளையாட்டு மட்டுமில்லாமல் உடற்பயிற்சி செய்வதற்கான மையமும் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர் அனைத்து பயன்பாடுகளும் உடைய இது போன்ற பூங்காக்கள் அமைவது மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று இருக்கிறது எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் பாராமுகமாக இருந்த வடசென்னையை முதலமைச்சர் மு.க

ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு அனைவரும் பார்க்கும் முகமாக மாற்றி வருகிறார் என்றும் தென் சென்னைக்கு ஈடாக வட சென்னையை மாற்றும் பணியில் முழுவீச்சில் எட்டு கால் பாய்ச்சலில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கழிவுநீர், சாலை வசதி, போக்குவரத்து நெரிசல் உட்பட அடிப்படை வசதிகள் சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், கொரோனா தொற்று மழை வெள்ளம் போன்ற காரணத்தினால் பணிகள் தாமதம் ஆகியிருக்கிறது விரைவில் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளரானதைக் குறித்த கேள்விக்கு முதலில் எவ்வித பதிலும் அளிக்காமல் சென்ற அமைச்சர் சேகர் பாபு திரும்பி வந்து அது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருக்கு லட்டு கொடுத்து சென்றார்.  அமைச்சரின் இச்செயல் அரசியல் வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Post

Generated Image November 22 2025 5 37PM

TN Rain Alert: கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Posted by - November 22, 2025 0
TN Weather Update Today: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல். தெற்கு அந்தமான் கடல் பகுதியில்…

உஷார்: அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த 32 மாவட்டங்களில் மழை.. எங்கெங்கு தெரியுமா?

Posted by - October 14, 2024 0
TN Rain | 16 – 17 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில்…
SUN TV SERIAL

ஈஸ்வரிக்கு அதிரடியாக சவால் விட்ட ஜனனி.. ப்ரோமோ

Posted by - May 21, 2026 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது பார்கவி மற்றும் தர்ஷன் திருமண விவகாரத்தில் ஈஸ்வரி மற்றும் ஜனனி இடையே பெரிய மோதலாக மாறி இருக்கிறது. ஏற்கனவே பார்கவி திருமணம்…

பருவமழை தீவிரம்: தமிழகத்தில் மேலும் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

Posted by - November 23, 2023 0
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில்…

கர்ப்பிணிகளே உஷார்; மீண்டும் படையெடுக்கும் கொரோனா – சுகாதாரத்துறை கூறியது என்ன தெரியுமா.?

Posted by - June 7, 2025 0
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகாதாரத்துறை ஒரு அறிவுறுத்தலை கொடுத்துள்ளது. அது என்ன தெரியுமா.? நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *