விஜயகாந்த் எப்போது மனம் உடைந்து போனார்? அவரது மகனே சொன்ன தகவல்

344 0

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் எப்போது மனம் உடைந்துபோனார் என்பதை அவருடைய மகன் சண்முக பாண்டியன் ஒருமுறை தெரிவித்திருக்கிறார்.  மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒரு அருமையான நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். அவர் தனது திரைத்துறை வாழ்க்கையில் பல வெற்றிகளைக் கண்டதோடு, தன்னை தேடி வந்தவர்களுக்கு இல்லை என கூறாமல் இயன்ற அத்தனை உதவிகளையும் செய்தார். அத்துடன் 2005 ஆம் ஆண்டு கட்சியை தொடங்கிய அவர், அடுத்த ஆண்டு நடைபெற்ற அதாவது 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலியே விருத்தாசலம் தொகுதியில் நின்றுவெற்றி பெற்றார். அடுத்தடுத்து தேர்தலிலும் வெற்றி பெற்ற விஜயகாந்த், அரசியலில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் வகித்தார். ஆனால், அதே அளவுக்கு அவரது அரசியல் வாழ்க்கையில் சில சோதனைகளையும் அவர் சந்தித்துள்ளார். அவற்றில் ஒன்றுதான் 2012 ஆம் ஆண்டு அதிமுகவுடன் இணைந்த தேமுதிக கூட்டணி உடைந்தது. இந்த கூட்டணி உடைந்ததற்கு பல காரணங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்வுக்கும் இடையே ஏற்பட்ட மோதல். சட்டமன்றத்திலேயே விஜயகாந்த் மற்றும் ஜெயலலிதா காரசாரமான வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். நாக்கை கடித்து அதிமுக எம்எல்ஏக்களை மிரட்டினார் விஜயகாந்த். இந்த மோதல் காரணமாக, தேமுதிகவில் இருந்து பல எம்எல்ஏக்கள் விலகி விஜயகாந்துக்கு எதிராக சட்டமன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களாக செயல்பட்டனர். இந்த எம்எல்ஏக்களில் சிலர் விஜயகாந்தின் நண்பர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் விஜயகாந்தை மிகவும் மனம் உடையச் செய்தது. அவர் தனது மகன் சண்முகபாண்டியனிடம், “என் மீது நம்பிக்கை வைத்து தேமுதிகவில் சேர்ந்தவர்கள், என்னை விட்டு விலகிச் சென்றது எனக்கு மிகுந்த வேதனையைத் தந்தது. அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்” என்று கூறியிருக்கிறார். இந்த சம்பவம் விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, விஜயகாந்த் உடல்நலம் குன்றி அரசியல் வாழ்க்கையில் மிக தீவிரமாக ஈடுபட முடியாமல் போனது.

அத்துடன் தேமுதிகவின் மக்கள் ஆதரவு குறைந்து, கட்சியின் நிலைமை மோசமடைந்தது. விஜயகாந்த் தனது அரசியல் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்தாலும், அவர் ஒருபோதும் தன்னுடைய நம்பிக்கையை இழக்கவில்லை. அவர் எப்போதும் மக்களுக்காக உழைக்கவும், அவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் தயாராக இருந்தார். ஆனால் அவரது உடல்நிலை கடைசி வரை ஒத்துழைக்கவே இல்லை.

Related Post

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை தேவை – அன்புமணி வலியுறுத்தல்

Posted by - April 24, 2024 0
தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது…

மகனை போட்டுத்தாக்கிய ராமதாஸ்! உடனடியாக நிர்வாகிகளுக்குக்கு அன்புமணி போட்ட முக்கிய உத்தரவு

Posted by - May 29, 2025 0
தன்னை சந்திக்க யாரும் தற்போது சென்னை வரவேண்டாம். நான் அழைக்கும் வரை யாரும் சென்னைக்கு வரவேண்டாம் என நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். தன்னை சந்திக்க யாரும்…

“விடியா அரசு என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் விடியா மூஞ்சிகள்” – முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

Posted by - December 5, 2024 0
தானும், துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் களத்தில் இருப்பது எதிர்க்கட்சிகளுக்கு வயிற்றெரிச்சலாக இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் மலிவான அரசியல் செய்து…

இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்

Posted by - December 2, 2025 0
சென்னையில் கடந்த 24 மணி நேரமாக வெளுத்து வாங்கிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (02.12.2025) நள்ளிரவு எண்ணூர்-மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும்…

ஓலா, ஊபர் போராட்டம் எதிரொலி: 20 கிலோமீட்டருக்கு ரூ.1000 கட்டணம் – பயணிகள் கடும் அதிர்ச்சி

Posted by - October 18, 2023 0
சென்னை: ஓலா, உபேர் டிரைவர்கள் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வாடகை வாகனங்களை முறைப்படுத்த வேண்டும், பைக் டாக்சியை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *