முரல் மீன்.. மீனிலேயே சூப்பர் இதுதான்.. எலும்புகளை உறுதியாக்கும் ஜிலேபி மீன்கள் தெரியுமா? அருமை

198 0

சென்னை:

கடல்வாழ் உயிரினங்களில், ஏராளமான சத்துக்கள் நிறைந்திருந்தாலும், கால்சியம் தரக்கூடிய மீன்கள் என்னென்ன தெரியுமா? எலும்புகள் பலம் பெறுவதுடன் நன்றாக வளர்ச்சி பெறவும் உதவக்கூடிய கால்சியம் சத்துக்களை, எந்தெந்த மீன்களில் நிறைந்துள்ளன?

கடலில் இருந்து பிடிக்கப்படும் மீன்களும், அவைகளின் முட்களும் எப்போதுமே சற்று பெரிதாக இருக்கும். ஆனால் குளத்து, பண்ணைகளில் மீன்களில் முள் சிறியதாக காணப்படும்.மீனில் சூப்பர் இதுதான்.. முரல் மீனின் ஆச்சரியம்.. எலும்புகளை உறுதியாக்கும்  ஜிலேபி மீன்கள்.. அருமை | Do you know Health Benefits of Mural Fish and What  are the types of ...

உப்பு நீர்:

அதேபோல, கடல் மீன்கள் உப்பு நீரில் வளர்வதால், சோடியத்தின் அளவும் அதிகமாக இருக்கும். இது நம்முடைய உடலுக்கு தேவைப்படும் சத்தாகும்.. ஆனால் குளத்து, பண்ணை மீன்களில் சோடியம் மிகவும் குறைவு. அதேபோல, கடல் மீன்களில் உள்ள கால்சியம், மற்ற மீன்களில் இருப்பதில்லை..

அந்தவகையில், இந்த மீன்களில் மட்டுமே கால்சியம் அதிகமாக உள்ளது என்று சொல்வதற்கில்லை.. எல்லா வகையான மீன்களிலும் கால்சியம் உள்ளது. எனினும், 3 வகையான மீன்களில் சற்று கூடுதல் கால்சியம் உள்ளதாக கூறப்படுகிறது. முதலாவதாக, சால்மன் மீன்களை சொல்லலாம்.. தலைமுடி, தோல், மூட்டுகள், மூளை போன்ற உறுப்புகள் ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த சால்மன் வகை மீன் உதவுகிறது..

கால்சியம்:

அதேசமயம், வைட்டமின், தாதுக்கள், ஒமேகா 3 போன்றவற்றுடன் கால்சியம் சத்தும் இந்த சால்மன் மீனில் அதிகமாக உள்ளதாம்.. அதாவது சால்மீனில் மட்டும் 340 மிகி கால்சியம் இருக்கிறது என்கிறார்கள்.

இதற்கு அடுத்தபடியாக கெண்டை மீன்கள் எனப்படும் ஜிலேபி மீன்களை சொல்லலாம். சால்மன் மீன்களுக்கு அடுத்தபடியாக, இதில், மீனிலும் கால்சியம்அதிகமுள்ளதால், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்துக்கும், உறுதித்தன்மைக்கும் உதவியாக இருக்கிறது. ஜிலேபியை உணவில் எடுத்து கொள்வதால், புற்றுநோய் உருவாவதற்கான அபாயங்களும் குறைக்கப்படுகின்றன.. சார்டின் வகை மீன்கள் கால்சியம் சத்தில் முதல் இடம் பிடிக்கிறது. இதில், முரல் மீன்களையும் சேர்த்து கொள்ளலாம்.. ராமநாதபுரம் மாவட்டத்தில், கரைவலையில் முரல் மீன்கள் முட்டிக் கொண்டு வந்தாலே மீனவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பார்கள்.. அந்த அளவுக்கு அரிதான மீனாகும்..

பற்கள், எலும்புகள்:

இதில், வைட்டமின் D, புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, ஜிங்க், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் என அத்தனை ஊட்டச்சத்துக்களும் உள்ளன.. ஒமேகா-3 அமிலம் அதிகமுள்ள மீன்களில், இந்த முரால் மீனும் ஒன்று. கால்சியம் அதிகமுள்ளதால், எலும்புகள், பற்களுக்கு உறுதிதரக்கூடியது

இந்த மீன்கள் எல்லாம் இருந்தாலும்கூட, மீன் முள்ளுகள் அல்லது மீன் எலும்புகளில் தான் கால்சியம் சத்து அதிகம் இருக்கிறதாம்.. இதில், 50 கிராம் சார்டின் உண்பதால் 340 மிகி அளவு கால்சியம் கிடைக்கிறது.

Related Post

அகத்தை சுத்தப்படுத்தும்! விஷத்தையே முறிக்கும்! அகத்தி கீரையை இந்த கறியுடன் மட்டும் சாப்பிடாதீர்கள்!

Posted by - January 8, 2024 0
சென்னை: அகத்தி கீரை நுரையீரலை பாதுகாக்கும் கீரையாகும். இதை யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக் கூடாது தெரியுமா? அகத்தையே சுத்தப்படுத்தும் கீரைதான் அகத்திக் கீரை என்பார்கள். இந்த…

தாய்கோ வங்கியில் ரூ. 94 லட்சம் மோசடி- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

Posted by - August 5, 2023 0
சேலம்: சேலம் 4 ரோடு அருகே தாய்கோ வங்கி உள்ளது. இங்கு 2010-ம் ஆண்டு தொடங்கி 2020 வரை போலி நககைளை அடகு வைத்து ரூ. 94…

”தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா… மக்களை ஏமாற்றும் பட்ஜெட்…” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Posted by - March 20, 2023 0
தமிழக பட்ஜெட்டை புறக்கணித்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாடு பட்ஜெட் மக்களை ஏமாற்றும் மின் மினிப்பூச்சி பட்ஜெட் என எதிர்க்கட்சி…

மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் – அரசு அறிவிப்பு

Posted by - March 11, 2025 0
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சுய உதவிக்குழு பெண்கள் இனி, லக்கேஜ்களுடனும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தும்…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அவலம்.

Posted by - December 12, 2025 0
மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையில் நிலவும் சேவை குறைபாடுகளை களைய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்ட அரசு தலைமை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *