’’அமித் ஷாவுடன் சந்திப்பு; கர்ச்சீப்பால் முகத்தை மறைத்தேனா? தும்மினால்கூட..’’ ஈபிஎஸ் பரபர!

152 0

சந்திப்பு முடிந்ததும் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, முகத்தை கர்ச்சீப் கொண்டு துடைத்தேன். மறைக்கவில்லை. இதை எல்லாம் அரசியல் ஆக்குகிறார்கள்- எடப்பாடி பழனிசாமி.

நாம் தும்மினாலும் இருமினாலும் விவாதம் ஆக்குகிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

’’டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வெளிப்படையாகவே சந்தித்தேன். அதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசு வாகனத்தில்தான் சென்றேன்.

பசும்பொன் முத்துராம லிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என வலியுறுத்தவே அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தேன். அப்போது அதிமுக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

கர்ச்சீப் கொண்டு துடைத்தேன்; மறைக்கவில்லை

சந்திப்பு முடிந்ததும் அவர் வீட்டில் இருந்து வெளியே வந்து, முகத்தை கர்ச்சீப் கொண்டு துடைத்தேன். மறைக்கவில்லை. இதை எல்லாம் அரசியல் ஆக்குகிறார்கள். நாம் தும்மினாலும் இருமினாலும் விவாதம் ஆக்குகிறார்கள்.

எதிர்க் கட்சியாக இருந்தபோது சட்டையைக் கிழித்துக்கொண்டவருக்கு என்னைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.

பாஜக தலையீடு இல்லை

டிடிவி தினகரன்தான் முகமூடி அணிந்தபடி, அதிமுகவுக்குள் நுழைந்தார். ஜெயலலிதா இருந்தபோதே கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், இப்போது என்னைப் பற்றிப் பேசி அரசியல் செய்கிறார்.

அதிமுக உட்கட்சி விவகாரங்களில் பாஜக தலையீடு இல்லை. எங்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Post

Generated Image March 08 2026 7 08PM

கூட்டணி வாய்ப்புகளை கோட்டை விட்ட தவெக: ஆதவ் மீது ஆதங்கத்தைக் கொட்டிய விஜய்

Posted by - March 8, 2026 0
தவெக-வை நெருங்கி வந்த கட்சிகளுடன் கூட்டணியை பேசி முடிக்காமல், முறுக்கி கொண்டிருந்த ஆதவ் அர்ஜுனா மீது அதன் தலைவர் விஜய் அதிருப்தியில் இருப்பதாக பனையூர் வட்டாரங்கள் சொல்கின்றன.…
Generated Image January 13 2026 8 16PM

Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

Posted by - January 13, 2026 0
இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க உடனடியாக அரசாணை வழங்க வேண்டும் என்று சீமான் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
Generated Image January 20 2026 11 11AM

ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி – சட்டபேரவையில் என்ன பிரச்னை?

Posted by - January 20, 2026 0
 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் உரையை வாசிக்காமலேயே தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆளுநர் ஆர். என் ரவி வெளிநடப்பு செய்தார். TN Assembly 2026: தமிழ்நாடு சட்டமன்றத்தில்…

அமைச்சர் மெய்யநாதனை புறக்கணிக்கிறாரா அமைச்சர் ரகுபதி?

Posted by - August 26, 2025 0
புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி…

சாதிவாரி கணக்கெடுப்பு: அன்புமணி தலைமையில் சென்னையில் போராட்டம்!

Posted by - December 17, 2025 0
பாமகவின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *