அடுத்தமுறை பன்னீரை வெச்சு இப்படி மசாலா செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு செமயா இருக்கும்…

309 0

இன்று கிறிஸ்துமஸ் என்பதால், அனைவருக்கும் விடுமுறை விடப்பட்டருக்கும். இப்படி விடுமுறை நாட்கள் வரும் போது தான் நமக்கு பிடித்த உணவுகளை சமைத்து நீண்ட நேரம் நிம்மதியாக சாப்பிடலாம்.

நீங்கள் கிறிஸ்துமல் அன்று காலை பூரி, சப்பாத்தி செய்யப் பேகிறீர்களானால், அதற்கு என்ன ஸ்பெஷலாக சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறிர்களா? உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீரை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு இப்படி தவா மசாலாவை செய்யுங்கள்.

உங்களுக்கு தவா பன்னீர் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் கீழே தவா பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அடுத்தமுறை பன்னீரை வெச்சு இப்படி மசாலா செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு  செமயா இருக்கும்... | Simple And Tasty Tawa Paneer Masala Recipe - Tamil  BoldSky

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 200 கிராம்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (அரைத்தது)

* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1 1/4 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* சீரகம் – 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

ஊற வைப்பதற்கு….

* கெட்டி தயிர் – 3 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* கசூரி மெத்தி – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

* முதலில் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்து, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி 30 நிமிடம் ஃப்ரிட்ஜ்ஜில் ஊற வைக்க வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது உப்பு சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, நன்கு எண்ணெய் பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, கிளறி, 1/2 கப் நீரை ஊற்றி, கரம் மசாலாவைத் தூவி, மிதமான தீயில் வைத்து 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* இறுதியாக அதில் வெண்ணெயை சேர்த்து கிளறி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான தவா பன்னீர் தயார்.

Related Post

தொடர்ந்து 4 சீரியல்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

Posted by - April 3, 2023 0
விஜய் டிவி தமிழ் சினிமாவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய். இதில் ரசிகர்களை கவரும் வண்ணம் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. எந்த அளவிற்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி TRPயை…

மதியம் சாப்பிட்டவுடன் தூக்கம் வருதா..? இந்த பிரச்சனைதான் காரணம்..!

Posted by - March 14, 2023 0
இந்த ஃபுட் கோமா அதிகரித்தது ஒர்க் ஃபிரம் ஹோமில்தான் என்று கூறப்படுகிறது. நமது உணவுப் பழக்கம் அதிகரித்தது முதல் நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே திருப்பிப் போட்டுவிட்டது.…

ஒரே நேரத்தில் பல சேனல்கள்.. Tata Play டிடிஎச் சேவையின் ரூ.199 பிளான்!

Posted by - March 12, 2024 0
நீங்களொரு டாடா ப்ளே (Tata Play) கஸ்டமர் என்றால்.. உங்களுடைய டிடிஎச் (டைரக்ட்-டு-ஹோம்) ஆப்ரேட்டரிடம் இருந்து கிடைக்கும் ரூ.199 திட்டத்தை பற்றி, நீங்கள் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.…

விஜய்யின் அடுத்த ஜோடி இவர் தானா.. தளபதி 68ல் நடிக்க சம்மதம் சொல்லவரா டாப் நடிகை

Posted by - May 19, 2023 0
தளபதி 68 வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக…

2 பான் கார்ட் இருக்கா? அபராதம், சிறை தண்டனை கிடைக்கும்: இப்பவே இப்படி சரண்டர் பண்ணுங்க!!

Posted by - March 28, 2023 0
ஒருவர் இரண்டு பான் கார்டுகளை வைத்திருந்தால், அவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். குறைந்தபட்சம் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரலாம். அல்லது தண்டனை மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *