வெப்பநிலை இயல்பைவிட மேலும் அதிகரிக்கும் : வானிலை மையம் எச்சரிக்கை

190 0

தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.

தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று மற்றும் நாளை, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 28ஆம் தேதி முதல் மார்ச் 3ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும், அதிக வெப்பநிலை காரணமாக ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பிப்.26 27ஆம் தேதிகளில் குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Post

ஒரு வீட்டில் சிறைவைக்கப்பட்டு இருந்த 12 பெண்கள் உள்பட 25 பேர் மீட்பு- போலீசார் அதிரடி நடவடிக்கை

Posted by - February 16, 2023 0
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் ‘அன்புஜோதி’ என்ற பெயரில் செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமத்தில் போதை மருந்து கொடுத்து பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள…

நாட்டுக்கோழி வாங்க போனால், திருப்புவனத்தில் ஒரே ஆச்சரியம்.. 10 கிலோ ஆடு தந்த “இடி”.. திணறும் தர்மபுரி

Posted by - September 20, 2023 0
தர்மபுரி: தமிழகமெங்கும் இறைச்சி மார்க்கெட்களில், கால்நடை விற்பனை மந்தமானதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதமான புரட்டாசியில் ஆடு,…

கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாக கூறி வாலிபரின் வங்கி கணக்கில் ரூ.82 ஆயிரம் மோசடி

Posted by - June 27, 2023 0
போரூர்: ராமாபுரம், ராயலா நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி ஆரோக்கியராஜ். ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஐ.டி நிறுவனம் ஒன்றில் கேன்டீன் நடத்தி வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு…

பூலாங்கிழங்கின் மகிமை.. கமகம பூலாங்கிழங்கு பொடி எப்படி செய்யணும் தெரியுமா? வேற லெவல் வெள்ளை மஞ்சள்

Posted by - January 6, 2024 0
சென்னை: கிச்சிலி கிழங்கு அல்லது பூலாங்கிழங்கு அல்லது வெள்ளை மஞ்சள் அல்லது அம்பா மஞ்சள் என்று பல்வேறு பெயர்களை கொண்ட இந்த மூலிகையின் பயன்கள் என்னென்ன தெரியுமா?…

“குடும்பத்திற்காக டெல்லி செல்கிறார் ஸ்டாலின்“ எல்லாம் ‘தம்பி‘ படுத்தும் பாடு – வறுத்தெடுக்கும் இபிஎஸ்

Posted by - May 21, 2025 0
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தன்னுடைய குடும்பத்திற்காகவே அவர் டெல்லி செல்வதாக சாடியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *