ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் குறை கூறவில்லை.. ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

361 0

அட்டக்கத்தி, ரம்மி, பண்னையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான ஃபர்ஹானா திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ், புஷ்பா படத்தில் ராஷ்மிகா மந்தனாவிற்கு பதிலாக தான் நன்றாக நடித்திருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா குறித்து கூறிய கருத்துக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.Aishwarya Rajesh - ராஷ்மிகாவை அப்படி சொன்னேனா?.. ஜெர்க் ஆகி விளக்கம்  கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் | Aishwarya Rajesh Explains About Rashmika Mandanna  Issue - Tamil Filmibeat

அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது, “அன்பிற்குரிய நண்பர்களே… நான் திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள் என் மீது பொழிந்து வரும் நிபந்தனையற்ற அன்புக்கும், எனது அனைத்து படங்களுக்கும் நீங்கள் அளித்து வரும் பேராதவிற்கும், முதலில் உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என் மீதும், என் பணியின் மீதும் அன்பைத் தவிர வேறு எதுவும் செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும், அழகான பார்வையாளர்களையும் பெற்றிருப்பதை நான் பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அண்மையில் ஒரு நேர்காணலின்போது என்னிடம், தெலுங்கு திரையுலகில் நான் எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்? என கேள்வி கேட்கப்பட்டது.ராஷ்மிகா கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருந்திருப்பேன்" - ஐஸ்வர்யா  ராஜேஷ் | nakkheeran

இதற்கு பதிலளிக்கையில், எனக்கு தெலுங்கு திரையுலகம் மிகவும் பிடிக்கும். எனக்கு விருப்பமான கதாப்பாத்திரங்கள் கிடைத்தால் நிச்சயமாக தெலுங்கு படங்களில் நடிப்பேன், உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீ வள்ளி கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதிலளித்தேன்.

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, புஷ்பா படத்தில் நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன்.

ராஷ்மிகா மந்தனாவின் பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம் மட்டுமே உண்டு என்பதையும், திரையுலகைச் சார்ந்த சக நடிகர் நடிகைகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் உதாரணமாக கூறிய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். புரிதலுக்கு நன்றி மிகுந்த அன்புடன், ஐஸ்வர்யா ராஜேஷ்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Post

கலகத்தை கட்டவிழ்த்துவிட்ட ஜோவிக்கா என்ன செய்தார் தெரியுமா..?

Posted by - January 11, 2024 0
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இந்த இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு வர உள்ளது நாம்…

ரூ. 34 கோடி மதிப்புள்ள லம்போர்கினி கார் வைத்திருக்கும் அஜித்தின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

Posted by - August 28, 2023 0
அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும்…

மீந்து போன சாதம் இருக்கா? அப்ப 10 நிமிடத்துல இந்த கேரளா ஸ்பெஷல் நெய் பத்தல் செய்யுங்க..

Posted by - December 7, 2023 0
தினமும் காலை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, உப்புமா என்று சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை உணவை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்பெஷல்…

உங்க பிள்ளைங்க சாப்பிடும்போது கூட போன் பாக்குறாங்களா? இந்த பழக்கத்த மாத்த செம ஐடியா.!

Posted by - October 26, 2024 0
எப்போதும் மொபைல் போன், டேப்லட் போன்றவற்றை நோண்டிக்கொண்டே இருக்கும் குழந்தைகளின் கவனத்தை திசை திருப்புவதற்கு உங்களுக்கு உதவக்கூடிய சில குறிப்புகள். தற்போது எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும்…

பாக்யலட்சுமி சீரியலிலிருந்து கோபி வெளியேற இது தான் காரணமா?

Posted by - April 25, 2023 0
பாக்யலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சீரியல் என்றால் பாக்யலட்சுமி தான். எல்லா வாரமும் டி ஆர் பி-ல் செம்ம ஹிட் அடிக்கும். இந்நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *