அதி தீவிர புயலாக வலுப்பெற்ற பிபோர்ஜோய் புயல்.. மேற்கு கடலோர மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

236 0

தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல், மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த தீவிர புயலாக வலுவடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதி தீவிர புயலாக வலுப்பெற்ற பிபோர்ஜோய் புயல்.. மேற்கு கடலோர மாநிலங்களுக்கு  கனமழை எச்சரிக்கை | Cyclonic Storm 'Biparjoy' intensifies into very severe  cyclonic storm

இந்த நிலையில், புயல் இன்று அதி தீவிர புயலாக வலுவடைந்தது உள்ளது. காலை நிலவரப்படி, கோவாவில் இருந்து 870 கிமீ மேற்கு-தென்மேற்கு திசையிலும், மும்பையில் இருந்து 930 கிமீ தென்மேற்கிலும் புயல் மையம் கொண்டிருந்தது.

அடுத்த 48 மணிநேரத்தில் புயல் படிப்படியாக மேலும் தீவிரமடைந்து, அடுத்த 3 நாட்களில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களுக்கும் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாட்டின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் மழை தீவிரமடையும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். இதனால் மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. மீட்புக் குழுவினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Post

ரூ.500 கோடி சொத்து மதிப்பு கொண்ட அல்லு அர்ஜுன் திடீர் கைது.. என்ன நடந்தது..?!

Posted by - December 13, 2024 0
ஹைதராபாத்தில் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்பட வெளியீட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் ஒரு பெண் இறந்தது தொடர்பாக,…

கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராடினர்

Posted by - February 20, 2023 0
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் காலை, இரவில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன்…

தலைநகரில் வேகமெடுக்கும் கொரோனா- ஒரே நாளில் 1,603 பேருக்கு தொற்று உறுதி

Posted by - April 21, 2023 0
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் முகக்கவசம் கட்டாயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின்…

சனிக்கிழமைகளில் இந்த 5 விஷயங்களை தவறி கூட செய்யாதீங்க… இல்லன சனி பகவானின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்!

Posted by - November 30, 2024 0
சனிபகவானின் கோபத்தை தூண்டும் செயல்களை செய்யாமல் அவரை சாந்தப்படுத்த நாம் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. சனிக்கிழமையன்று செய்யக்கூடாத 5 விஷயங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம். சனி…

பூரண மதுவிலக்கு – முதலமைச்சர் அதிரடி…

Posted by - March 13, 2025 0
சட்டசபையில் 2025-26-ம் நிதியாண்டிற்கு ரூ.13 ஆயிரத்து 600 கோடிக்கான பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் பெண்கள், மாணவர்களுக்காக பல்வேறு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *