வழக்கறிஞர்களிடமிருந்து டிப்ஸ் பெற ஆடையில் QR code! – சஸ்பெண்ட் செய்து நீதிமன்றம் நடவடிக்கை.

230 0

வழக்கறிஞர்களிடமிருந்து `பேடிஎம்’ மூலம் டிப்ஸ் பெற்ற நீதிபதியின் டவாலியை பணியிடை நீக்கம் செய்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு.

வழக்கறிஞர்களிடமிருந்து `பேடிஎம்’ மூலம் அன்பளிப்பாகப் பணம் பெற்ற நீதிபதியின் டவாலியை பணியிடை நீக்கம் செய்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு.

டெல்லியில் உள்ள அலகாபாத் உயர் நீதிமன்றத்தில், கடந்த வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நீதிமன்ற வழக்கறிஞர்களிடமிருந்து நீதிபதியின் டவாலி பேடிஎம் மூலம் பணம் வசூல் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

அவர் தனது இடுப்பில் ஆடையுடன் சேர்த்து பேடிஎம்-க்கான QR code-ஐ வைத்திருந்திருக்கிறார். இதனைக் கவனித்த நீதிபதி அஜித் சிங், அவர் மீது கடிதம் மூலம் தலைமை நீதிபதிக்குப் புகார் அளித்துள்ளார். அதையடுத்து தலைமை நீதிபதி ராஜேஷ் பிண்டல், இதனை அவசரம் மற்றும் முக்கிய வழக்காக கருதி, நீதிமன்ற டவாலியை விசாரித்துத் தகுந்த தண்டனை வழங்கியுள்ளார். அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், “29.11.2022 தேதியிட்ட நீதிபதி அஜித்தின் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு விசாரித்ததில், நீதிமன்ற டவாலி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உதவியாளர் ஸ்ரீ ராஜேந்திர குமார் என்பவர், ஆடையோடு சேர்த்து பேடிஎம் QR code மூலம் பணத்தைப் பெற்றதற்காக உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்.

சஸ்பெண்ட் காலத்தில் அவர் வேறு எந்த வேலை, வர்த்தகம் அல்லது தொழிலில் ஈடுபடவில்லை என்பதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே அவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Post

சலுகைனா இதான்.. ரூ. 6000 விலைக்கு Smart TV..

Posted by - December 21, 2024 0
உங்கள் வீட்டிற்கு புதிதாக ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்கும் ஐடியா இருக்கிறதா? அப்படியானால் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தற்போது நடைபெறும் பிக் சேவிங் டே சேல்ஸ்…

அய்யோ.. மீண்டும்.. மீண்டுமா? – சீனா செய்த பகீர் சம்பவம்.. புலம்பும் மக்கள்

Posted by - November 24, 2023 0
சீனாவில் நிமோனியா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு கண்காணிப்பு தகவல்களை பகிரும்படி WHO வலியுறுத்தல். சீனாவின் வடக்கு பகுதிகளில் குழந்தைகளுக்கு நிமோனியா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து…

இந்த போன்லலாம்…WhatsApp செயல்படாதாம்…எந்தெந்த மொபைல்னு பாத்துக்கோங்க…!

Posted by - December 14, 2024 0
WhatsApp என்பது ஒரு குறுஞ்செய்தி தகவல் பரிமாற்ற சாதனம், ஒரு தகவலையோ, ஒரு போட்டோவையோ, ஒரு  ஆவணங்களையோ உடனடியாக ஒருவருக்கு அனுப்புவதற்கும் பொழுது போக்கிற்கும் உகந்த ஒரு…

மேற்கு வங்கத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்… மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதால் பரபரப்பு

Posted by - August 28, 2024 0
கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலகக்கோரி பாஜக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பயிற்சி பெண் மருத்துவர்…

ரூ.1000 வந்துருக்கா.. வங்கி அக்கவுண்ட் பேலன்ஸ் செக் பண்ண எளிய வழி.!

Posted by - September 15, 2023 0
மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பம் நிரகாரிக்கப்பட்டால் மேல் முறையீடு செய்வதற்கு அரசு வழிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *