ரூ.1 லட்சம் முதல் பேரம் பேசினார்: மனைவி பிரிந்து சென்றதால் குழந்தைகளை விற்க முயன்ற வாலிபர்

440 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம் மிருதொட்டி மண்டலம் மல்லுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பணேட்டி போச்சையா. இவரது மனைவி ரேணுகா, கவுதம் (வயது 3) தருண்(2) என்ற மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ரேணுகா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து அவருடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். போச்சையா மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இந்நிலையில் போச்சையா உடல் நலம் பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார் . அவரால் 2 குழந்தைகளையும் கவனிக்க முடியவில்லை.Girls Sold For Rs 60,000, Boys For Rs 1.5 Lakh: Baby-Selling Racket Busted,  8 Held

இதனால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு தனது மகன்களை விற்பனை செய்ய முடிவு செய்தார். அவர்களிடம் ரூ.1 லட்சம் முதல் பேரம் பேசி வந்தார் . இது குறித்து குழந்தைகள் நலன் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் போச்சையா வீட்டிற்கு வந்தனர்.

அவரிடம் இருந்து 2 குழந்தைகளையும் மீட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் குழந்தைகள் அங்குள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர். போச்சயாவை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர். குழந்தைகளை விற்றாலும் அல்லது வாங்கினாலும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை இல்லாத பெற்றோர்கள் வழிகாட்டு முறைகளை பின்பற்றி குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Post

குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொன்ற காதலி…!!

Posted by - April 17, 2023 0
குளிர்பானத்தில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலியே காதலனைக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர்  சஞ்சீவ் குமார்…

அக்கவுண்ட் நம்பரை மாத்தாமலே வங்கியை மாத்திக்கலாம் மக்களே! செம செம!

Posted by - April 1, 2026 0
வங்கியின் வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமலே வங்கியை மாற்றிக்கொள்ளும் வசதியை விரைவில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளது. நாட்டில் உள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர்…

ஆந்திரா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

Posted by - October 30, 2023 0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து…

30 மணி நேரம் தாமதமாக வந்த ஏர் இந்தியா விமானம்- 2 பேரின் திருமண நிச்சயதார்த்தம் ரத்தானது

Posted by - August 2, 2023 0
திருவனந்தபுரம்: துபாயில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு துபாயில் இருந்து திருவனந்தபுரத்துக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *