தாய்கோ வங்கியில் ரூ. 94 லட்சம் மோசடி- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

210 0

சேலம்:

சேலம் 4 ரோடு அருகே தாய்கோ வங்கி உள்ளது. இங்கு 2010-ம் ஆண்டு தொடங்கி 2020 வரை போலி நககைளை அடகு வைத்து ரூ. 94 லட்சம் மோசடி நடந்தது தெரிய வந்தது. இது குறித்து அப்போதைய வங்கி மேலாளர் தெய்வசிகாமணி என்பவர் சேலம் மாநகர குற்றப்பிரி்வு போலீசில் புகார் அளித்தார்.கோவையில் பண ஆசையை தூண்டி ரூ. 300 கோடிவரை மோசடி - என்ன நடந்தது? - BBC News  தமிழ்

வங்கி நகை மதிப்பீட்டாளரான கருப்பூர் தண்ணீர் தொட்டியை சேர்ந்த சக்திவேல் 60 உள்பட 25 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாருக்கு பயந்த சக்திவேல் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அதன் பிறகு இந்த வழக்கு வணிக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 16 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.

மோசடியில் ஈடுபட்ட ஒருவர் அதற்கான தொகையை செலுத்திவிட்டார். 4 பேர் முன் ஜாமீன் பெற்றுவிட்டனர். மேலும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த சின்ன திருப்பதி சரவணன் (53), ரூ.82 ஆயிரம் மோசடி செய்த அரிசிபாளையம் கிேஷார்குமார் (42), 1 லட்சத்து 61 ஆயிரம் மோசடி செய்த புது கல்லாங்குத்து புதூரை சேர்ந்த சுகவேனேஸ்வரன் (42) ஆகிய 3 பேரும் நேற்று கைது செய்ப்பயட்டனர். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Post

இரவு நேரத்துல நெஞ்செரிச்சல் ரொம்ப தொல்லை பண்ணுதா? இப்படி பண்ணுங்க அந்த பிரச்சினையே வராது…!

Posted by - December 21, 2023 0
ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) என்றும் அழைக்கப்படும் இரவுநேர நெஞ்செரிச்சல், அசௌகரியமாகவும் தூக்கத்தை சீர்குலைக்கும். பொதுவாக நெஞ்செரிச்சல் அதிக அமில உணவுகளை சாப்பிட்ட…

வாடகை வீட்டுதாரர்கள்.. அப்பார்ட்மென்ட்வாசிகள்.. இந்த 2 மேட்டரையும் மறக்காதீங்க.. சென்னை புயலின் பாடம்

Posted by - December 6, 2023 0
சென்னை: சென்னையின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாகி வருகின்றன. சென்னையில் பெய்த மழையானது,…

செயலற்று கிடக்கும் மாநகராட்சி;கும்பகோணத்தில் நாய்கள் தொல்லை – பொதுமக்கள் அச்சம்!

Posted by - February 22, 2025 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலக்காவேரி பகுதியில் அளவுக்கு அதிகமான தெருநாய்கள் சுற்றித்திரிவதால்…

நிலக்கடலை.. இதயத்தை காக்கும் அட்டகாசமான வேர்க்கடலை.. ஆனா “இவங்க” மட்டும் நிலக்கடலையை தொடவே கூடாதாம்

Posted by - December 14, 2023 0
சென்னை: பல்வேறு சத்துக்களை கொண்டிருக்கும் நிலக்கடலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? யாரெல்லாம் நிலக்கடலை சாப்பிடக்கூடாது? தெரியுமா? மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக விளங்கக்கூடியது வேர்க்கடலை என்று சொல்லக்கூடிய…

“வாக்குறுதி எண் 311… ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோருவோர் மீது ஒடுக்குமுறையா?

Posted by - December 31, 2025 0
சென்னை: ‘சம வேலைக்கு சம ஊதி​யம்’ கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. அரையாண்டுத் தேர்வு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *