“விஜய் – த்ரிஷா டேட்டிங் சர்ச்சை விவகாரம்! நடந்த சம்பவம் இதுதானா?!”

212 0

தமிழ் சினிமாவில் டாப் ஜோடிகளில் விஜய்யும், திரிஷாவும் ஒருவராக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களை பல ஆண்டுகளாக கவர்ந்து வருகிறது. கில்லி, ஆதி, குருவி ஆகிய படங்களில் இந்த ஜோடியின் நடிப்பும், கெமிஸ்ட்ரியும் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. 2008 இல் குருவி வெளியானதற்கு பின்னர் தற்போதுதான் லியோ படத்தில் இந்த ஜோடி இணைந்துள்ளது.

 

 

இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக இருவரும் காஷ்மீரில் 2 மாதங்களாக தங்கியிருந்தனர். தற்போது விஜய் லியோ படத்தின் ஷூட்டிங்கை முடித்து விட்டு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கவுள்ள படத்திற்காக தயாராகி வருகிறார். இதையொட்டி சின்னதாக ஒரு பிரேக் எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு டூர் சென்றுள்ளார் விஜய்.

 

இன்னொரு பக்கம் த்ரிஷா ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் சுற்றுலாவில் இருந்து வருகிறார். இந்நிலையில் இருவரும் ஷாப்பிங் மால் ஒன்றில் இருப்பது போன்ற ஃபோட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. விஜய் – த்ரிஷா இருவரும் டேட்டிங் செய்வதாக தகவல்கள் பரவியதுடன் அதனை உண்மை என்று நினைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கமென்ட் செய்திருந்தனர்.

 

 

இந்நிலையில், அந்த புகைப்படம் லியோ படத்தின் ஷூட்டிங்கின்போது எடுக்கப்பட்டது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சர்ச்சைக்குரிய புகைப்படத்தை பதிவேற்றம் செய்த சமூக வலைதள கணக்கிடம், லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ காப்பி ரைட்ஸ் உரிமை கோரியுள்ளது. இதன் மூலம் இந்த படம் லியோ ஷூட்டிங்கில் எடுக்கப்பட்டதுதான் என்பது தெரியவந்துள்ளது.

Related Post

ஒன்னோட காசு எனக்கு வேண்டாம்.. அஜித்தால் கண்கலங்கி கதறி அழுத விஜயகாந்த்..

Posted by - January 2, 2024 0
நட்சத்திர விழா நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு எடுக்க திரையுலக நட்சத்திரங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மலேசியாவிற்கு அழைத்து சென்றார் கேப்டன் விஜயகாந்த். நடிகர் சங்க…

கொஞ்சம் Cringe நிறைய Copy..சிவகார்த்திகேயனை வம்பிழுத்த Blue sattai மாறன்!

Posted by - July 17, 2023 0
மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது…கலவையான விமர்சனமே பெற்றது..இப்படத்தின் முதல் பாதி சூப்பராக இருப்பதாகவும் இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாக விமர்சனங்கள்…

பிரபல நடிகரின் மகனை காதலிக்கிறாரா ஜுலி?- புகைப்படத்தால் சர்ச்சை.

Posted by - November 29, 2022 0
பிக்பாஸ் ஜுலி மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வித்தியாசமான கோஷங்களை போட்டு அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஜுலி. அந்த போராட்டம் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்…

வைரலாகும் ஹிப்ஹாப் ஆதி படத்தின் புதிய போஸ்டர்

Posted by - February 20, 2023 0
இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள்,…

நடிகர் தனுஷ்-க்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

Posted by - July 10, 2023 0
நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *