பல ஆண்களுடன் தொடர்பு.. மருமகன் உதவியுடன் மகளை கொன்ற தாய் – 3 மாதத்துக்கு பின் சிக்கியது எப்படி?

224 0

சென்னை காசிமேடு பெண் கொலையை தற்கொலை என நாடகமாடிய குடும்பத்தினர் போலீசில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டம் பாலகிருஷ்ணா நகரில்  வசித்து வருபவர்  செல்வம். இவருக்கு சுமித்ரா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பெண்ணின் தாயான ரெஜினா, தந்தை செல்வகுமார் என அனைவரும் ஒன்றாக ஓரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்

இந்நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 17ஆம் தேதி அன்று குடும்பதகராறு காரணமாக சுமித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என பெண்ணின் கணவன், பெற்றோர் என மூவரும் கூறியுள்ளனர். சுமித்ராவின் உடல்  பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்கொலை வழக்காக பதியப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதனையடுத்து பெண்ணின் தாய், தந்தை, கணவரிடம் காசி மேடு போலீஸார் கிடுக்குப்பிடி விசாரணைகளை மேற்கொண்டார்.அருகாமையில் வசித்திருப்பவர்களிடம் தாய் தனது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கணவர் தனது நண்பர்களிடம் பூச்சு மருந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் முன்னுக்கு பின் முரணாக கூறியுள்ளார். மேலும்  சுமித்ராவின் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியில் அகால மரணம் என்பதற்கு பதிலாக இயற்கை எய்தினார் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.மேலும் அரசு ஸ்டான்லி மருத்துவர் ஜனனியின் உடற்கூராய்வு முடிவில் ஆய்வாளரின் 20 கேள்விகளுக்கும் இது கொலை என உறுதிபடுத்தவே ஆய்வாளர் விசாரணையை தீவிரபடுத்தினார்.Copy of 1 Frame 3 13

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தந்தை -தாய்

காவல்துறையினர் தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. மகளை கழுத்தை நெறிந்து கொன்றதாக அவரது தாய் ஒப்புக்கொண்டார். அவர் போலீஸாரிடம் கூறிய தகவலில், “ என் மகளுக்கு பல ஆண்களோடு தகாத உறவு இருந்தது. இதனை நான் தட்டிக்கேட்டேன் இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது என் மகள் பூஜை அறையில் இருந்த மணியை கொண்டு என்னை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த நான் திரும்பி கழுத்தை நெறித்தேன் அப்போது என் கணவர் கால்களையும் எனது மருமகன் கையை இறுக்க பிடித்துக்கொண்டனர். மூவரும் சேர்ந்து மகளை கொலை செய்தோம் என ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து மூவரும் நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்தனர். ஆய்வாளரின் 20 கேள்விகளிலேயும் உடற்கூறாய்வில் அரசு மருத்துவரின் அறிக்கையிலும் மூவரும் சிக்கியுள்ளனர். பலருடன் தகாத உறவில் இருந்ததை பலமுறை கூறியும்  மகள் கேட்காததால் கட்டிய கணவனின் உதவியாடு

கொலை செய்த சம்பவம் தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு – ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?

Posted by - May 28, 2025 0
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், ஞானசேகரன் குற்றவாளி…

திருடச்சென்ற வீட்டில் பிரியாணி, மது சாப்பிட்டு தூக்கம்போட்ட வாலிபர்

Posted by - February 17, 2023 0
திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று காலை வேலை நிமிர்த்தமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மதிய நேரத்தில்…

கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து : தாராபுரம் அருகே பரபரப்பு

Posted by - May 4, 2024 0
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக சமூகவலைதளங்களில் பேசிய விவகாரத்தில் யூ டியூபர் சவுக்கு சங்கர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல…

தவெகவின் முதல் பொதுக்குழு..! விஜய் பேசப்போவது என்ன? மாநில சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு?

Posted by - March 28, 2025 0
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில்,…

இனியாச்சும் கவனமா இருங்க – வான் சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு வேதனை தெரிவித்த விஜய்..!!

Posted by - October 8, 2024 0
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமான படை சார்பில் பிரம்மாண்டமாக நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிப்பதாகவும், இனி வரும் காலங்களில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *