இந்தியாவில் 3 பேருக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி!

194 0

சீனாவில் HMPV வைரஸ் பரவி அச்சத்தை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது இந்தியாவில் 2 குழந்தைகள் உட்பட மூன்று பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.சீனாவில் புதியதாக HMPV என்ற வைரஸ் பரவிவரும் நிலையில், மீண்டும் கொரோனா போன்ற கடும் பாதிப்பை அது ஏற்படுத்திவிடுமோ என மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த தொற்றின் காரணமாக சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் அலைமோதுவதாக கடந்த சில தினங்களாகவே வீடியோக்கள் பகிரப்பட்டு வருவதும் அச்சத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது.இந்த சூழலில் இந்தியாவில் முதல்முறையாக HMPV வைரஸ் தொற்றானது இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எந்தவிதமான வெளிநாட்டு பயணமும் செய்யாத சூழ்நிலையிலும் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HMPV வைரஸ் என்றால் என்ன?

HMPV வைரஸ் என்பது human metapneumo virus என்பதின் சுருக்கம். கொரோனா போலவே மூச்சுக்குழாயை பாதிக்கக்கூடும் ஒரு வகையான வைரஸ் தான் HMPV. தற்போது சீனாவின் வடக்கு பகுதிகளில் அதிகம் பரவி வருகிறது. குறிப்பாக, 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களை இந்த வைரஸ் அதிகமாக தாக்குவதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இது பருவ காலங்களில் வரும் சாதாரண தொற்று போன்றதுதான் என்றும், கொரோனா போல அச்சப்பட தேவையில்லை என மருத்துவர்கள் மற்றும் சீன மருத்துவ ஆய்வாளர்களும் கூறுகின்றனர்.

அதே போல “HMPV வைரஸ் என்பது அசாதாரண வைரஸ் கிடையாது. இது இந்தியாவிலும் ஏற்கெனவே உள்ளது. எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை” என்று Joint Monitoring Group (JMG) மீட்டிங் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் என்ன?

HMPV வைரஸ் தொற்றின் அறிகுறிகளாக, சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுத்திணறல் போன்றவை கூறப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இந்தியாவில் முதல்முறையாக 2 குழந்தைகள் உட்பட மூன்று பேருக்கு HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பெங்களூருவில் 2 குழந்தைகளுக்கு தொற்று..

இந்தியாவிலும் HMPV வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், அது பக்கத்து மாநிலமான கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மூன்றாவது பாதிப்பு, அகமதாபாத்தை சேர்ந்தவருக்கு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த 8 மாத ஆண் குழந்தை மற்றும் 3 மாத பெண் குழந்தை என இரண்டு குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல்நிலையை கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கும் நிலையில், இந்த HMPV வைரஸ் குழந்தைகளை பாதிக்கும் என்பதால் கர்நாடகா சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

Related Post

எடப்பாடி முன்வைத்த நிபந்தனைகள்; ஓகே சொன்ன அமித்ஷா- கூட்டணி மீண்டும் உருவானது இப்படித்தான்!

Posted by - March 26, 2025 0
டெல்லியில் வைத்து சில முக்கிய பேச்சுவார்த்தைகளை முடித்தபிறகு, அதிமுக- பாஜக கூட்டணி முடிவாகியுள்ளதாக சொல்கின்றனர். இபிஎஸ் முன்வைத்த சில நிபந்தனைகளுக்கு பிறகே அதிமுக பாஜக கூட்டணி மீண்டும்…

கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்து ஆசி வழங்கிய கணவன்

Posted by - July 8, 2023 0
பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில்…

எம்.எல்.ஏ. பாலியல் தொல்லையால் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி- கடிதத்தில் பரபரப்பு புகார்

Posted by - June 30, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பால் குளிரூட்டும் நிறுவனத்தில் சேஜல் என்ற பெண் தலைமை நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு முதல்அமைச்சர் சந்திரசேகர ராவ் கட்சியை…

பெயரை கேட்டாலே எச்சில் ஊறுது: ஆந்திராவில் வினோத ஊறுகாய் கிராமம்

Posted by - July 3, 2023 0
திருப்பதி: ஊறுகாய் என்ற வார்த்தையை கேட்கும் போதே நம் வாயில் எச்சில் ஊற தொடங்குகிறது. தென்னிந்திய உணவைப் பொறுத்தவரை காரசாரமான ஊறுகாய் இல்லாமல் நிறைவடைவதில்லை. ஊறுகாய் தயாரிப்பு…

“என்னால புரிஞ்சுக்க முடியல” கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி

Posted by - June 12, 2025 0
கீழடி ஆய்வு அறிக்கையை வெளியிட தங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் விளக்கம் அளித்துள்ளார். கீழடி ஆய்வு அறிக்கைகள் ஏற்கனவே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *