பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்திய மத்திய அரசு- எவ்வளவு?

146 0

இந்த கலால் வரி உயர்வால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இது பொது மக்களைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச அளவில், கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்த நிலையில், விலைக் குறைப்புக்குப் பதிலாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

 

பெட்ரோல், டீசல் விலை உயருமா?    

 

இந்த கலால் விலை உயர்வு நாளை (ஏப்ரல் 8ஆம் தேதி) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கலால் வரி உயர்வால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று தகவல் வெளியாகி உள்ளது.

 

இதுகுறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’கலால் விலை உயர்வால், சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாது என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன’’ என்று பதிவிட்டுள்ளது.

 

 

அதே நேரத்தில் மத்திய அரசின் வரி விதிப்பால், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன் பறிக்கப்படுவதாகப் பொது மக்கள்  குற்றம் சாட்டி வருகின்றனர். கச்சா எண்ணெய் விலைக் குறைப்பால், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரியை உயர்த்தி விலைக் குறைப்பு தடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

கடும் வீழ்ச்சி அடைந்த கச்சா எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை 4.5% குறைந்து, ஒரு பீப்பாய் 59.16 டாலருக்கு விற்கப்படுகிறது. ஃப்ரண்ட் கச்சா எண்ணெயும் 4.39 சதவீதம் விலை குறைந்து, 62.7 டாலருக்கு விற்பனை ஆகிறது.

Related Post

Hyundai i20: ப்ரீமியம் ஹேட்ச்பேக்கின் விலையை குறைத்த ஹுண்டாய்..!

Posted by - February 6, 2026 0
 Hyundai i20 2026 Price Change: இந்திய சந்தையில் மாருதியின் பலேனோ,டாடாவின் ஆல்டோஸ் உடன் மோதும் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஐ20 காரின் விலையை ஹுண்டாய் குறைத்துள்ளது. 25 ஆண்டுகளில்…

குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொன்ற காதலி…!!

Posted by - April 17, 2023 0
குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலியே காதலனைக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர்  சஞ்சீவ் குமார்…

சீரமைப்பு பணிகள் நிறைவு – 51 மணி நேரத்திற்கு பிறகு ரெயில் சேவை தொடக்கம்

Posted by - June 5, 2023 0
புவனேஷ்வர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் 17 ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த…

ChatGPT எப்படி நமக்கு உதவும்?ChatGPT AI – உங்கள் கையிலும் இப்போது!

Posted by - December 20, 2025 0
இன்றைய டிஜிட்டல் உலகில், Artificial Intelligence (AI) ஒரு முக்கிய கருவியாக வளர்ந்து வருகிறது. அதில் ChatGPT ஒரு பிரபலமான AI மெஷின் ஆகும். தமிழர்கள் குறிப்பாக…

வியாழக்கிழமை சாய்பாபா வரலாறு….

Posted by - September 11, 2025 0
ஆரம்ப வாழ்க்கை சாய்பாபாவின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடம் தெளிவாக தெரியவில்லை. 1838-ல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. அவரது மதம், குடும்பம் பற்றிய விபரம் மர்மமாகவே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *