11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாகுமா…? அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த விளக்கம்..!

246 0

சென்னையில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில் தெரிவித்துள்ளார்.

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டது. வெயில் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்கும் தேதி அடுத்தடுத்து இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகள் காலை முதலே ஆர்வமுடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெயகோபால் கரோடியா பெண்கள் மேல்நிலை பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.ஜூலை மாதம் இறுதிக்குள் சீருடை வழங்கப்படும் என்றும், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி நிதிநிலைமை சரியான பின்னர் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து குறித்து மாநில கல்வி கொள்கை வடிவமைத்த பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related Post

நடிகை கீர்த்தி சுரேஷை பெண் கேட்டு சென்ற முன்னணி தமிழ் ஹீரோ! யார் பாருங்க

Posted by - December 3, 2024 0
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் பிஸியான நடிகை. தற்போது பேபி ஜான் படத்தின் மூலமாக ஹிந்தியிலும் நுழைந்து இருக்கிறார். பாலிவுட்டில் நுழைந்தது…

தீபாவளி ஸ்பெஷலாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் படங்கள்- முழு விவரம் இதோ

Posted by - November 1, 2023 0
தீபாவளி ஸ்பெஷல் தொலைக்காட்சிகளில் எல்லா மாதங்களும் சீரியல்கள் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் ஏதாவது ஒரு ஸ்பெஷல் தினம் வந்துவிட்டால் போதும் படங்களாக ஒளிபரப்பி விடுவார்கள். அப்படி…
Generated Image November 14 2025 10 28AM

நான் கைதாகவில்லை, நடந்தது இதுதான்.. பிக் பாஸ் தினேஷ் உண்மையை விளக்கி வெளியிட்ட வீடியோ

Posted by - November 14, 2025 0
சீரியல் நடிகர் தினேஷ் தமிழ் சின்னத்திரையில் முக்கிய நடிகர்களில் ஒருவர். அவர் பிரபல நடிகை ரச்சிதாவை காதல் திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.…

இனிமே தாறுமாறா கரண்ட் பில் உயராது..

Posted by - August 11, 2025 0
தமிழ்நாட்டில் திடீரென வீடுகளில் அபரிமிதமான மின்கட்டணம் வருவதை தடுக்க தமிழக அரசு புதிய நடைமுறையை செயல்படுத்த உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் தற்போது மின்மீட்டர் மூலமாக மின்சார…

EBயை ஆதாருடன் இணைக்கவில்லையா? மின் கட்டணம் செலுத்த அவகாசம்… மின்சார வாரியம் அறிவிப்பு..

Posted by - November 26, 2022 0
ஆதார் எண்ணை இணைக்காதவர்களால் மின் கட்டணம் செலுத்த இயலவில்லை. ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர், மின் கட்டணம் செலுத்துவதற்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதாக மின்வாரியம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *