இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சராக கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சர் பதவி கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் மாணவர்களுக்கான சிறப்பு அமர்வு நடைபெற்றது இதில் கலந்துகொண்ட சீமான், மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது மத்திய அரசு இந்தி திணிப்பு குறித்து கண்டனம் தெரிவித்து பேசிய அவர், மற்ற மொழிகளை கற்பதைதான் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் மொழிகளை திணிப்பதை மட்டுமேதான் தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் தெரிவித்தார்
மேலும் முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு எதற்கு என்று கேள்வி எழுப்பியவர், இட ஒதுக்கீடு வேண்டும் எனில் அவர்கள் பின் தங்கிய வகுப்புக்கு தங்களை மாற்றிக் கொள்ளட்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளரிடம் பேசிய சீமானிடம் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்து பேசியவர் இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சராக கூட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அமைச்சராக பதவி ஏற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு சீமான் வாழ்த்து தெரிவித்தார்.
Related Post
ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?
அரசுக்கு அழுத்தம் தருகின்ற வகையில் வலுவான போராட்டத்தினை உடனடியாக அறிவித்து இந்த தொகையினை துரிதமாக பெற கடுமையான போராட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு…
இனி, இதை செய்யவேக் கூடாது! தவெக நிர்வாகிகளுக்கு கட்டளையிட்ட விஜய்..
தவெக கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து விழுந்ததில் 70 வயது முதியவர் படுகாயம் அடைந்தார். சென்னை வில்லிவாக்கத்தில் தவெக கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனர் சரிந்து…
மாதம்பட்டி ரங்கராஜ் மறுமண வழக்கில் வந்த அதிரடி தீர்ப்பு… ஜாய் கிரிசில்டா போட்ட வைரல் பதிவு
மாதம்பட்டி ரங்கராஜ் தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். சினிமா படங்களை தாண்டி சமையல் தொழில் மூலம் தான்…
விஜய்க்காக களமிறங்கும் ஆதவ் அர்ஜுனா! ஜான் ஆரோக்கியசாமிக்கு அல்வா! ஜனநாயகனின் புது ஸ்கெட்ச்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமிக்கு பதிலாக ஆதவ் அர்ஜுனா பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் நடிகர்…
பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்து தெரிவிக்கலாம்- இந்திய சட்ட ஆணையம்
சென்னை: திருமணம், விவாகரத்து, பரம்பரை, தத்தெடுப்பு, பாதுகாவலர் போன்ற பல்வேறு விவகாரங்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனி சட்டங்கள் உள்ளன. அனைத்து…
Categories
- MEMES (12)
- Uncategorized (1)
- அரசியல் (184)
- இந்தியா (470)
- உலகம் (174)
- சினிமா (815)
- தமிழ்நாடு (1,087)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (285)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (85)
Recent Posts
- தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

- ஆட்சிக்கு வந்தால் இவ்வளவும் இருக்கும்.. தவெக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட விஜய்!

- “பாலியல் வன்கொடுமை, போதைக் கலாச்சாரம் குற்றச்சாட்டுதான் இந்த ஆட்சி மீது இருக்கு..” மு.க.ஸ்டாலின் முன்பே பேசிய பிரேமலதா!

- கமலை கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்! திமுக மீது அன்று ATTACK.. இன்று ATTRACT! அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

- திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!
