வாழை இலை.. வெயிட் லாஸ் முதல் சரும ஆரோக்கியம் வரை உதவும் அதிசய சாறு.. தலைமுடி வளர்ச்சிக்கு வாழை இலை

217 0

சென்னை:

வாழையிலையில் உள்ள நன்மைகள் ஏராளம்.. இந்த வாழையிலையை அரைத்து பயன்படுத்துவதால், ஏற்படும் நன்மைகள் அதைவிட ஏராளம்.. அவை என்னென்ன தெரியுமா? வாழையிலையில் உள்ள சத்துக்களை லிஸ்ட் போடவே முடியாது.. பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், சோடியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் செம்பு இப்படி பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

கழிவுகள்:

உடலிலுள்ள கழிவுகளை நீக்கக்கூடியது இந்த வாழை.. இதற்கெனவே பிரத்யேகமாக மூலிகை சிகிச்சைதான் வாழையிலை குளியல்.. இதற்கென பிரத்யேகமான முறை உள்ளது..

இந்த குளியல் எடுத்து கொள்வதால், உடம்பிலுள்ள தேவையற்ற நச்சுக்கள் நீங்கி, உடல் எடையை குறைக்க செய்யும்.. உடல் வீக்கத்தை போக்கி, கை, கால்வீக்கத்தைப்போக்க செய்யும்.. நரம்பு மண்டலத்தை பலப்படுத்த செய்யும்.. சிறுநீரக செயலிழப்பை தடுக்க செய்யும்.. புத்துணர்ச்சி மீட்டுத்தரும் தரும்..பொடுகு, தலை அரிப்பை போக்கி முடியை வேகமாக வளரச் செய்யும் வாழை இலை  சிகிச்சை... செஞ்சு பாருங்க... | Banana Leaf Benefits for Hair Treatment and  more, You Won't Believe It - Tamil ...

குளிர்ச்சி இலைகள்:

குளிர்ச்சி மிகுதி என்பதால்தான், இந்த இலையை அரைத்து, பலவித நோய்களுக்கு தீர்வாக பயன்படுத்துகிறார்கள்.. இயற்கையான ஆன்டிபயாடிக் என்பதால், எந்தவிதமான அலர்ஜியும் இதனால் ஏற்படாது. குறிப்பாக, கண்களை பாதுகாத்து, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த வாழைதான் உதவுகிறது.. வைட்டமின் A, C, K என வைட்டமின்கள் உள்ளதால், குடற்புண்கள் ஆறுகின்றன.. அதுமட்டுமல்ல, வாழையிலையின் சாறு, நம்முடைய சருமத்துக்கு போதுமான பாதுகாப்பை தருகின்றன. சொறி, சிரங்கு, தீப்புண்கள், எரிச்சல், அரிப்பு போன்ற சரும பிரச்சனைகளுக்கு இந்த வாழையிலை சாறு உபயோகமாகிறது.. வாழையிலையை அரைத்து பூசி வந்தால், இதுபோன்ற தொந்தரவுகள் எல்லாம் நீங்கிவிடும்.. வேனல் கட்டிகளும் உடைந்துவிடும்..

சரும நோய்கள்:

அதேபோல, சரும பொலிவுக்கும் இந்த சாற்றினை பயன்படுத்தலாம்.. வாழையிலையில் அலட்டாயின் என்ற சத்து நிறைந்துள்ளதால், ரோஸ் வாட்டர் அல்லது கற்றாழை ஜெல் அல்லது தயிர் இரண்டையும் சேர்த்து முகத்தில் தடவி வரலாம்.. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், முக சுருக்கத்தை தள்ளிப்போடுகின்றன.. அதேபோல, வாழையிலை சாறை, ஃப்ரிட்ஜில் ஐஸ்கட்டியாகும்வரை வைத்துவிட வேண்டும். பிறகு, அந்த ஐஸ் கட்டிகளை கொண்டு, சருமத்தில் தேய்த்து வந்தாலே, சருமம் மென்மையடையும்.. இந்த சாறில் இருக்கும் உட்பொருட்கள் சூரியக் கதிர்வீச்சிலிருந்து வரும் புற ஊதாக்க கதிர்களின் தாக்கத்தால் ஏற்படுகிற சரும பிரச்சனைகளை தீர்க்க பெரிதும் உதவி செய்யும்.

நல்லெண்ணெய்:

பச்சிளம் குழந்தைகளுக்கு சரும பிரச்சனை என்றாலும், இந்த வாழையிலைதான் மருந்தாகின்றன.. குழந்தையின் உடலில் நல்லெண்ணெய் தேய்த்து, காலை நேரத்தில் சூரிய ஒளி படும்படி, படுக்க வைப்பார்கள். சூரிய ஒளியியிலிருந்து வைட்டமின் D, மற்றும் வாழையிலையிலிருந்து குளிர்ச்சி என இரண்டுமே கலந்து சரும நோயை நீக்கிவிடும்.. அம்மை புண்கள் வந்தாலும், வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தாலே, நிவாரணம் கிடைக்குமாம்.

சருமத்துக்கு உதவுவது போலவே, தலைமுடிக்கும் இந்த வாழையிலை சாறு உதவுகிறது.. தலையில் அரிப்பு, பொடுகு, சூடு கட்டிகள், எரிச்சல் போன்றவை இருந்தாலும், இந்த சாற்றினை தலையில் தேய்த்து ஊறவைத்து குளிக்கலாம்.

தலைமுடி வளர்ச்சி:

இந்த சாற்றிலுள்ள, அஸ்ட்ரிஜெண்ட் மற்றும் அலன்டோயின் பொருட்கள் தலைமுடிக்கு நல்ல நிறத்தையும் தருகின்றன.. வாழை இலை சாற்றை எடுத்து தலையில் மாஸ்க் போட்டும் குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும். அவ்வளவு ஏன்? வாழை இலையில் சாப்பிட்டாலே இளநரை வராமல், தலைமுடி கருப்பாக இருக்குமாம். இவ்வளவு நன்மைகளை தந்தாலும், வாழையிலை சாற்றினை நேரடியாக சருமத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள். அதனால், டாக்டர்களின் ஆலோசனையை பெற்றே பயன்படுத்த வேண்டும்

Related Post

மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் – அரசு அறிவிப்பு

Posted by - March 11, 2025 0
தமிழ்நாடு அரசு பேருந்துகளில் சுய உதவிக்குழு பெண்கள் இனி, லக்கேஜ்களுடனும் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுய உதவிக்குழு பெண்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை எளிதாக சந்தைப்படுத்தும்…

மெட்ரோ ரெயில் பணி: ஓ.எம்.ஆர். சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

Posted by - February 21, 2023 0
திருப்போரூர்: சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டப்பணி 118.9 கி.மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் நடந்து வருகிறது. இதில்…

விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?

Posted by - December 15, 2024 0
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் விஜய் போட்டியிட்டால் அவருக்காக அ.தி.மு.க. போட்டியிடாமல் ஒதுங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து 3வது முறையாக…

சனாதன பொங்கல் விழாவில் திமுக MLA! இந்து மக்கள் கட்சி நிகழ்ச்சியால் உடன்பிறப்புகள் உஷ்ணம்!

Posted by - January 13, 2024 0
தஞ்சை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற சனாதன பொங்கல் விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் பங்கேற்றது கட்சியினர் மத்தியில்…

தமிழகத்தில் இன்று மிக கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

Posted by - November 22, 2023 0
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்து உள்ள நிலையில் இயல்பான அளவைவிட குறைவாகவே பெய்துள்ளது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *