மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் திருத்தேருடன் மிதந்த மதுரை…!

200 0

உலகப் பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனர்.

இந்நிலையில், இந்த விழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று திருத்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சியம்மனும், பிரியாவிடை அம்மன் சமேதமாக கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுந்தரேஸ்வரர் அழைத்து வரப்பட்டு அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன.The world famous Madurai Meenakshi Amman Temple Chithirai Festival started  with a bang | மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் - மாசி வீதிகளில் மக்கள்  வெள்ளம்

இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரியதேரில் பிரியாவிடை சமேதமாக சுந்தரேஸ்வர் சிறப்பு அலங்காரத்திலும், மீனாட்சியம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். இதையடுத்து திருக்கல்யாணத்தை காண முடியாத முதியோர்கள் மற்றும் பக்தர்கள் காணும் வகையில், சுவாமியும், மீனாட்சியம்மனும் மணக்கோலத்தில் எழுந்தருளி வலம் வருகின்றனர்.

தேரோட்டம் தொடங்குவதற்கு முன் அங்குள்ள தேரடி கருப்பணசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து பெரிய தேர் புறப்பட்டது. அதைத் தொடர்ந்து மீனாட்சியம்மன் எழுந்தருளிய சிறிய தேரும் புறப்பட்டது. திருத்தேருக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்ட யானை செல்ல, அதைத் தொடர்ந்து விநாயகர், முருகன் மற்றும் நாயன்மார்களும் எழுந்தருளிய தேர்கள் செல்கின்றன.

இந்த சித்திரை திருத்தேர், நான்கு ரத வீதிகளான கீழமாசி வீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்குமாசி வீதிகளில் வலம் வந்து பின்னர் கீழமாசி வீதியில் உள்ள தேரடியை வந்தடையும். மாசி வீதிகளில் ஆடியசைந்து வரும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் சிவ பக்தர்கள் வந்தனர். சிவ பக்தர்கள் சங்கு ஊதியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் பதிகம் பாடியபடியும், பக்தி கோஷங்களை எழுப்பியபடியும் வந்தனர். தொடர்ந்து தற்போது அனைவரும் இணைந்து தேரினை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

Related Post

2026-ல் கப்பு முக்கியம் பிகிலு.. அரசியல் என்ட்ரி பற்றி மறைமுகமாக சொன்னாரா விஜய்?

Posted by - November 2, 2023 0
லியோ விஜய் அரசியலுகு வர போகிறார் என நீண்டகாலமாக கூறப்பட்டு வருகிறது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை விரிவுபடுத்தி அரசியலில் நுழைவதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் செய்து…

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான்.. புதிய வீடியோவால் பரபரப்பு..!

Posted by - October 21, 2024 0
குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் பகிர்ந்திருந்தார். யூடியூபர் இர்பானுக்கு குழந்தை பிறந்த வீடியோவை வெளியிட்ட நிலையில்,…

வட மாநிலங்களில் கனமழை- தமிழ்நாடு முழுவதும் லோடு கிடைக்காமல் 2 லட்சம் லாரிகள் நிறுத்திவைப்பு

Posted by - July 10, 2023 0
நாமக்கல்: இந்தியா முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது. தமிழகத்தில் 4 லட்சத்து 75 ஆயிரம் லாரிகள் இயங்குகிறது. இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளீனர்…

“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!

Posted by - January 29, 2025 0
பிரபாகரனிடம் பெரியார் தொண்டர்கள் போகாதீர்கள். நீங்கள் வைத்திருப்பது பெரியார் எனும் வெங்காயம். என் தலைவன் பிரபாகரன் கையில் இருப்பது வெடிகுண்டு. பிரபாகரன் கொடுத்த வெடிகுண்டை வைத்திருக்கிறேன் எனவும்…

தி.மு.க.வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்டு காரணம் சொன்ன சத்யராஜ் மகள்!

Posted by - January 19, 2025 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் ஏன் தி.மு.க.வில் இணைந்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் சத்யராஜ். தமிழ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *