விஜய்க்கு ஆட்டோ ஓடாதாம்.. புதிய சின்னத்தை தேடுவதில் தவெக தீவிரம் – லிஸ்டில் இருப்பது என்ன?

145 0

TVK Symbol: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகம், ஆட்டோவை பொது சின்னமாக பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

TVK Symbol: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகம், புதிய பொது சின்னத்தை தேர்வு செய்ய தீவிரம் காட்டி வருகிறது.

முதல் தேர்தலில் தவெக:

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனைத்து பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார். விழுப்புரம் மற்றும் மதுரை ஆகிய பகுதிகளில் பிரமாண்ட மாநாடுகளையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளார். தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவிற்கு இணையாக கட்டமைப்பை வலுப்படுத்தி, பூத் ஏஜெண்டுகளை நியமிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். கூட்டணி அமைத்தாலும் சரி, தனித்தே போட்டியிட்டாலும் சரி, 2026 தேர்தலில் திமுக மற்றும் தவெகவிற்கு தான் நேரடி போட்டி என விஜய் சூளுரைத்துள்ளார்.

சிக்கலில் ஆட்டோ சின்னம்:

முதல் தேர்தலிலேயே பெறும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என ஒவ்வொரு மேடையிலும் விஜய் கர்ஜித்து வருகிறார். இந்த நிலையில் தான், தவெக விரும்பியபடி கட்சி வேட்பாளர்களுக்கான பொதுச்சின்னமாக ஆட்டோவை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட கட்சியாக மட்டுமே உள்ள தமிழக வெற்றிக் கழகத்தால், யாருக்கும் ஒதுக்கப்படாதவை என அறிவிக்கப்பட்ட சின்னங்களில் ஒன்றை மட்டுமே பொது சின்னமாக தேர்வு செய்ய முடியும். அப்படி தான், கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்டோ சின்னத்தை பெற்று போட்டியிட்டு பல பகுதிகளில் வெற்றி பெற்றனர். ஆனால், தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள யாருக்கும் ஒதுக்கப்படாத புதிய சின்னங்களின் பட்டியலில் ஆட்டோ சின்னம் இடம்பெறவில்லை. இதனால், தவெகவால் ஆட்டோவை பொதுச்சின்னமாக பெறமுடியாது.

ஆட்டோ சின்னம் யாருக்கு?

நாட்டில் உள்ள ஏதேனும் ஒரு மாநில அல்லது தேசிய கட்சிக்கு ஒரு சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டால், தேசிய அளவில் வேறு எந்த கட்சிக்கும் அந்த சின்னம் ஒதுக்கப்படாது. அந்த வகையில் தான், தமிழக வெற்றிக் கழகத்தினர் குறிவைத்து இருந்த ஆட்டோ சின்னத்தை கேரள காங்கிரஸ் என்ற கட்சி கைப்பற்றியுள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் ஒதுக்கப்படாத சின்னங்களின் பட்டியலில் 184 சின்னங்கள் உள்ளன. அவற்றில் இருந்து எதனை தமிழக வெற்றிக் கழகம் தேர்வு செய்ய உள்ளது என்பதே தற்போது கேள்வியாக உள்ளது.

தவெகவின் சின்னம் என்ன?

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒதுக்கப்படாத சின்னங்களின் பட்டியலில், தென்னை மர தோப்பு, லேப்டாப், தொலைக்காட்சி, பேட் போன்ற சின்னங்கள் தவெகவின் பரிசீலனையில் உள்ளனவாம். குறிப்பாக 182வது இடத்தில் உள்ள பிகில் சின்னத்தை பெற தீவிரம் காட்டுகிறதாம். அந்த பெயரிலான விஜயின் படம் ஏற்கனவே வெளியாகி, பொதுமக்களிடையே நன்கு பரிட்சயமாக உள்ளது. எனவே அதனை தேர்தல் சின்னமாகவும் பொதுமக்களிடையே எளிதில் கொண்டு சேர்க்க முடியும் என கட்சி நிர்வாகிகள் நம்புகின்றனராம்.

ஒருவேளை சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட வாக்கு சதவிகிதம் அல்லது குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுவிட்டால், தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாநில கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்கும். அப்போது தங்களுக்கான அதிகாரப்பூர்வ பொது சின்னத்தை தவெகவால் கேட்டு பெற முடியும்.

Related Post

நடிகர் அவதாரம் எடுத்த பாஜகவின் ஹெச்.ராஜா… வெளியானது ‘கந்தன்மலை’ ஃபர்ஸ்ட் லுக்!

Posted by - August 4, 2025 0
பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினரான ஹெச்.ராஜா நடிக்கும் ‘கந்தன்மலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. ஹெச்.ராஜா முறுக்கு மீசையுடன், ருத்ராட்ச மாலையுடன் காட்சியளிக்கிறார். பாஜகவின் தேசிய…

வந்தவர்கள் வளமாக… வளர்த்தவர்கள் ஓரமாக! – கோவை திமுகவில் கோஷ்டி சேர்க்கிறாரா செந்தில் பாலாஜி?

Posted by - August 20, 2025 0
2021 தேர்தலில் தென் மாவட்டங்களில் திமுக கூட்டணி சுழற்றியதைப் போல கொங்கு மண்டலத்தின் பெருவாரியான தொகுதிகளை அதிமுக கூட்டணி வளைத்தது. அதிலும் கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும்…

வெளியான அதிமுக கூட்டணியின் தொகுதிப்பங்கீட்டு பட்டியல்; பாஜக, பாமக, அமுமுக-விற்கு எத்தனை.?

Posted by - March 23, 2026 0
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில், பிரதான கூட்டணி கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பது குறித்த பட்டியல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு…

கருணாநிதி சூழ்ச்சி..ஜெயலலிதாவோடு மாட்டி விட்டுட்டாரு..

Posted by - March 3, 2026 0
பிற்காலத்தில் ஜெயலலிதாவுக்கு பின்னால் இந்த பெண் அதிமுகவுக்கு தலைமையாக வரக்கூடும் என 1996ல் கருணாநிதி கணித்தார். அதனால் தான் என்னை சொத்து குவிப்பு வழக்கில் இணைத்து விட்டார்…

அடித்துக் கொள்ளும் ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள்.. மாம்பழ சின்னத்துக்கே சிக்கல் வந்துடுமோ?

Posted by - September 12, 2025 0
அன்புமணியை கட்சியில் இருந்து ராமதாஸ் நீக்குவதாக அறிவித்துள்ள நிலையில், ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களிலும், நேரிலும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *