மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

149 0

அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்தார்.

அப்போது, அரசுக்கு அளிக்கும் விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் முடிவெடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிலளிக்குமாறு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்ட தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், அரசாணையின்படி 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பரிசீலிக்காததால் ஏராளமான பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாக தெரிவித்தார்.

மேலும், 30 நாட்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.

இதனை கேட்ட அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், இந்த விவகாரத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நீதிமன்றத்தில் உறுதி அளித்தார்.

Related Post

புத்தாண்டில் தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்

Posted by - December 28, 2022 0
விஜயகாந்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கலாம் தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு.. ஆங்கில புத்தாண்டு அன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக அந்த கட்சி தலைமை…

மீனுடன் “இதை” சாப்பிடாதீங்க.. முள்ளங்கியுடன் சேர்க்க கூடாத பொருள் இதுதான்.. கீரை + தயிர் = விஷம்

Posted by - December 2, 2023 0
சென்னை: மீன்கள் பல நன்மைகளை நமக்கு தந்தாலும், எந்தெந்த பொருளுடன் மீனை சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா? 2 வேறு உணவுப்பொருட்கள் ஒரே குணத்தை பெற்றிருந்தால், அவை…

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி! அண்ணாமலை பதவி பறிக்கப்பட்ட உடனே அறிவிப்பு!

Posted by - April 11, 2025 0
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைப்பது உறுதியாகியுள்ளது. இதை அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி இணைந்து அறிவித்தனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

பணிநேரம் முடியும்வரை ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை.. அதிரடி உத்தரவு

Posted by - March 29, 2023 0
விடைத்தாள் திருத்தும்போது தேவையின்றி பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களை திருத்தும்போது ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள்…

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா…? அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த விளக்கம்..!

Posted by - June 12, 2023 0
சென்னையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *