யாரெல்லாம் கொய்யா பழம் சாப்பிடக்கூடாது..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

218 0

கொய்யாவிற்கு அலர்ஜி இருக்கும் நபர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள். தாய்ப்பால் கொடுப்பவர்கள் அல்லது கீழ்காணும் உடல்நல குறைபாடுகள் இருப்பவர் கொய்யா சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

அருமையான சுவை மற்றும் மலிவு விலையில் கிடைக்க கூடிய மிகவும் சத்தான பழங்களில் ஒன்று கொய்யா. இதனை காயாக இருக்கும் போதும் அப்படியே சுவைத்து சாப்பிடலாம், பழமாக இருக்கும் போதும் சுவைக்கலாம்.

குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து நிறைந்திருக்கும் கொய்யா பொதுவாக பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானது மற்றும் சத்தானது. இருப்பினும் இந்த பழத்தில் காணப்படும் சில கலவைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்களை தராது. சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும்.

கொய்யாவிற்கு அலர்ஜி இருக்கும் நபர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள். தாய்ப்பால் கொடுப்பவர்கள் அல்லது கீழ்காணும் உடல்நல குறைபாடுகள் இருப்பவர் கொய்யா சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.

கொய்யாவை யார் சாப்பிட கூடாது?

  • செரிமான பிரச்சனை உள்ளவர்கள்…. கொய்யாவை சாப்பிட்டாலே குமட்டல் அல்லது வயிற்று பகுதியில் அசௌகரியம் போன்ற விரும்பத்தகாத அறிகுறிகளை ஒருவர் தொடர்ந்து எதிர்கொண்டால் அவர் கொய்யா சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
  • எக்ஸிமா: அடோபிக் டெர்மடிடிஸ் என குறிப்பிடப்படும் எக்ஸிமா சருமத்தில் அரிப்பு, சிவத்தல், வறட்சி மற்றும் எரிச்சல் உள்ளிட்ட நிலைமைகளை ஏற்படுத்த கூடியது. இது ஒருவகை தோலழற்சியாகும். Eczema பிரச்சனை உள்ளவர்கள் கொய்யா இலை சாற்றை தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது எக்ஸிமா அறிகுறிகளை. மோசமாக்கும். கொய்யா இலை சாற்றில் உள்ள சில கெமிக்கல்ஸ், குறிப்பாக எக்ஸிமா போன்ற சாரும் சிக்கல் உள்ளவர்களுக்கு தோல் எரிச்சலை ஏற்படுத்தும். கொய்யா இலை சாற்றை மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் சிலருக்கு தோல் எரிச்சல் ஏற்படலாம்.
  • நீரிழிவு நிலை… லோ கிளைசெமிக் இன்டெக்ஸ் காரணமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரும்பும் பழங்களில் கொய்யாவும் ஒன்று. ஆனால் இதனை டயட்டில் சேர்த்துக் கொண்டால், ரத்த சர்க்கரை அளவை தவறாமல் கண்காணிக்க வேண்டும். சுமார் 100 கிராம் கொய்யாவில் 9 கிராம் இயற்கை சர்க்கரை உள்ளது. எனவே, இதனை அதிகமாக சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். அதே போல் நீரிழிவிற்காக மருந்து எடுத்து கொள்பவர்கள் கொய்யா இலைச்சாற்றை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.
  • விரைவில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள போகிறவர்கள்… ஒருவர் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டிருந்தால் குறைந்தது அதற்கு 2 வாரங்களுக்கு முன் கொய்யாவை மருந்தாக அல்லது சப்ளிமென்ட்டாக சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். ஏனெனில் கொய்யா ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்பதோடு ரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கும்.

கொய்யாவில் உள்ள சத்துக்களின் விவரம்:

சுமார் 55 கிராம் அளவுள்ள ஒரு கொய்யாவில் அடங்கி இருக்கும் ஊட்டச்சத்துக்களின் விவரங்கள் கீழே…

  • எனர்ஜி – 37.4 கிலோகலோரி
  • தண்ணீர் – 44.4 கிராம்
  • கார்போஹைட்ரேட்ஸ் (ஃபைபர் உட்பட) – 7.86 கிராம்
  • கொழுப்புகள் – 0.522 கிராம்
  • புரதம் – 1.4 கிராம்
  • ஃபைபர் சத்து – 2.97 கிராம்
  • கால்சியம் – 9.9 மில்லிகிராம்
  • இரும்பு – 0.143 மில்லிகிராம்
  • மெக்னீசியம் – 12.1 மில்லிகிராம்
  • பொட்டாசியம் – 229 மில்லிகிராம்
  • சோடியம் – 1.1 மில்லிகிராம்
  • பாஸ்பரஸ் – 22 மில்லிகிராம்
  • வைட்டமின் சி – 125 மில்லிகிராம்
  • ஃபோலேட் – 27 மில்லிகிராம்
  • வைட்டமின் ஏ – 17mcg
  • லைகோபீன் 2,860mcg.

மேலே நீங்கள் பார்த்த ஊட்டச்சத்துக்கள் தவிர கொய்யாவில் பி வைட்டமின்ஸ், வைட்டமின்கள் கே மற்றும் ஈ, செலினியம், ஜிங்க், காப்பர் மற்றும் மாங்கனீஸ் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் சில முக்கிய ஆரோக்கிய நன்மைகள்…

வைட்டமின் சி, லைகோபீன் போன்ற அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளதால் கொய்யா நுகர்வு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. கொய்யாவில் உள்ள வைட்டமின்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மூளை மற்றும் நரம்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. கொய்யாவில் காணப்படும் பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுவதோடு, கேன்சரிலிருந்தும் கூட பாதுகாக்கும்.

சிறந்த செரிமான ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் சர்க்கரை அளவை சீராக வைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்கவும், முடி, தோல், எலும்புகள் மற்றும் கண் ஆரோக்கியத்திற்கும் நல்லது. கொய்யாவின் மருத்துவப் பயன்பாடுகளுக்கு போதுமான அறிவியல் சான்றுகள் இல்லை என்றாலும் வயிற்றுப்போக்கு, கண்புரை, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம், உயர் ரத்த கொழுப்பு, இருமல், முன்கூட்டியே ஏற்படும் முதுமை, முகப்பரு பல என பல நிலைமைகளுக்கு எதிராக நம்மை பாதுகாக்க கொய்யா உதவும் என ஆராய்ச்சி கூறுகிறது.

கொய்யாவை அப்படியேவோ அல்லது கொய்யா ஜாம்கள், பழச்சாறுகள் மற்றும் பிற உணவுகள் மற்றும் பானங்கள் வடிவில் சாப்பிடலாம். கொய்யா இலைகள் மூலிகை டீ-க்களாகவும், மாத்திரைகள், காப்ஸ்யூல்கள் மற்றும் பவுடர் வடிவில் வணிக ரீதியாக கிடைக்கின்றன.

Related Post

குக் வித் கோமாளி இதுதான் கடைசி சீசனா.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

Posted by - July 31, 2023 0
விஜய் டிவியின் முக்கிய ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த காமெடி கலந்த குக்கிங் ஷோ எக்கச்சக்க ரசிகர்களை கொண்டிருக்கிறது என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை.…

4 கோடி ரூபாய் கடன்.. நடுத்தெருவில் கணவருடன் நின்ற நடிகை நீலிமா ராணி!

Posted by - March 18, 2025 0
நீலிமா ராணி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டிலும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நீலிமா ராணி. இவர் தாமரை, செல்லமே, வாணி ராணி, கோலங்கள், மெட்டி ஒலி போன்ற…

உருளைக்கிழங்கை இப்படி செட்டிநாடு ஸ்டைலில் ரோஸ்ட் செய்யுங்க.. செம சூப்பரா இருக்கும்..

Posted by - October 25, 2023 0
உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? நீங்கள் எப்போதும் ஒரே மாதிரி தான் உருளைக்கிழங்கை சமைப்பீர்களா? இன்று சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கை சமைக்க நினைக்கிறீர்களா?…

கசிந்த தகவல் Bigg Boss Tamil 9 – வெற்றி பெற போவது இவர்தானா?….

Posted by - November 14, 2025 0
#BiggBossTamil9 #BiggBossTamil #BBTamil9 #பிக்பாஸ் #Kamrudin #KamrudinArmy #Soundariya  #VJVishal  #BB9TitleWinner #BB9Finalists #BiggBossTamil9 #Kamrudin #BBTamil9 #BB9TitleWinner #பிக்பாஸ்தமிழ்9 #BiggBossUpdates #Love#Photography#PhotoOfTheDay#InstaDaily#Fashion#TamilNadu #Tamil #Chennai #TrendingTamil…

முடியப்போகும் குக் வித் கோமாளி, வந்தது பிக்பாஸ் 7வது சீசன் அப்டேட்- இந்த விஷயம் தெரியுமா?

Posted by - June 13, 2023 0
பிக்பாஸ் 7 TRPயின் நாயகனாக கடந்த சில வருடங்களில் இருந்து கலக்கி வருகிறது பிக்பாஸ். ஒவ்வொரு சீசனிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான TRP அதிகரித்துக் கொண்டே தான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *